இடுகைகள்

ஆனந்த் ரவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலீஸ் இன்ஸ்பெக்டர், ரௌடி, ஓட்டுநர் என மூவருக்கும் இடையிலான ஈகோ மோதல் - கோர மீனு - ஆனந்த் ரவி, கிஷோரி, ஷத்ரு, ஹரீஷ் உத்தமன்

படம்
  கோரமீனு தெலுங்கு ஷத்ரு, ஹரீஷ் உத்தமன், ஆனந்த் ரவி கதை, திரைக்கதை, வசனம் ஆனந்த் ரவி இயக்கம் ஶ்ரீபதி   விசாகப்பட்டினத்தில் உள்ள மீனவர்களின் ஊர். அங்கு மீசை ராஜூ என்பவர் பணி மாறுதலில் வருகிறார். வந்த உடனே அவரை புகாரின் பேரில் அழைக்கிற சிலர், பலவந்தமாக அவரின் அடையாளமான மீசையை மழித்து எடுக்கிறார்கள். இதனால் மீசை ராஜூ தனது வெளியுலக   அடையாளமான மீசையை இழந்து ஊனமாகிறார். அவரின் ஈகோ காயப்படுகிறது. இதற்கு காரணம் யார் என தேடும்போது, அங்குள்ள மீன் வணிகம் செய்யும் அதன் வழியாக போதைப்பொருட்களை கடத்தும் தாதாவான கருணா கிடைக்கிறார். அவரைக் குறி வைக்கிறார். உண்மையில் கருணா யார், அவர் ஏன் போலீஸ் அதிகாரி ராஜூவை மீசையை மழித்து அவமானப்படுத்துகிறார் என்பதற்கான விடை படத்தைப் பார்க்கும்போது கிடைக்கிறது. தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். ஆனால், படம் எடுக்கப்பட்டது மலையாளப் படத்தின் இயல்பில் என்பதால் நிதானமாகவே பார்வையாளர்ளுக்கு யார், எதற்கு, ஏன், எப்படி என்பதற்கான விடைகள் கிடைக்கிறது. மீனவ மக்கள் வாழும் சேரிப்பகுதி. அங்குள்ள மக்களைப் பயன்படுத்தி ஏமாற்றி தொழில் செய்யும் இருவர். அப்பா, மகன். அப்பா,