இடுகைகள்

தெலுங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிராமத்தில் பெண் பித்தனான தந்தையைக் கொன்ற கொலைகாரனை தேடும் புலனாய்வு பத்திரிகையாளன்!

படம்
  ட்ரூ தெலுங்கு இப்படத்தில் வில்லனும், நாயகனும் ஒருவரே. உளவியல் அடிப்படையிலான கதை. லண்டனில் பத்திரிகையாளராக வேலை செய்துகொண்டிருக்க கூடிய நாயகன், ஆந்திரத்திற்கு வருகிறார். அவரது அப்பா திடீரென மின்சார தாக்குதலில் இறந்துவிடுகிறார். அதற்காகவே அயல்நாட்டிலிருந்து வருகிறார். அவர் செய்யவேண்டியதை நெருங்கிய நண்பன் செய்து எரியூட்டிவிடுகிறான். இப்போது நாயகன் செய்வதற்கு வேலை ஒன்றுமில்லை. எனவே, அப்பாவின் இறப்பு கொலையா என துப்பறிகிறார். ஆதாரங்களை சேகரிக்கிறார். இறந்துபோன இடத்திற்கு சென்று ஆராய்கிறார். அப்போது அவரை சிலர் விசாரணை செய்யாதே என எச்சரிக்கிறார்கள். யார் அவர்கள் என தேடிப்போகிறார். அப்போது அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கிறது. அவரை மிரட்டிய இளம்பெண், அவரது காதலி என்று கூறுகிறார். கூடவே வீடியோ ஒன்றையும் கொடுக்கிறார். அப்போதுதான் இறந்துபோனவர் பற்றிய இன்னொரு பக்கம் தெரியவருகிறது. மலையாளத்தில் கிஷ்கிந்தா காண்டம் என்ற படம் வந்தது யாருக்கேனும் நினைவிருக்கிறதா? அதேபாணி. நாயகனின் அப்பா கைத்தொழில் மன்னன். காம சூத்திர கண்ணன். வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டியாக அக்குடும்பத்தில் உள்ள பெண்...

நூறு நாட்கள் சாதாரண மனிதராக வாழ முற்படும் பெரும் பணக்கார வாரிசு!

படம்
     புருஷோத்தமுடு தெலுங்கு ராஜ்தருண், ஹாசினி சுதீர் உன்னால் முடியும் தம்பி என்ற தமிழ்படத்தினுடைய கதையைப் போன்றதுதான். அதை தெலுங்கு கரம் மசாலா சேர்த்து எடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல வீணடித்திருக்கிறார்கள். ராஜ்தருண், கார்ப்பரேட் நிறுவனத்துடைய அடுத்த இயக்குநராக வரக்கூடியவர். ஆனால், நிறுவனரின் விதி ஒன்று உள்ளது.அதாவது அடுத்த இயக்குநராக வரக்கூடியவர், நூறு நாட்களுக்கு தன்னுடைய அடையாளங்களை மறைத்து சாதாரண மனிதராக வாழ வேண்டும். அப்படி வாழ்ந்து நூறு நாட்களை முடித்தால் மட்டுமே அவர், நிறுவனத்தின் இயக்குநராக முடியும். ராஜ்தருண் இந்த சோதனையை ஏற்றுக்கொள்கிறார். அதில் வென்றாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி. நிறுவனரின் விதியைப் பற்றி பார்ப்போம். நிறுவனம் லாபகரமாக இயங்குவது முக்கியம். அதேசமயம், லாபத்திற்காக ஒருவர் மனதிலுள்ள கருணையை மனிதர்கள் மீதான மனிதநேயத்தை இழந்துவிடக்கூடாது. அதைத்தான் நிறுவனர், தனது வம்சாவளியிடம் எதிர்பார்க்கிறார். அப்படியான மனம் கொண்டவன்தான் நிறுவனத்தை சரியான பாதையில் நடத்த முடியும் என நம்பி அப்படியான வினோத விதியை ஏற்படுத்துகிறார். படத்தில் ராமு பாத்திரத்தில...

திரைப்பட திருட்டுக்கு எதிராக தனிநபராக போராடும் நாயகன்!

படம்
    நேடு விடுதலா ஆசிப்கான், மௌர்யானி தெலுங்கு திரைப்படங்களை சட்டவிரோதமாக வலைத்தளங்களில் வெளியிடுவதைப் பற்றிய படம். அவ்வளவே. கதை எளிமையானது. அதை சொன்ன விதத்தில் எந்த புதுமையும் இல்லை. அப்படியே நேர்கோட்டு வடிவம். சலிப்பு தட்டுகிற படம். படத்தில் நாயகன், கல்லூரி படிப்பை 99 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முடிக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலையில், அப்பாவின் சிபாரிசின் பெயரில் ஹெச்எம் டிவியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு சினிமா நிகழ்ச்சிப்பிரிவில் வேலை செய்யக் கூறுகிறார்கள். அப்படி வேலை செய்யும்போது, நடக்கும் சம்பவம் ஒன்றால் பாதிக்கப்பட்டு அதை தீர்க்க முயல்கிறார். இறுதியில் என்னானது என்பதே கதை. தெலுங்கு திரைப்படங்களை திருட்டுத்தனமாக சிதைப்பவர்கள், அதன் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறது படம். ஆனால் அப்படி திரைப்படத்திருட்டை காட்டியவர்கள் அதை சுவாரசியமாக சொல்ல மறந்துவிட்டார்கள். இதனால் படம் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிகிறது. படத்தில் வேகமாக நடக்கும் விஷயம், நாயகி நாயகனை காதலிப்பதுதான். நடிகை மௌர்யானி அழகாக இருக்கிறார். ஆனால், அவர் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை...

வளர்த்த அப்பாவைக் காப்பாற்ற, பெற்றெடுத்த அப்பாவிடம் பணத்தை கொள்ளையடிக்கும் மகன்!

படம்
 மா நானா சூப்பர் ஹீரோ சுதீர்பாபு, சாயாஜி ஷிண்டே தெலுங்கு எப்போதுமே ஜிம் பாய் போல உலாவும் சுதீர்பாபு, இம்முறை சண்டைக் காட்சிகளே இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், படத்தில் நெகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியும் இல்லை. அனைத்துமே மிக மேலோட்டமாக உள்ளது. ஒரு தந்தை கையில் காசு இல்லை என்பதால் பிள்ளையை மதர்தெரசா என்ற அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். அந்த குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் வளர்ப்புதந்தை சாயாஜி ஷிண்டே. ஆனால் என்ன துரதிர்ஷ்டமோ, அவர் வாழ்க்கை குழந்தை வந்த பிறகு தலைகீழாகிறது. மனைவி இறக்கிறார். வேலை போகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சியடைய கடன்காரராகிறார். வளர்ப்பு பிள்ளை ஜானியை கரித்துக்கொட்டுகிறார். மகன்தான் அப்பா செய்யும் பித்தலாட்டங்களுக்கு கடன் வாங்கி காசு கட்டுகிறார். ஜானி மெக்கானிக் கடை ஒன்றை வைத்திருக்கிறார். அதை வைத்தே பிழைப்பு ஓடுகிறது. இந்த நிலையில் பெற்ற அப்பா, மகன் ஜானியைத் தேடி வருகிறார். அப்போது ஜானி, அவர் தனது அப்பா என தெரியாமலேயே அவருக்கு கார் ஓட்டுகிறார். சில நூறு மைல்கள் ஒன்றாக பயணிக்கிறார்கள். அந்த சமயம், வளர்த்த அப்பா சீன...

பணத்திற்காக, வைரத்திற்காக, செல்வத்திற்காக விநாயகர் சிலையை துரத்தும் கூட்டம்!

படம்
  கம் கம் கணேசா ஆனந்த் தேவர்கொண்டா, நயன் சரிகா தெலுங்கு மளிகை கடையை கொள்ளையடிக்கும் இரு திருடர்கள், நகைக்கடையை கொள்ளையடித்து வைரம் ஒன்றை லவட்டிக்கொண்டு தப்பிக்கிறார்கள். நகைக்கடை முதலாளியை வேறு சுட்டுவிடுகிறார்கள். அக்கடையின் பையன்தான், வைரத்தை திருடச்சொல்லி ஐடியா கொடுக்கிறான். வைரத்தை திருடியபிறகு, இரு திருடர்களை சுட்டுக்கொன்றுவிடுவது மறைமுக திட்டம். ஆனால், வைரத்தை திருடிய நாயகன், அவனது நண்பன் ஆகிய இருவருக்கும் எதற்கு கையிலுள்ள வைரத்தை கொடுத்துவிட்டு பணத்தை வாங்குவது? நேரடியாக வைரத்தை நாமே விற்றுக்கொள்ளலாமே என நினைக்கிறார்கள். வைரத்தோடு தப்பி ஓடுகிறார்கள். இது ஒரு கதை. இன்னொரு கதை. தேர்தல் நேரம், அதில் போட்டியிடுபவர், நூறு கோடி பணத்தை விநாயகர் சிலையில் வைத்து கடத்துகிறார். எல்லாம் மக்களுக்கு விநியோகம் செய்யத்தான். அந்த சிலை மாறிவிடுகிறது. யார் அதை மாற்றியது என ஆட்களை விட்டு தேடுகிறார். அதில் இரு திருடர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். படத்தில் இயக்குநர் ஒரு லாஜிக்கை மறந்துவிட்டார். அதாவது, ஹைதராபாத் திருடர்களில் ஒருவனான நாயகன், வைரத்தை அரசியல்வாதி தரப்பு கொண்டு வரும் முதல் விநாயகர் சி...

எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி!

படம்
  எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி! மகான்காளி ராஜசேகர், மாதுரிமா இயக்கம் கார்த்திகேயன் இசை சின்னா என்கவுன்டர் சிறப்பு அதிகாரியான மகான்காளி, நாயக், இரு மாஃபியா தலைவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தனது குடும்பத்தை இழக்கிறார். பிறகு தனது குழுவை பலி கொடுக்கிறார். இறுதியாக தன்னையே தியாகம் செய்து எதிரிகளை அழித்தொழிக்கிறார். மேற்சொன்ன அம்சங்கள்தான் படத்தில் காட்டப்படுபவை. ராஜசேகரின் படங்கள் பெரும்பாலும் காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துபவை. நீதிமன்றத்திற்கு நியாயம் பெறும் சமயத்தில் சூது நிகழ்ந்துவிடும். பிறகு என்ன மீண்டும் துப்பாக்கியை தூக்கி நியாயத்தை நிலைநாட்டுவார். இவரது மகான்காளி என்ற இந்தப்படம் பார்த்து முடித்தபிறகு, மனதில் ஒரு அமைதியின்மை, விரக்தி பரவுகிறது. ஒருவகையில் காட்சி ரீதியாக சொல்ல நினைத்த விஷயங்களை கூறிவிட்டார் எனலாம். படத்தின் திரைக்கதையில் நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதாவும் பங்களித்திருக்கிறார். படத்தில் மாதுரிமாவின் பங்கு பாடல்களுக்கு மட்டும்தான். அவரை எப்படி பயன்படுத்துவது தெரியாமல், மானபங்கம் செய்யும் காட்சிகளில் ...

பூச்சிமருந்து கண்டுபிடிக்கும் பேராசிரியர் நகரத்தில் சக்திவாய்ந்தவர்களை நண்பனுக்காக பலியெடுக்கும் கதை!

படம்
 ஆயுதம் தெலுங்கு ராஜசேகர், குர்லின் சோப்ரா, சங்கீதா பேராசிரியர் சித்தார்த்தன், தனது ஆருயிர் நண்பனைக் கொன்ற மூன்று அதிகார பலம் பெற்றவர்களை நேரம் குறித்து சவால்விட்டு கொல்கிறான். கொல்வதில் எப்போதும் போல பெரிய சுவாரசியம் ஏதுமில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக சித்தார்த்தனின் நண்பன் இறந்தான் என்பதே ஒரே சுவாரசியம். டாக்டர் ராஜசேகரின் படம். படம் முழுக்க அவரின் ஆதிக்கம்தான். குர்லின் சோப்ராவுக்கு பக்கத்து ஊர் தலைவரின் மகள் வேடம். நடிப்பிற்கு வாய்ப்பில்லை. காட்சிகளில் கவர்ச்சி காட்டி பாடல்களை பார்க்கும்படி செய்கிறார். சொந்த மாமன் மகள் சங்கீதாவுக்கும் இதே வேலைதான். அடிக்கடி திகைப்புக்கு உள்ளாக்கும்படி கவர்ச்சிப் பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வந்தே மாதரம் ஶ்ரீனிவாஸி்ன் இசை கேட்கும்படி இருக்கிறது. படத்தில் சித்தார்த்தன் பாத்திரம், விவசாய மருந்துப்பொருள் கண்டுபிடிப்பாளர். படத்தின் தொடக்க காட்சியில், தொழிலதிபரின் வீட்டில் அவரது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அவர்கள் கொடூரமானவர்கள் என்பதைக் காட்ட வேலைக்கார சிறுமியை வல்லுறவு செய்கிறார்கள். அதுவும் மூன்றுபேர். எதற்கு இதுமாதிரியான ...

தில் இருப்பவன் இரண்டு மனைவிகளை கட்டியாள்வான்!

படம்
      தில் இருப்பவன் இரண்டு மனைவிகளை கட்டியாள்வான் தில் உன்னோடு தெலுங்கு சாய், ஜாஸ்மின் பாசின், பிரியதர்ஷினி கோஷ் டிராவல்ஸ் வைத்து நடத்தும் சாய், ஐடி பணியாளரான சைத்ரா, வங்கி ஊழியரான சிம்ரன் என இருபெண்களை காதலிக்கிறார். இருவரையும் விட்டுக்கொடுக்காமல் காதலித்து மணம் செய்துகொண்டாரா இல்லையா என்பதே கதை. படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்காதீர்கள். பார்த்தால் படம் உங்களுக்கு பிடிக்காது. படத்தில் நடிகர் சாய் சங்கர் மட்டுமே தேறுகிறார். மற்றபடி வடக்கு தேச நடிகைகளில் பிரியதர்ஷினி கோஷ் மட்டுமே கொஞ்சமேனும் தேறுகிறார். நடிகை ஜாஸ்மி்ன் பாசினுக்கு அழகான உடைகளை அணிந்து நடக்கவிட்டிருக்கிறார்கள். அவர் பல காட்சிகளில் உள்மூலம் வந்தது போல முகத்தை வைத்துக்கொண்டு நிற்கிறார். சாய் டிராவல்ஸ் வைத்து நடத்துகிறார், அவரது அம்மா சீட்டுபிடித்து அதில் சம்பாதித்து வருகிறார். மால் ஒன்றில் சாய், சைத்ராவைப் பார்த்து உடனே காதல் கொள்கிறார். ஆனால், சைத்ராவோ காதலிப்பது போல நடித்து சாயின் பணம் இரண்டு லட்சத்தை தனது ஆடைகளுக்காக செலவழிக்க வைக்கிறார். இளிச்சவாயனான சாய், பெருந்தன்மையாக காதலுக்காக பணத்தை விட்டுக்கொடுத்து...

வங்கதேச தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தப் போராடும் ஊழல் கறைபடிந்த போலீஸ் அதிகாரி

படம்
      டெரர் ஶ்ரீகாந்த்மேகா, நிகிதா, நாசர், பிருதிவிராஜ், கோட்டாசீனிவாசராவ் தெலுங்கு மற்றுமொரு தேசபக்தி படம். இதில் தீவிரவாதிகள் பாக்கிலிருந்து வரவில்லை வங்க தேசத்திலிருந்து வருகிறார்கள். இந்தப்படத்தை இப்போது வெளியிட்டால், வலதுசாரி மதவாத கட்சி ஆளும் ஆந்திரத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் கலவரம் செய்து களிக்கலாம். அந்தளவு வெறுப்பு விஷத்தை மதம் வழியாக கக்கியுள்ள படம். எல்லாமே முஸ்லீம் தீவிரவாதம் என்ற கிளிஷேதான். ஒரே டெம்பிளேட். ஒரே நடைமுறை. பதினைந்து நாட்களில் ஆந்திரத்தின் ஹைடெக் சிட்டியில் மாநில முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. அதை உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்கிறார். இதை நாயகன் விஜய் அறிந்துகொள்கிறான். அவனால் முதல்வர், விழாவிற்கு வரும் மக்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே கதை. நாயகன் விஜய், தீவிரவாத தாக்குதல்களை கண்காணிக்கும் பிரிவில் மாற்றப்பட்டு வேலை செய்கிறான். இதற்கு முன்னர் நன்றாக வேலை செய்தவன். இடையில் அவனது மேலதிகாரி, சில அரசியல் தலைவர்கள் செய்த சூழ்ச்சி, சதியால் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொள்கிறான். பணியில் சற்று தாழ்ந்த நிலை...

மறுவாழ்வுக்கு முயலும் ரௌடியை தடுக்கும் அதிகார சக்திகள்!

படம்
        நகரம் ஶ்ரீகாந்த், ஜெகதிபாபு, காவேரி ஜா இயக்கம் சிசி சீனிவாஸ் இசை சக்ரி தமிழில் தெலுங்குப்பட மோகம் கொண்ட சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தின் ரீமேக். ரைட் என்ற முன்னாள் ரௌடி தனது நண்பன் இறந்தபிறகு திருந்தி வாழ நினைக்கிறார். ஆனால், அதை தடுக்க காசிம்பாய், இன்ஸ்பெக்டர், அரசியல் தலைவர் ஆகியோர் முனைகிறார்கள். இறுதியில் என்னவானது என்பதே கதை. முஸ்லீம் என்பவர் மாஃபியா தலைவராக, கொலை, கொள்ளை, கடத்தலை செய்பவராக இருக்கிறார். இதெல்லாம் எண்பதுகளில் வந்த படத்தின் அடையாளம். அதேதான். பெரிய மாறுபாடு இல்லை. ஒருவரிடம் வேலை செய்பவன், சுயமாக யோசித்து தன் இஷ்டப்படி இருப்பதாக கூறுவது சற்று வினோதமாக உள்ளது. நாயகனுக்கு, காசிம் பாயின் மகனுடன் விரோதம் உருவாகிறது. நாயகன் கொலை செய்யும் உத்தி, திறமை காசிம் பாயின் மகனுக்கு வருவதில்லை. அவனது திறமை சூழ்ச்சி, சதி. அதை நம்புகிறான். நாயகனைப் பொறுத்தவரை தனது குழுவினர் அனைவரையுமே திட்டத்தில் ஈடுபடுத்தி கொலையை கூட்டுத்திட்டமாக மாற்றுகிறான். அனைவருக்கும் கொலையில் முறையான பங்களிப்பு இருக்கிறது. படத்தில் வரும் தொடக்க காட்சி கொலை, உத்வேகம் தரக்கூடியது. ஆனால...

அரசியல் அழுக்குகளை அகற்ற தனிமனிதனாக நாயகன் செய்யும் கோணங்கித்தனமான வீரசாகசங்கள்!

படம்
      துச்சாசனா ஶ்ரீகாந்த், சஞ்சனா கல்ராணி இயக்கம் பொசனி கிருஷ்ண முரளி பொதுஜனம் என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வயசான மீசை வைத்த கோட்டு போட்ட உயர் நடுத்தரவர்க்க மனிதரை லக்‌ஷ்மண் வரைந்திருப்பார் அல்லவா? அதேபோல ஒரு பாத்திரம் உருவாகி வந்து, அரசியலை சீர்படுத்த த த்துபித்து கருத்துகளை கூறுவதுதான் படம். தலையில் தொப்பி, கருப்பு கோட், கருப்பு பேன்ட். இதுதான் நாயகனுடைய ஒரே உடை. நாயகன் பெயர் மகேஷ். இந்தப் பெயர் கூட படத்தில் இரண்டாவது மணிநேரத்தில் பார்வையாளர்களுக்கு தெரிய வருகிறது. முதல் காட்சியைப் பார்ப்போம். காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறார். அடுத்து, மருத்துவமனை சென்று கர்ப்பிணிகளை குழந்தைகளை கருக்கலைப்பு செய்யக்கூறுகிறார். அடுத்து அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இறந்துபோன அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்ப சொல்கிறார். இதனால் காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. மனநல பிரச்னை என தீர்மானித்து நாயகனை மனநல மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அங்கு நாயகன், மருத்துவர், செவிலியர்களை அடித்துப்போட்டுவிட்டு தப்பிக்கிறார். முதல்வரின் மகளைக் கடத்துகிறார். ...

வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்!

படம்
          வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்! ஜீப்ரா சத்யதேவ், பிபிஎஸ், சத்யா, தாலி தனஞ்செயா தெலுங்கு இதுவும் ஒரு வங்கியை ஏமாற்றும் அதிகாரியைப் பற்றிய கதை. அதாவது வங்கிக்குள்ளே இருந்துகொண்டே ஊழலை எளிதாக கண்டுபிடிக்காத வகையில் செய்கிறார். அப்படி செய்யும்போது, மாஃபியா டான் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு ஐந்து கோடியை நான்கு நாட்களில் திரட்டுமாறு மிரட்டப்படுகிறார். அதை நாயகன் எப்படி சமாளித்தார் என்பதே கதை. இயக்குநர் ஈஸ்வர கார்த்திக் நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார். வணிக ரீதியான குத்துப்பாட்டு உண்டு. நாயகி பவானியுடன் அடல்ஸ் ஒன்லி வசனங்களை வைத்தே காதலை சொல்லிவிட்டு அடுத்த விஷயத்திற்கு செல்கிறார்கள். பிரியா அக்கட தேசத்தில் காட்டும் தாராளம் பொறாமையாக உள்ளது. விஷாலுக்கு அம்மாவாக நடித்தே சாதனை செய்துவிட்டவரை என்ன சொல்வது?   நாயகன் சூர்யா, அபார்ட்மென்ட் ஒன்றை காசுக்கு வாங்கி நீரிழிவு நோய் வந்த அம்மாவை குடிவைக்க ஆசைப்படுகிறார். அதேநேரம், இன்னொரு வங்கியில் வேலை செய்யும் காதலியைம் மணக்க நினைக்கிறார். அதற்கு காசு வேண்டுமே... அதற்கு வங்கியில் உள்ள சட்ட ...

நடுத்தர குடும்பத்திற்கு வரும் அடுத்தடுத்த பணப்பிரச்னையால் தவறான வழிக்கு இறங்குகிறார்கள். விளைவு?

படம்
    நாராயணா அண்ட் கோ தெலுங்கு பட்ஜெட் படம். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் பணத்தின் பற்றாக்குறை தெரிகிறது. வங்கியில் காசாளராக உள்ளவர் நாராயணா. கிடைக்கும் வருமானத்தில் மனைவி, இரு பையன்கள் என குடு்ம்பத்தை சமாளித்து வருகிறார். மனைவி பட்டுப்புடவை பைத்தியம். மகன் கிரிக்கெட் சூதாட்ட வெறியன். இளையமகன் செக்ஸ் வெறியன். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்னை வராமல் எப்படி இருக்கும்? நாயகனை நல்லவர் என்று கூறிவிட முடியாது. எப்போதும் குறுக்குவழியில் சம்பாதிக்க நினைக்கத் துடித்துக்கொண்டிருப்பவர். அந்த வகையில் கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டு பத்துலட்சம் கடன்படுகிறார். இத்தனைக்கும் படிப்பு வராமல் வாடகை டாக்சி ஓட்டி வருகிறார். அப்படி வேலை செய்யும் நிலையில் ஓசி பார்ட்டிக்கு சென்று வருகையில் ஒரு பெண்ணோடு கசமுசா செய்துவிடுகிறார். அந்த சமாச்சாரமே அப்பெண் சொல்லித்தான் நாயகனுக்கு தெரிகிறது. அதுவும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதனால் அவரை மணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது. அந்த காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் படம் பெரிதாக முன்னேறவில்லை. நகைச்சுவையும் கை...

மனைவி கருவுற்றதற்காக ஆணுறை நிறுவனத்தின் மீது ஒரு கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரும் கணவன்!

படம்
         ஜானக அய்தே கானக சுகாஸ், சங்கீர்த்தனா விபின், முரளிசர்மா, வெண்ணிலா கிஷோர் சிறிய பட்ஜெட் படம். கதை, அழுத்தமான திரைக்கதையை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே சிறப்பாக பங்களித்துள்ளனர். அமைப்பு ரீதியாகவே மேல், கீழ், பணக்காரன், ஏழை வர்க்க வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டுவிட்டோம். அதுதான் சிக்கலாக மாறி வறுமையிலுள்ள, மத்தியதர வர்க்க ஆட்களை வேட்டையாடுகிறது என படம் பேசியிருக்கிறது. படத்திற்கு பெரிய பலம், சுகாஸின் ஆத்மார்த்தமான நடிப்பும், அவரின் மனைவியாக நடித்துள்ள சங்கீர்த்தனாவின் சூழலுக்கு பொருத்தமான அழுத்தமான உள்ளடங்கிய பாத்திரமும்தான். சுகாஸ், மேஜிக் வாஷ் என்ற வாஷிங்மெஷின் கம்பெனியில் விற்பனை, பழுது பார்ப்பது ஆகிய வேலைகளை செய்யச் சேருகிறார். வார இறுதியில் பாருக்கு சென்று குடிக்கும்போது, அங்கு வெண்ணிலா கிஷோர் அறிமுகமாகிறார். கிஷோர் வக்கீல். சுகாஸ், வாஷிங்மெஷின் விற்பவர். இருவரும் தங்களது வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள், வாழ்க்கைச் செலவுகள்,பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக்கொடுப்பது, மனைவியுடனான உறவு என பல விஷயங்களையும் பகி...