ஓமியோபதி மருத்துவ முறையை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் வரலாறு!

 

 


 

மருந்து = நஞ்சு
ஓமியோபதி மருத்துவமுறை

1755ஆம் ஆண்டு, ஓமியோபதியை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் பிறந்தார். பிறந்த தேதி ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி. இவரது தந்தை பீங்கானில் பல்வேறு ஓவியங்களை தீட்டும் திறமை கொண்ட கலைஞர். புனித ஆஃப்ரா என்ற பள்ளியில் செவ்வியல், நவீன மொழிகளைக் கற்றார். ஆங்கில மருத்துவமுறையை உருவாக்கியவரான ஹிப்போகிரேடஸின் மருத்துவ விளக்க நூல்களை படித்தார். அவரின் மருத்துவ தத்துவத்தை வைத்தே ஓமியோபதியின் மருத்துவத்தை உருவாக்கினார். ஒத்தது ஒத்ததை குணமாக்கும் என்பதே கொள்கை, ஒத்தது அல்லது எதிரானது நோயைத் தீர்க்கும் என ஹிப்போகிரேடஸ் கூறினார்.

1775ஆம் ஆண்டு சாமுவேல், மருத்துவப் படிப்பை படிக்கத் தொடங்கினார். அவருக்கு வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் பிளென்சிஸ் ஆதர்சமாக இருந்தார். அந்த காலத்தில் பிளென்சிஸ், மருத்துவத்தில் பல்வேறு சாதனைகளை செய்தவர். 1779ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம்தேதி, சாமுவேல் மருத்துவப்பட்டம் வென்றார். எர்லாங்கன் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டத்தை வழங்கியது. 1781ஆம் ஆண்டு சாமுவேல் மாவட்ட மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஹென்ரிட் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இத்திருமணம் வழியாக பொருளாதார ரீதியான பாதுகாப்பு கிடைத்தது.

நோய்களை தீர்க்க சாமுவேல் காட்டிய அக்கறையும், கவனமும் அவருக்கு சிக்கலையே உருவாக்கியது. நிறைய நோயாளிகளுக்கு நோயை விட மருந்துகளைக் கொடுத்தபிறகு வந்த பின்விளைவுகள் அதிகரித்தன. இதற்கு நோயின் அறிகுறிகளை சரியாக புரிந்துகொள்ளாமல் மருந்துகளை வழங்கியதே காரணமாகும். இதற்கு மருத்துவர் சாமுவேல் மட்டுமே காரணம் அல்ல. அன்று இருந்த மருத்துவ குறிப்புகள், மருந்துகள் சரியான முறையில் சோதிக்கப்படவில்லை. எனவே, ஒருவருக்கு வேலை செய்த மருந்து இன்னொருவருக்கு வேலை செய்யவில்லை. இதனால், விரக்தியுற்ற சாமுவேல், மருத்துவ வேலையைக் கூட சிலகாலம் ஒத்திவைத்துவிட்டு படிப்பதிலும் அறிவியல் பற்றி எழுதுவதிலும் கவனம் செலுத்தினார்.

1825ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்து விஷயங்களை அடிப்படையாக வைத்து ஓமியோபதி முறையை உருவாக்கினார். 1810ஆம் ஆண்டு, ஆர்கனான் ஆஃப் மெடிசின் என்ற ஓமியோபதியின் அடிப்படை நூலை எழுதினார். 1880ஆம் ஆண்டு வரை ஓமியோபதி பல்வேறு நாடுகளில் சிறப்பாக வளர்ச்சி பெற்றது. பிறகு தடை ஏற்பட, அலோபதி எனும் ஆங்கில மருத்துவமுறை வேகமாக மேற்கு நாடுகளில் வளர்ந்தது. ஓமியோபதி, அலோபதி என இரு முறைகளுக்கு்ம இடையே எப்போதுமே போட்டி உண்டு.

சாமுவேல் நோய்களுக்கு கொடுக்கும் மருந்தை குறைவாகவே கொடுத்தார். அவருடைய நோக்கம், உடலில் வந்த நோய் இயல்பாகவே இயற்கையாகவே குணமாகச்செய்யவேண்டும் என்பதுதான். வலிந்து நோயை விரட்டுவதல்ல. மருந்துகளை நீர்த்துபோனதுபோல செய்து நோயாளிகளுக்கு கொடுத்தார். அடிப்படையில் நஞ்சுக்களிலிருந்து ஓமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவற்றை நீர்த்துபோகச்செய்து மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆர்கனான் நூல், ஓமியோபதி கடைபிடிக்கும் கொள்கைகளை விளக்கியது. அடுத்து நீண்டகால தோய்கள் பற்றி நூலொன்றை எழுதினார். அதில், நோய்களுக்கு சிறிய அளவில் மருந்துகளைக் கொடுத்தால் போதுமானது என்று உறுதிபடக் கூறியிருந்தார். ஓமியோபதியை யாரும் நம்வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்றெல்லாம் மிரட்டவில்லை. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்