இடுகைகள்

தேயிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டீ இஸம் - அகாகுரா காகுஸோ - மின்னூல் வெளியீடு - விரைவில்.....

படம்
  விரைவில்...

சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஹாங்காங்!

படம்
  இங்கிலாந்து மிகவும் தந்திரமான காரிய க்கார நாடு. தனது நலனுக்காக பிற நாடுகளை அழித்து மக்களைக் கொல்லவும் அது தயங்கியதில்லை. இந்தியாவை காலனி நாடாக்கிய தன்மையில் இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை இந்த வகையில் சேர்க்கலாம்.  இங்கிலாந்து சீனாவில் இருந்து பீங்கான், தேயிலை, பட்டு ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தது. இதற்கு தொகையாக வெள்ளியை வழங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சீனர்களின் பொருட்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க வெள்ளி இல்லை. என்ன செய்வது? எனவே தந்திரமாக யோசித்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், வணிகர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதுதான், போதைப்பொருட்களை சீனாவில் கள்ளத்தனமாக விற்பது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து வெள்ளி வாங்கி அதனை இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுத்துவிடுவது....  இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை சீன பேரரசர் அறிந்து தடுத்தார். இதனால் ஓபியம் தொடர்பான போரை சீனாவும் இங்கிலாந்தும் நடத்தின. இந்த வகையில், 1839, 1856 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடைபெற்றன. சீனா படைக்கு அப்போது பெரிய படைகளும் கடற்படைகளும் இல்லை.எனவே இரும

இந்தியமக்களில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்க காரணம்!- நீர் பற்றாக்குறை - பிட்ஸ்

படம்
  நீர் பற்றாக்குறை - பிட்ஸ் 1. உலகெங்கும் 84.4 கோடி மக்கள்  சுத்தமான நீரைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையை விட இருமடங்கு அதிகம்.  2. உலகில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையால், 2 பில்லியன் மக்கள் மாசுபட்ட நீரைக் குடிநீராக அருந்தி வருகின்றனர்.  3. மாசுபாடான குடிநீரால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, போலியோ ஆகிய நோய்கள் பரவுகின்றன. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு பிரச்னையால் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் பலியாகின்றனர்.  4. 2025ஆம் ஆண்டு,  உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திப்பதோடு, அவர்களின் வாழிடத்திலுள்ள நிலத்தடி நீர்மட்டமும் குறையும் என்று ஐ.நா. ஆய்வு குறிப்பிடுகிறது.  5.வளரும் நாடுகளில் மருத்துவச் சேவைகளைச் செய்வதற்கு தடையாக 22 சதவீதம் நீர்ப்பற்றாக்குறை உள்ளது. இந்நாடுகளில் சுகாதாரப் பணிகள் 21 சதவீதம் பற்றாக்குறையாகவும், கழிவுகளைக் கையாள்வதில் திறனின்மை 22 சதவீதமாகவும் உள்ளது.  6. நமது உலகைச்சுற்றி 70 சதவீத நீர்ப்பரப்பு உள்ளது. அதில், 2.5 சதவீத நீர் மட்டுமே நன்னீர். மீதி முழுக்க கடல்நீர்தான். பூமியிலுள்ள 1 சதவீத நீரை மட்டுமே ந

தேநீர் தயாரிக்கப்படுவதில்தான் சிறப்பு இருக்கிறது!

படம்
டீ குடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் மிகவும் பிரபலம். கோடிப்பேருக்கு மேல் அங்கு டீ குடித்து மகிழ்கின்றனர்.முன்னர் இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவிலும டீ குடிப்பதற்கு பெரும் மவுசு உண்டு. டீயில் பெரும்பாலும் தேயிலையையின் துவர்ப்புக்காக அதனை மேட்ச் செய்த பால் ஊற்றி குடிக்கின்றனர். இன்று பிளாக் டீ குடிப்பது ஃபேஷனாகி வருகிறது. இதோடு ஸ்பெஷல் டீ, லெமன் டீ என நிறைய வகைகள் உருவாகிவிட்டன. குறிப்பாக சாய்கிங் போன்ற ஸ்டார்ட் அப்கள் டீயின் தரத்தையும் விலையையும் காபிக்கு நிகராக கொண்டு வந்து விட்டனர். டீயில் என்ன முக்கியம்? நன்கு உலர வைக்கப்பட்டு அரைத்த தேயிலை. அதில்தான் வொய்ட் டீ, பிளாக் டீ, ஊலங் டீ, புவெர் டீ ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவது டஸ்ட் டீ ரகம். இது தேயிலையில் மூன்றாவது தரம். முதல் தரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் டீ, பால் சேர்க்காமல் அருந்தப்படுகிறது. கிழக்காசியாவில் க்ரீன் மிகவும் பிரபலமாக உள்ளது. கேமெலியா சினென்சிஸ் என்ற தாவரத்திலிருந்து தேயிலை பறிக்கப்பட்டு டீ தயாரிக்கப்படுகிறது. இ