காட்டுப்பூனையின் கண்களை வைத்து என்னென்ன விஷயங்களை கண்டுபிடிக்கலாம் தெரியுமா?


 காட்டுப்பூனையின் கண்கள்
விலங்குகளின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவை என்ன நிறத்தில் இருக்கும்? பெரும்பாலும் கருப்பு, பழுப்பு, மஞ்சள். ஆனால், சில விலங்குகளின் கண்களில் வானவில் போல ஏராளமான நிறங்கள் உள்ளன. அவற்றை அடையாளம் கண்ட ஆய்வாளர்கள் அதை ஆராயத் தொடங்கியுள்ளனர். கண்களிலுள்ள நிறத்தை வைத்து என்ன ஆராய்ச்சி என நினைக்கலாம். ஆனால், ஆராய்ச்சியாளர்கள், கண்களின் நிறத்தை வைத்தே அதன் இனம், வாழுமிடம், உரோமங்களின் வகை, வேட்டையாடும் விதம் என ஏராளமான தகவல்களை அறிய முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இயுமெலனின் என்ற நிறமி கருப்பு, பழுப்பு நிற கண்களின் நிறத்திற்கு காரணம். பியோமெலனின் என்ற நிறமி, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது. இந்த நிறங்களில் பச்சை, நீலம், சாம்பல் ஆகியவற்றின் பங்கும் உண்டு. சோதனை செய்த காட்டுப்பூனை கண்களின் நிறத்தை தகவல்தளத்தில் சேமித்துவிட்டு, அதை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
பனிப்பிரதேசத்தில் வாழும் வண்டிகளை இழுக்கும் நாயினமான ஹஸ்கின் நாயினத்தின் கண்களை பார்த்திருப்பீர்கள். நீலக்கற்கள் போல ஒளிர்பவை. அதுபோல கண்கள் வேண்டும் என மனிதர்களே விரும்புவார்கள். உண்மையில், இதுபோல கண்களின் நிறம் பாலினத் தேர்வில் கூட பங்கு வகிக்கிறதா என ஆய்வாளர்கள் யோசிக்கிறார்கள். பரிணாம வளர்ச்சி, சூழலியல் சார்ந்து விலங்குகளின் கண்களின் நிறம் முக்கியமானது.




In a Cat’s Eye
Why do wild cats have
so many eye colors?
சயின்டிபிக் அமெரிக்கன் - ஜேன் வோல்ப்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்