கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024

 

 

 

Uploading: 438164 of 438164 bytes uploaded.


கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024

மகளின் நோயை விளக்க புத்தகம் எழுதிய தாய்!
டோன்யே ஃபாலுகி எகேசி

நைஜீரியாவைச் சேர்ந்தவர் லோலா சோன்யின். இவர் உய்டா புக்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். கவிஞரான இவர் குழந்தைகளுக்காக ஏழு நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு ஊக்கம் தந்த எழுத்தாளராக டோன்யே என்ற எழுத்தாளரை அடையாளம் காட்டினார். டோன்யே, தனது ஒன்பது வயது மகள் சிமோனுக்காக நூல்களை எழுதி வெளியிட்டவர். அவரது மகளுக்கு டவுன் சிண்ட்ரோம் நோய் உள்ளது. இதுபற்றிய நூல்கள் இல்லாத நிலையில், தாயே மகளுக்காக, மகளின் நோயைப் பற்றிய நூலை எழுதியிருக்கிறார். இவரின் நூல்களை உய்டாபுக்ஸ் வெளியிட்டு வருகிறது.

டோன்யேவின் வீட்டிக்கு வந்த டவுன் சிண்ட்ரோம் சிகிச்சையாளருக்கு, நோயை எப்படி விளக்குவதென தெரியவில்லை. ஏதேனும் நூல்கள் கிடைக்குமா தேடி சோர்ந்து போயிருக்கிறார். உகோ அண்ட் சிம் சிம் - வாட் இஸ் டவுன் சிண்ட்ரோம் என்ற தலைப்பில் இரு பிரதிகளை அச்சிட்டிருக்கிறார். பிறகு, ஐந்தாயிரம் பிரதிகளை அச்சடித்து விற்றிருக்கிறார். பிறகுதான் உய்டோ பதிப்பக உதவி கிடைத்திருக்கிறது.

என்னுடைய குழந்தையின் நிலையை அறிந்த பலரும் மன்னிக்கவும் என்பார்கள். அதெல்லாம் அவசியமில்லை. சிறப்பு குழந்தைகளாக பிறந்தவர்கள் அனைவரும் அவரவர் இயல்பிலேயே அன்பு செலுத்தப்பட வேண்டியவர்கள்தான் என டோன்யே கூறியிருக்கிறார்.

tonye falough ekezie
ouida books


போருக்கு இடையில் விளையாட்டு!

உள்நாட்டுப் போர், மதக்கலவரம் நடக்கும் நாடுகளில் மக்களின் வாழ்க்கையே நசிந்துபோய்விடும். இதில் எங்கே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது? இத்தனைக்கும் எத்தியோப்பியாவில் அரசே உலகநாடுகளின் உதவிகளை தடுத்து வருகிறது. சொந்த நாட்டு பெண்களை கும்பல் வல்லுறவு செய்துவருகிறது. இந்த சூழ்நிலையில் சைக்கிள் வீரரான கெனட் மெக்கோனன், அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க மனவலிமையுடன் இருக்கிறார். மெக்கெல்லே 70 என்ற அணியின் தலைவராக கெனட் உள்ளார்.
genet mekonon

மத ஒடுக்குமுறை, குடும்ப வன்முறைக்கு எதிரான போராட்டம்
இரான் நாட்டில் அரசு, மதம்சார்ந்த சட்டங்களைக் கொண்டு பெண்களை வருத்தி வருகிறது. பர்தா அணியாமல் பெண்கள் பொதுஇடத்தில் உலாவக்கூடாது என்று சட்டம் உள்ளது அதை மீறியதற்காக வழக்குரைஞர் நஸ்ரின் சோட்டுடெஹ் அடித்து உதைக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்றுள்ளது. கணவர் கொடுக்கும் ஆதரவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்க, மரணதண்டனை விதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற முய்ன்று வருகிறார். இரானின மதவாத அரசு, அங்குள்ள போராட்டக்காரர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்துவருகிறது.

பால்புதுமையினருக்கான மருத்துவ சிகிச்சை

உகாண்டாவில் ஓரினச்சேர்க்கை சட்டரீதியாக குற்றமாக்கப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் பால்புதுமையினருக்கு, எய்ட்ஸ் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்றால் என்ன ஆகும்? பிரையன் அலிகானி, பால்புதுமையினருக்கான ஆர்க் வெல்னெஸ் ஹப் என்ற மருத்துவமையத்தை உகாண்டாவின் கம்பாலாவில் நடத்தி வருகிறார். பால்புதுமையினரை குடும்பத்தினர் கைவிட்டுவிடுவதால், அவர்களின் நோய்களுக்கு யாரும் சிகிச்சை செய்வதில்லை. பிரையனின் மையத்திற்கு எதிர்ப்பாக நிறைய மிரட்டல்கள் வந்துள்ளன. இணையத்தில் அவரது மையத்தில் குழந்தைகள் தவறாக நடத்தப்படுகிறார்கள். ஓரினச்சேர்க்கை ஆதரிக்கப்படுகிறது என ஏராளமான வதந்திகளை அரசு ஆதரவாளர்கள், மதவாதிகள் உருவாக்கி வருகிறார்கள். அத்தனையையும் கடந்து பிரையன் பால்புதுமையினருக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதில் உறுதி கொண்டிருக்கிறார்.

நான் பேச வேண்டும்!

சூடானைச் சேர்ந்த நாடியா இஸ்மாயிலின் மகனை ஆர்எஸ்எப் வீரர்கள் தூக்கிலிட்டனர். வீட்டை நெருப்பு வைத்து எரித்தனர். அவரது தோழிகளை வல்லுறவு செய்தனர். ஆனால் நாடியா எதற்கும் மிரண்டு ஒதுங்கிவிடவில்லை. அமைதியாக வீரர்களை உற்றுப்பார்க்க அவரால் முடிந்திருக்கிறது. இன்று அவர் உயிரோடு இருக்கிறாரா என்று தெரியவில்லை.  சாட் எல்லைக்கு தனது ஐந்து மகள்களோடு சென்றுவிடுவதே அவரது திட்டம். அதற்குள் ஆர்எஸ்எப்பின் கொலைப்படைக்கு சிக்கிவிடக்கூடாது. சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள டார்பர் அவரது வீடாக இருந்தது. அங்கு நடந்து வரும் போரால் மக்களது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பலரும் உயிர்பிழைக்கவே போராடி வருகிறார்கள்.

rapid support force, nadia ismail



நன்றி
கார்டியன் ஆசிரியர் குழு



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்