பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை




 
பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை
பேரிடர் காலங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை திருட பலரும் முயல்வார்கள். மனிதர்கள் இயல்பாகவே மோசமானவர்கள்தான். சட்டங்கள் இருப்பதால், அவர்கள் வேறு வழியின்றி தண்டனைக்கு பயந்து நல்லவர்களாக நடிக்கிறார்கள். நான் இப்போது சொல்வது குரூரமாக இருந்தாலும் ஆபத்தான காலங்களில் மனிதர்களின் மனம் மோசமானது என்பதை நிரூபிக்க நிறைய உதாரணங்கள் உண்டு

பேரிடர் அல்லது மதக்கலவரம் உருவாக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு செய்வது இயல்பானது. இதை தடுக்க வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை செய்து கொடுப்பு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. கதவுகளை பூட்டுவது, பாதுகாப்பு கேமரா, அலாரம் எழுப்புவது, கதவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக பூட்டுவது என நிறைய வசதிகள் வந்துவிட்டன.

தற்காப்புக்காக ஒருவரை தாக்குவது என்றாலும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாறுபட்டிருக்கும். அதை புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆயுதங்களை கையாளும் சூழலில்,  முறையாக பயிற்சி எடுப்பது நல்லது. இந்தியாவில் இந்துத்துவ மதவாத குழுக்கள் ஆளும் மாநிலங்களில் வசதியான பாதுகாப்பு வசதிகள் கொண்ட நடிகர்களே கூட கத்திக்குத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டால் ஆபத்து புரிந்துவிடும்.

வெடிமருந்து, பாதுகாப்பு, துப்பாக்கி என முதலீடு செய்யும்போது உணவைப் பற்றியும் கவலைப்படுவது முக்கியம். அல்லாதபோது பசியில் அல்லாட நேரிடும்.

பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளைக் கூட நிறுவி எதிரிகளை அச்சுறுத்த சிலர் முயல்கிறார்கள். இது ஓரளவுக்கு பயன் கொடுக்கும்தான். ஆனால் முழுமையாக நம்ப முடியாது. இன்றைக்கு ஒருவரின் இயக்கத்தை அடையாளம் கண்டு வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் வந்துவிட்டன. இவை இரவு நேரத்தில் கொள்ளையர்களை அடையாளம் காண உதவும்.

2

குறிப்பிட்ட தெருவில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருப்பது நல்லது. அப்போதுதான், அந்த தெருவில் அல்லாதவர்கள் அங்கு சுற்றினால் எளிதாக தகவல் தெரிந்துகொண்டு கொள்ளை, கொலை, வல்லுறவு ஆகியவற்றை அறியலாம். அதற்கேற்ப பிறரும் கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியும். இதற்கு உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை அறிந்துகொள்ளவேண்டும். குறிப்பிட்ட பிரச்னைகளை பற்றி பேசவேண்டும். தொடர்பு எண்களை வாங்கிக்கொண்டால் ஆபத்தான சூழலில் உதவியாக இருக்கும்.

எப்போதோ வரும் கொள்ளையர்களை விட வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் பெரிய கொள்ளையர்கள். நிறைய பொருட்களை பார்க்காதபோது திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள். செய்த உதவிகளுக்கு பதிலுக்கு ஒரு உதவி கூட செய்யவில்லை என்று புகார்கள் உள்ளதா? அப்படியான இடத்தில் நீங்கள் இருக்கவேண்டியதில்லை. என்றைக்கோ வரும் கொள்ளையர்களை விட ஆபத்து அதிகம் ஏற்படுத்தும் நபர்கள் அருகிலேயே இருக்கிறார்கள்.

முடிந்தவரை நட்பு என்றுதான் இந்த வகையில் கூறமுடியும். அதுவும் கூட பொது நன்மைக்காகத்தான். இன்றைக்கு மதவாத நாடான இந்தியாவில், குடியிருப்புகளில் முஸ்லீம்களை விடக்கூடாது என புறக்கணிக்கும் அச்சுறுத்தும் பிரசாரங்களை செய்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகளை தீவிரவாதி தேசதுரோகி என கூறி தனிமைப்படுத்துவதும் நடக்கிறது. இப்படியான நாட்டில் தேசப்பற்று எப்படி வளரும், அன்பு செய்வது எப்படி?

பிறரை அனுமதிக்காத வகையில் உள்ள மூடிய குடியிருப்புகளில் ஆபத்து உள்ளிருப்பவர்களால் கூட நடைபெறலாம். ஏதாகிலும் சரி, குடியிருப்பு, தெரு என அங்கே உள்ளே வருபவர்களை முறையாக ஆவணப்படுத்த வேண்டும். முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என தீண்டாமையை கடைபிடிப்பது நல்லது அல்ல. சைவ, அசைவ கோஷங்களும் பயனற்றது. உயிரையும், சொத்துக்களையும் பாதுகாப்பது மட்டுமே முக்கியம்.

முடிந்தளவு தற்காப்புக்கலை ஏதேனும் கற்பது நல்லது. கொலை, கொள்ளைக்காரர்களை எதிர்கொள்ள நாமே தயாராக இருப்பது நல்லது. மதவாதம், மூடநம்பிக்கை கொண்ட இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுபோல தாக்குதல்களை எதிர்கொள்ள பெண்களும் அவர்களின் உறவுகளும் தயாராக இருத்தல் நல்லது.
பிரெப்பர் சர்வைவல் கைட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்