இடுகைகள்

போட்டோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகரிக்குமா?

படம்
பதில் சொல்லுங்க ப்ரோ? அருங்காட்சியகங்களில் ஃபிளாஷ் போட்டு போட்டோ எடுப்பதை எதற்கு தடை செய்திருக்கிறார்கள்? இந்தியாவில் எப்படியோ, வெளிநாடுகளில் ஃபிளாஷ் போட்டு புகைப்படம் எடுக்க கூடாது என்பதை உறுதியான விதியாக வைத்திருக்கிறார்கள். இதன்மூலம்,  அருங்காட்சியகங்களிலுள்ள தொன்மையான ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒவியங்களிலுள்ள வண்ணங்கள் வெளிச்சத்துடன் வினைபுரியும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளன. இவை ஃபிளாஷில் வரும் ஒளியோடு சேர்ந்து வினைபுரிவதால் ஓவியம் அழிய வாய்ப்புள்ளது. எனவே, புகைப்படம் எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக ஓவியம் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டை, புகைப்படங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள்.  டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகமாகுமா? இன்று டிவி மட்டுமல்லாது இணையம் கூட வேகமாக ஸ்ட்ரீமிங் சேவைகளை தந்து வருகிறது. சன்டிவி, விஜய், கலர்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றை ப் பார்த்தால் ஒரு மணிநேரத்திற்கு 56 கிராம் கார்பன் உருவாகிறது என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படியே தினசரி பார்த்தால் ஆண்டுக்கு 41 கி.கி அளவுக்கு கார்பன் வெளியாகிறது என கொள்ளலாம்.  சயின்ஸ் போகஸ்  

உங்கள் போனுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்கள் இதோ......2020

படம்
          சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் ஸ்னாப்சீட் ஆண்ட்ராய்டுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் இது . போட்டோ எப்படி எடுத்தாலும் இதில் உள்ள ஏராளமான டூல்களை பயன்படுத்தி ரவிவர்மாக ஓவியம் போல அழகாக மாற்றமுடியும் . புகைப்படத்தை தவறுதலாக அழித்துவிட்டாலும் கூட அதனைத் திரும்ப பெற முடியும் . கூகுளின் தயாரிப்பு என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆப்பை திறந்தவுடனே பிரிவியூ பேனல் அழகாக விரிகிறது . செய்யும் மாறுதல்களை உடனுக்குடன் பார்த்துக் கொள்ளலாம் . விஸ்கோ இந்த ஆப் தனித்திறமையான புகைப்படக்காரர்களுக்கானது . இதன் சிறப்பம்சம் , ரெசிப்பீஸ் என்ற அம்சம் . எதிர்காலத்தில் புகைப்படத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களுக்காக அதனை சேமித்து வைக்க முடியும் . இலவச ஆப்பில் குறைந்த சமாச்சாரங்களைத்தான் சோதிக்க முடியும் . புகைப்பட எடிட்டிங் ஆப் என்றாலும் , இதனை சமூக வலைத்தளம் போல பயன்படுத்தால் . இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் படங்களைப் பார்க்கலாம் . நண்பர்களுக்கு நீங்கள் செய்த படங்களை பகிரலாம் . இதில் உடனே மாஸ்டர் ஆக முடியாது . அதிக நேரம் செலவழித்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து ப

சூப்பர் ஆப்ஸ் 2020

படம்
Pixelmator  Photo நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை, செல்ஃபீக்களை அழகாக்க வேண்டாமா அதற்காகவே இந்த ஆப். எப்படி கண்ணாடியை தேய்த்து ஷைனிங் செய்கிறார்களோ அதேபோல உங்கள் புகைப்படத்தை வேறு லெவலில் மாற்றுகிறது இந்த ஆப். pixaloop இந்த ஆப் மூலம் இமேஜ் அனிமேஷன் சென்டருக்கு டஃப் கொடுக்கும் அமெச்சூர் அனிமேஷன்களை உருவாக்கலாம். எப்படி ப்ரோ என்கிறீர்களா? இதில் படங்களை கொடுத்தால் அதனை அனிமேஷன் செய்து தரும். Duetcam பிரபலத்தை இன்டர்வியூ எடுக்கிறீர்கள். அப்போது அவரின் முகபாவம் பதிவாகும். ஆனால் நீங்கள்தான் அந்த இன்டர்வியூவை எடுத்தீர்கள் என்று என்ன அத்தாட்சி இருக்கிறது? அதற்குத்தான் டூயட்கேமை பயன்படுத்துங்கள் என்கிறோம். இதில் போனிலுள்ள இரு கேமராக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதன்மூலம் உங்கள் ரியாக்ஷன்கள் பிரபலத்தின் ஆவ்.. தருணங்களையும் எடிட் செய்து மகிழலாம். Spectre மிஷ்கின் போல லாங் ஷாட்டில் ஓடிவரும் உங்கள் நண்பரை புகைப்படமாக எடுக்க இந்த ஆப் உதவும். ஏதாவது ஜாலி டிரிப் சென்றால் அங்குள்ள சுற்றுலா தளங்களை புகைப்படங்களாக எடுக்க இந்த ஆப் சூப்பராக உதவும். நன்றி - ஸ்டஃப் இதழ்