இடுகைகள்

சிறுநீரகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடைக்கானலை உருக்குலைத்து வரும் பாதரசக் கசிவு!

படம்
  எழுத்தாளர் அமீர் சாகுல் கொடைக்கானலில் கசியும் பாதரசம் ஆங்கிலோ டச்சு   நிறுவனம் யுனிலீவர், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இந்திய நிறுவனம், இந்துஸ்தான் யுனிலீவர். இதன் தொழிற்சாலை கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு தொடங்கி தெர்மோகோல் தயாரிப்பு யுனிலீவரின் தொழிற்சாலையில் நடந்து வருகிறது. இங்கு சரியான பாதுகாப்பு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக தொழிற்சாலையில் வேலை செய்த இருபத்தெட்டு பேர் உயிரிழந்தனர். 2001ஆம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பும், உள்ளூர் மக்களும் இணைந்து போராடியதால் தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிற்சாலை மூடப்பட்டாலும் கசிந்த பாதரசத்தால் இயற்கை வளமும் கெட்டது. ஊழியர்களும் நரம்பு நோய்கள், சிறுநீரக பாதிப்பு ஆகிய சிக்கல்களுக்கு உள்ளாகினர். இதற்கு என்ன பதில் என சூழல் அமைப்புகளும், ஊழியர்களும் போராட 2016ஆம் ஆண்டு, யுனி லீவர் நிறுவனம் வேலை செய்த 591 முன்னாள் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக அறிவித்தது. இந்த விவகாரம் பற்றி முன்னாள் பத்திரிகையாளரும், க்ரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான அமீர் சாகுல் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஹெவி மெட்டல் ஹவ் எ குள

சிறுநீரக அமைப்பு எப்படி செயல்படுகிறது? - அறியாத புதிய தகவல்கள்

படம்
            சிறுநீர் அமைப்பு எப்படி செயல்படுகிறது ? உடலில் அறுபது சதவீதம் நீர் உள்ளது . அப்படி நீர் இருப்பதுதான் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது . ரீனல் அமைப்புதான் உடலில் உள்ள நீரின் தன்மையைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது . இந்த அமைப்புதான் சரியான அளவில் சிறுநீரை வெளியேற்றி உடலிலுள்ள நீரின் அளவை கண்காணிக்கிறது . இதில் பாதிப்பு ஏற்படும்போது மனிதர்களுக்கு கழிவுநீர் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து உள்ளது . சிறுநீர்ப்பையில்தான் பெரும்பாலான கழிவுநீர் தேக்கப்பட்டிருக்கும் . இதன் கொள்ளளவு எட்டும்போது சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் தோன்றும் . இதன் வேகம் அதிகரிக்கும்போதுதான் முட்டுச்சந்து என்றால் உடனே ஜிப்பை இறக்கி ஆக்ரோஷத்தை தணிக்கிறோம் . சிறுநீரகத்தில் நெப்ரான்கள் உள்ளன . இவற்றில் உள்ள ஃபில்டர்தான் , குளோமெருலஸ் . இதில் ரத்த நாளங்களின் வலையமைப்பு உள்ளது . இவற்றில் உள்ள சுவர் போன்ற அமைப்பு , கழிவுகளை வடிகட்டுகிறது . இப்படி வடிகட்டிய நீர் ட்யூபில் என்ற இடத்திற்கு செல்கிறது . சோடியம் , பொட்டாசியம் , புரதம் ஆகியவை உறிஞ்சப்பட்டு கழிவ

அதிக நீரை குடித்தால் இறக்கும் வாய்ப்புள்ளதா?

படம்
        more water       பதில் சொல்லுங்க ப்ரோ அதிக நீரை குடித்தால் இறக்கும் வாய்ப்புள்ளதா ? அதிகளவு நீரை குடிக்கும்போது உடலிலுள்ள எலக்ட்ரோலைட்ஸ்களின் அளவு அதன் எல்லைகளைக் கடந்து பாதிப்படையும் . நீரிலுள்ள சோடியம் உடலின் ரத்த த்தில் அதிகரிப்பது ஆபத்தானது . இதற்கு ஹைப்போநாட்ரிமியா என்று பெயர் . நீர் அதிகம் உட்கொள்ளப்பட்டால் வயிற்றுப்போக்கு , இதயம் செயலிழப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும் . மேலும் உடலிலுள்ள இயல்பான திரவச்சுரப்புகள் பாதிப்படையும் . நீர் பொதுவாக சிறுநீர் , வியர்வை வழியாக வெளியேற்றப்படுகிறது . அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று ஜெனிபர் ஸ்ட்ரேஞ் என்ற இருபத்தெட்டு வயது பெண்மணி இறந்து கிடந்தார் . மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவான இவர் , ரேடியோவில் அறிவிக்கப்பட்ட போட்டியில் பங்கேற்று , அதிகளவு நீரைக் குடித்துவிட்டு சிறுநீர் கழிக்காமல் இருந்தார் . பொதுவாக நீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் இறப்புகள் குறைவு . அப்படியே ஏற்பட்டாலும் அது பல்வேறு டிவி ரேடியோ போட்டிகள் , பெற்றோர் குழந்தைகளை தண்டிப்பது , மாரத்தான் போட்டிகள் என்பதால் ஏற்படுகின்றன . நீரை அதிகள

சிலர் பேசுவதை மட்டும் விரும்பிக் கேட்க காரணம் இதுதான்!

படம்
புத்தக விமர்சனம் உளவியலும் உண்மையும் நூல் ஆசிரியர், பல்வேறு கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் உளவியலாளராக பணியாற்றியுள்ளார். இதில் தான் சந்தித்த விஷயங்களைப் பற்றி ஆழமாக பேசுகிறார். தந்தைக்கு சிறுநீரகம் கெட்டுவிட, மகன் அவருக்கு சிறுநீரகத்தை தானம் தர முன்வருகிறார். சோதனையில் மகனுடைய சிறுநீரகம் பொருந்துகிறது. இதன் விளைவாக, அவருடைய உயிரியல் ரீதியான மகன் அவரில்லை என்ற உண்மையும் வெளிவருகிறது.இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். செய்தி சொல் கிளியே! சிலர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கிறோம். சிலர் சொல்ல வந்தால் வேறு பக்கம் கிளம்பி ஓடிவிடுகிறோம். அதற்கு என்ன காரணம்? அதைத்தான் இந்த நூல் கூறுகிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை பிரெக்ஸிட் முதற்கொண்டு எடுத்து வைத்து கூறுகிறார்கள். படித்து பார்த்து வாழ்க்கையில் முயற்சித்து பாருங்கள். உதவக்கூடும். பழக்கங்கள் எனும் சங்கிலி! எப்படி பழக்கங்களுக்குள் நமது மனம் சிக்குகிறது? அதிலிருந்து வெளியே வருவது எப்படி? வாழ்க்கையை உருப்படியாக வாழச்செய்யும் பழக்கங்கள் எவை என ஆசிரியர் நம் கைபிடி