இடுகைகள்

ஆலன்சேரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆலன்சேரி தம்பிரான்மார்களின் நட்பும், பிணக்கும்! - ஆலன்சேரி தம்பிராக்கள் - நெடுமுடி வேணு, திலீப்

படம்
  ஆலன்சேரி தம்பிராக்கள் - மலையாளம் - திலீப் ஆலன்சேரி தம்பிராக்கள் -மலையாளம் - திலீப் ஆலன்சேரி தம்பிராக்கள் திலீப், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன் ஆலன்சேரி என்ற கிராமம். அங்கு சட்டங்களைப் போடுவது இரண்டு தம்பிரான்மார்கள். ஒருவர் சங்கீதம் பாடும் பாகவதர். அடுத்து, களறி சொல்லிக் கொடுக்கும் சாத்தன் குருக்கள். இருவருமே நண்பர்கள். ஒருவர் சொன்னால் இன்னொருவர் சரி என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் புரிந்துணர்வும் நெருக்கமும் இருக்கிறது. இருவரும் தங்களுக்குத் தெரிந்த சங்கீதம், களறி பயட்டு என இரண்டையும்   தங்களது மகன்களுக்கு மட்டும் சொல்லித் தந்து வருகின்றனர். இவர்களின் நட்பை பார்த்து ஊரே வியக்கிறது. ஊர் முழுக்க தம்பிரான்மார்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. அதேசமயம். பாகவதருக்கு பிரச்னை என்றால் சாத்தன் குருக்கள் களறி கற்ற ஆட்களோடு அங்கு வந்து அடி பின்னிவிடுவார். அதேபோல் சாத்தன் குருக்களுக்கு சிக்கல் என்றால் பாகவதர் அங்கு செல்வார். தனித்தனி வீடுகளில் தத்தம் மகன்களோடு வாழ்ந்து வந்தாலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத நட்பு தம்பிரான்களுக்குள் உள்ளது. அதை குலைப்பது போல ஒரு பெண்ணொருத