இடுகைகள்

டெக்- ஆல்ட் நியூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்லவர் யார்? கெட்டவர் யார்?- ஆல்ட் நியூஸ் ஆய்வு

படம்
முத்தாரம் Mini உங்களுடைய இணையதளத்தில் குஜராத் உண்மைகள் என்ற தலைப்பில் ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியிருந்தீர்கள் . இதனை உருவாக்கியதற்கான தூண்டுதல்களை கூறுங்கள் . 2014   ஆம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் அரசு வளர்ச்சி குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் சரியா , தவறா என அறியமுடியாதபடி பரப்பப்பட்டன . சிங்கப்பூர் படத்தை குஜராத் என பலரும் வளர்ச்சி பெயரில் பகிர்ந்தனர் . 2016 செப்டம்பரில் போலித்தகவல்களை கண்டறிய வலைதளத்தை தொடங்கினோம் . போலிச்செய்திகளை எப்படி புரிந்துகொள்கிறீர்கள் ? ஒரு செய்தியை சரியா , தவறா என புரிந்துகொள்ள முடியாமல் போவது முதல்வகை . இரண்டாவது , உண்மை பாதி , பொய் பாதி என இணைந்துள்ளது என தெரிந்தே பரப்பப்படுவது . பர்தா அணியாததால் கொளுத்தப்பட்ட ஹைதராபாத் பெண் என்ற கேப்ஷனோடு காட்டப்படும் புகைப்படம் உண்மை . ஆனால் கேப்ஷன் பொய் . போலிச்செய்திகளை பரப்பும் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது சரியான தீர்வா ? நிச்சயம் இல்லை . தவறு என்றால் அரசு உடனடியாக சட்டத்தை பயன்படுத்தி நிறுவனங்களை மூடுகிறது .   செய்தி பகிர்வு செயலிகள் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து வருகின்றன .