இடுகைகள்

வீரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள முயலும் தீயசக்தி இனக்குழுவின் இளவரசன்!

 அன்ரிவல்டு வில்லன் மங்கா காமிக்ஸ் பேடோ.ஐஓ கொரியாவில் வாழ்பவர் தான் எழுதிய காமிக்ஸில் நுழைந்து துணை பாத்திரமாக மாறுகிறார். அந்த நிலையில் தனக்கு வரும் ஆபத்துகளை முன்னே உணர்கிறார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முனைகிறார். அது சாத்தியமானதா என்பதே கதையின் மையம்.  நாயகன், ஃபர்ஸ்ட் மூன் கல்ட் என்ற இனக்குழுவின் நான்காவது இளவரசன். அதாவது தீயசக்தி இனக்குழு. குடித்துவிட்டு பெண்களை புணர்ந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை லட்சியமாக வாழ்கிறான். திடீரென அவனது உடலுக்குள் புதிய ஆன்மா புகுந்தவுடன் அனைத்தும் மாறுகிறது. எதிர்காலத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பின் வீரன் தாய் என்பவனால் வாளால் வெட்டி கொல்லப்படுவதை அறிகிறான். அந்த சம்பவம் நடக்க பத்து ஆண்டுகளே உள்ளது. அதற்குள் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். நாயகன் உடல் பலவீனமானது. எனவே, அதை வலு செய்ய முயல்கிறான். எதிர்காலம் ஒருவனுக்கு தெரிவது புனைவு கதைக்கு சிறந்த திருப்புமுனை. பிறரை விட புத்திசாலியாக நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆதரவு அணிகளை அமைக்கலாம். எதிரிகளை முன்னமே ஒடுக்கலாம். நட்பை உருவாக்கிக் கொள்ளலாம்.  அந்த வகையில் நாயக...

தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்தவர், தாவோயிச முன்னோடி வீரராக அடையாளம் கருதப்பட்டால்....

படம்
      டீமன் இன் மவுண்ட் குவா 76 அத்தியாயங்கள்--- மங்காகோ.காம் தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்த சியோம் என்பவரை மவுண்ட் குவா இனக்குழுவின் ஹான்வோ தோற்கடித்து சிறைபிடிக்கிறார். பின்னாளில், சியோம் சிறையில் இருக்கிறார் என்பதையே மவுண்ட் குவா இனகுழுவினர் மறந்துவிடுகிறார்கள். சியோம் திரும்ப மவுண்ட் குவா இனக்குழுவின் மூத்ததலைவர் என பொய் சொல்லி ஏமாற்றி, அக்குழுவினரை சக்தி வாய்ந்த இனக்குழுவாக எப்படி மாற்றுகிறார் என்பதே கதை. சியோம், கைதி என்றாலும் தற்காப்புக்கலை கற்றதால் அவர் காயம்பட்டாலும் சாவதில்லை. தற்காப்புக்கலை அழிக்கப்பட்டாலும் அது மீண்டும் உயிர்பெறுகிறது. உடல்பயிற்சி, ஆன்ம ஆற்றல் தியானம்செய்து மீண்டு வருகிறார். வயதான தோற்றம் கூட மெல்ல இளமையாக மாறுகிறது. அதாவது முதிர்ந்தவராக இருந்த தோற்றம் நடுத்தர வயதுகொண்டவராக மாறுகிறது. வயது கூடுவதில்லை. மவுண்ட் குவாவிலுள்ள சிறை, குகையில் உருவாக்கப்பட்டது. மழைபெய்ந்து பாறை அரித்து சிதைவடைகிறது. அதைப் பயன்படுத்தி பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வருகிறார். வந்து பார்த்தால், அவருக்கு உணவு கொண்டு வந்த பையனே எழுபது வயதானவராக மாறியிருக்கிறார். ஆனால்,...

சிறைக்கைதி பழிக்குபழி வாங்கி எதிரிகளை துண்டு துண்டாக வெட்டி எறியும் கதை!

  வூ சாங்  சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப் நாயகன் வூ சாங் ராணுவத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அண்ணன் இறந்துபோய் ஊதுபத்தி ஏற்றிவைத்திருக்கிறது. அண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அண்ணனைக் கொன்றுவிட்டாள் என உண்மை தெரிகிறது. அண்ணியின் தலையை வெட்டிய கொழுந்தன், கள்ளக்காதலனை தேடி விலைமாதுவின் இல்லம் செல்கிறான். சண்டையிட்டு கொன்று இருவரின் தலைகளையும் எடுத்து அண்ணனின் அஞ்சலி செலுத்தும் இடத்தில் போட்டுவிட்டு காவல்துறையில் சரணடைகிறான்.  சிறைக்கு செல்பவனை, ஜெயிலர் மூலம் ஓட்டல் நடத்துபவர் சந்தித்து அவனது உதவியைக்கேட்கிறார். அதாவது, அவரது தம்பி நடத்தும் ஓட்டலை ரவுடி ஒருவன் பிடித்துக்கொள்கிறான். அவனை கொல்ல வேண்டும். இல்லையா அடித்து உதைக்கவேண்டும். சிறையில் உள்ளவனுக்கு ஓட்டல்காரர் ஐந்து நாட்கள் இறைச்சியும் மதுவும் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறார். நாயகன், சாப்பிட்ட சோறுக்கு நியாயம் செய்ய ரவுடியை சந்திக்க செல்கிறான். ரவுடியின் மனைவியை தூக்கி பீப்பாய் தண்ணீரில் தலைகுப்புற வீசுகிறான். ரவுடியை  அடித்து உதைத்து ஓட்டலை மீட்கிறான். என்னா அடி... மது வைத்துள்ள பானைகள் எல்லாம் சிதறுகி...

மறுபிறப்பெடுத்து வந்து தீயசக்தி இனக்குழுவை அழிக்கப் போராடும் இரவு வீரன்! இம்மார்டல் இன்விசிபிள்

படம்
  இம்மார்டல், இன்விசிபிள் மாங்கா காமிக்ஸ் ரீட்மாங்காகாமிக்ஸ்.காம் 150---- தீயசக்தியைச் சேர்ந்த இனக்குழுவில் உள்ள நாயகன், மக்களுக்கு பீதியூட்டிய தற்காப்புக்கலை மாஸ்டர். அனைத்து நாடுகளிலும் பொது எதிரியாக கருதப்பட்டு துரத்தப்படுகிறார்.  பின்னாளில், எதிரிகளால் வெட்டி படுகொலை கொல்லப்படுகிறார். ஆனால் அவர் மனதில் நம் வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியவில்லை என்ற கருத்து இருக்கிறது. இதனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்கிறார். மறுபிறப்பில், சென் என்ற வணிக குடும்பத்தைச் சேர்ந்தவரின் வாரிசாக பிறக்கிறார். அப்பா, வணிகர். அம்மா, புகழ்பெற்ற வாள் வீராங்கனை. அம்மாதான், மகன் கோ உன்னுக்கு அடிப்படை தற்காப்புக்கலை பயிற்சிகளைக் கற்பிக்கிறார். தினசரி மறக்காமல் பயிற்சி செய்யவேண்டும் என கூறுகிறார். அதுவே கோ உன்னுக்கு போதுமானதாக இருக்கிறது. அம்மா சொல்லிக்கொடுத்த கலைகளோடு, அவன் முற்பிறவியில் கற்ற தீயசக்தி கலைகளையும் சேர்த்து பயிற்சி செய்கிறான்.  அவன் அம்மா முற்பிறவியில் எதிரிகளுடன் சண்டையிட்டு இறுதியாக இறந்துபோகிறார். எனவே, அந்த சூழ்நிலையை கோ உன் மாற்ற முயல்கிறான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால்...