நடுத்தர குடும்பத்திற்கு வரும் அடுத்தடுத்த பணப்பிரச்னையால் தவறான வழிக்கு இறங்குகிறார்கள். விளைவு?

 

 





நாராயணா அண்ட் கோ
தெலுங்கு

பட்ஜெட் படம். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் பணத்தின் பற்றாக்குறை தெரிகிறது. வங்கியில் காசாளராக உள்ளவர் நாராயணா. கிடைக்கும் வருமானத்தில் மனைவி, இரு பையன்கள் என குடு்ம்பத்தை சமாளித்து வருகிறார். மனைவி பட்டுப்புடவை பைத்தியம். மகன் கிரிக்கெட் சூதாட்ட வெறியன். இளையமகன் செக்ஸ் வெறியன். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்னை வராமல் எப்படி இருக்கும்?

நாயகனை நல்லவர் என்று கூறிவிட முடியாது. எப்போதும் குறுக்குவழியில் சம்பாதிக்க நினைக்கத் துடித்துக்கொண்டிருப்பவர். அந்த வகையில் கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டு பத்துலட்சம் கடன்படுகிறார். இத்தனைக்கும் படிப்பு வராமல் வாடகை டாக்சி ஓட்டி வருகிறார். அப்படி வேலை செய்யும் நிலையில் ஓசி பார்ட்டிக்கு சென்று வருகையில் ஒரு பெண்ணோடு கசமுசா செய்துவிடுகிறார். அந்த சமாச்சாரமே அப்பெண் சொல்லித்தான் நாயகனுக்கு தெரிகிறது. அதுவும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதனால் அவரை மணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது. அந்த காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு மேல் படம் பெரிதாக முன்னேறவில்லை. நகைச்சுவையும் கை கொடுக்கவில்லை. நாராயணா மட்டுமே நேர்மையானவராக இருக்கிறார். மற்றவர்கள் வாய்ப்பு கிடைத்தால் எதையும் செய்யலாம் என திரிகிறார்கள். எனவே, படத்தில் போலீஸ் வேலைக்கு கேட்கும் லஞ்சம், அதைக் கட்ட மறுத்து அரசியல்வாதியிடம் ரவுடியாக மாறும் ஒருவன் பாத்திரம் கூட அவல நகைச்சுவை கொண்டதாக மாறுகிறது. போலீஸ் வேலையைப் பெற்றவன், லஞ்சம் கொடுத்துத்தான் போலீஸ் வேலையை வாங்கமுடியும் என்பதை ஏற்றுக்கொள்ள நண்பனை கட்டாயப்படுத்துகிறான். இதுபோல காட்சிகள் அந்த இன்ஸ்பெக்டரின் பாத்திரத்தையே பரிதாபமான வீழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

படத்தின் இறுதியில் சூதாட்டம், ஆபாச வீடியோ, வங்கியில் கையாடிய பணம் என குற்றச்சாட்டுகளை ஒரு குழுவே திட்டமிட்டு செய்கிறது என்று கூறினாலும், அதை நம்ப முடியவில்லை. இங்கு இல்லை என்றாலும் இன்னொரு இடத்தில் நாராயணாவின் இரு மகன்களும் மாட்டிக்கொள்ளவே வாய்ப்பு உள்ளது. சின்ன பட்ஜெட் படம் என்றாலும் சிகரெட், போதைப்பொருள் பயன்பாடு கொண்ட நாயகனின் அத்தைப் பெண் பாத்திரத்தை இயல்பானதாக காட்டுகிறார்கள். தவறான பாதையில் சென்றால்தான் காசு சம்பாதித்து நன்றாக இருக்க முடியும் என அந்த பாத்திரம் கூறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காட்சியில் போதைமருந்தை சாம்பாரில் கலந்து சாப்பிட்டுவிட்டு பாடல் ஒன்று பாடுவது போல காட்சியும் உண்டு. இயக்குநர், படத்தை எந்த அறமதிப்பீடு வைத்து எடுத்தாரோ தெரியவில்லை.

மாட்டிக்கொள்ளாத வரையில் திருட்டு, கொள்ளைகளை செய்யலாம். செல்வாக்குள்ள மனிதர்களின் தொடர்பு இருந்தால் பிரச்னைகளிலிருந்து வெளியே வரலாம் என இரு செய்திகளை திரைப்பட இயக்குநர் கூறுகிறார். 

திரைப்படமா, டிவியில் வரும் சீரியலா என்று தோன்றும் அளவுக்கு இயக்குநர் கடினமாக உழைத்திருக்கிறார். பெரிதாக நினைவுகொள்ள படத்தில் எந்த ஒரு காட்சியுமே இல்லை என்பதுதான் வேதனை. 

பாத்திரங்கள் அனைத்துமே ஸ்டீரியோடைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன. படம் யூட்யூபிலேயே கிடைக்கிறது. படத்தின் நாயகனே, படத்தை காசு கொடுத்து தயாரித்திருக்கிறார்.

கோமாளிமேடை குழு 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://en.wikipedia.org/wiki/Narayana_%2526_Co&ved=2ahUKEwj9qfK6pL-KAxXMkq8BHbW7FNMQFnoECEMQAQ&usg=AOvVaw3wYcYWPaoE8jXeSz1xB3WW

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.youtube.com/watch%3Fv%3DI38bF7-ilK4&ved=2ahUKEwiD2-jdpb-KAxW6iK8BHd4nHcQQh-wKegQIWBAD&usg=AOvVaw3CV5M2cB3UxI_zMCpDCgG2

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்