இடுகைகள்

பாலியல் அத்துமீறல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வில்லனின் வீட்டிற்கு சென்று கடத்தி வரப்பட்ட காதலியை கல்யாணம் செய்யும் தைரிய நாயகன்!

படம்
                சீதாராமுலு கல்யாணம் லங்காலோ நிதின் , ஹன்சிகா , சுமன் , அலி , பிரம்மானந்தம் கல்லூரியில் படிக்கும் நிதின் , அவரை சிகரெட் பிடிக்காதே என்று சொல்லும் நாயகியால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறார் . காதல் செய்தவுடனே கல்யாணம் நடந்துவிட்டால் படத்தை குறும்படமாகவே முடிக்கவேண்டியது வரும் என காதலியின் அப்பா கிராமத்தில் பெரிய ரவுடி , அவருக்கு எதிரியாக ஒரு ரவுடிக்கூட்டம் இதற்கு இடையில் மாட்டிக்கொள்ளும் காதலர்கள் என கதையைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் . படத்தில் உருப்படியான விஷயம் பிரம்மானந்தம் மட்டுமே . அவரின் காமெடி மட்டுமே சற்று ஆறுதலாக உள்ளது . சுமன் பெரிய ரவுடி . சுருட்டி பிடித்தபடி அவர் நிதினை கேட்பது , உன்னால் என் மகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா , அப்படி முடிந்தால் பெண்ணைக் கட்டித்தருகிறேன் என்கிறார் . உடனே நிதினும் முதுகில் மாட்டியுள்ள ரோஷன் பேக்கோடு வருங்கால மாமனாரின் ஆட்கள் நால்வரை உதைத்து மலைப்பாதையில் உருட்டிவிடுகிறார் . பிறகுதான் சுமன் மனம் மாறி சூப்பர் செலக்‌ஷன் என தைரியம்கொள்கிறார் . ஆனால் கர்மா ஈஸ் பூமராங் அல்லவா ? எதிரிகள் மாப்பி

மக்களின் அபிமானத்தை சம்பாதித்த ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்! - கடிதங்கள்

படம்
  வெற்றிகரமான முதல்வர் நவீன் பட்நாயக் அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? பிரன்ட்லைன் இதழுக்கு சந்தாகட்டி வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வங்க எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரியின் நேர்காணலை சிறப்பாக எடுத்து எழுதியியுள்ளனர். ரிக்சா ஓட்டிக் கொண்டிருந்தவர் இப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஆகிவிட்டார். வாழ வழியில்லாத நிலையில் மாநில அரசின் விருது எதற்கு என துணிச்சலாக சொல்லியிருக்கிறார் மனிதர்.  நவீன் பட்நாயக் பற்றிய கட்டுரையும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஒடிஷாவில் மத்திய அரசின் திட்டங்களை கைவிட்டுவிட்டு மாநில அரசின் திட்டங்களை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களின் அபிமானத்தை சம்பாதித்துள்ளார் என்பதை கட்டுரையில் ஏராளமான தகவல்களை கொண்டு பேசியிருந்தார்கள். இப்போது ஞாயிறு மட்டும் தி இந்து ஆங்கில நாளிதழை வாங்கிக்கொண்டிருக்கிறேன்.  நிறைய முக்கியமான விஷயங்களை நடுப்பக்க கட்டுரைகளில் எழுதுகிறார்கள். மொழிபெயர்த்து எழுதுவதை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இக்கட்டுரைகளை வாசிப்பதும், தமிழில் மொழிபெயர்ப்பதும் உதவும் என நம்புகிறேன்.  அண்மையில் வடபழனிக்கு சென்று