ஆடுகளின் வலியை அறிந்து சிகிச்சையை பரிந்துரைக்கும் ஏஐ மாடல்!


 ஆடுகளின் வலியை அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கும் ஏஐ

உடனே அந்த ஏஐ பெயரைக் கேட்காதீர்கள். ஆங்கில கட்டுரையை எழுதிய லூசி டு கூட கடைசிவரைக்கும் ஏஐ மாடலின் பெயரை கூறவே இல்லை. பொதுவாக மனிதர்களே மருத்துவரிடம் தன் உடல்நிலை பற்றிய அறிகுறிகளை நோயை முழுமையாக கூற மாட்டார்கள். அதற்கென சிறப்புக்காரணம் ஏதுமில்லை. சொல்ல மாட்டார்கள். கொஞ்சம் பேசினால் மட்டுமே சில அறிகுறிகளையாவது சொல்வார்கள். தோல் நோய் என்றால் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், பிற நோய்களை பற்றி நோயாளி சொன்னால்தானே தெரியும்.

ஆடுமாடுகளின் நோய்களை புகைப்படம் அல்லது காணொலி மூலமே மருத்துவர்கள் அடையாளம் கண்டு சிகிச்சை செய்து வந்தனர். இப்போது ஏஐ காலம் அல்லவா? விலங்குகளின் வலியை மனிதர்கள் முன்முடிவுகளோடு அணுகி சிகிச்சை செய்ய முற்படுகிறார்கள் என புளோரிடா கால்நடை அறிவியலாளர் லுடோவிகா சியாவேக்சினி கருத்து கூறுகிறார். இவர்தான் மேற்சொன்ன ஆய்வை செய்தவர். நாற்பது ஆடுகளை தேர்ந்தெடுத்து, அதை படம்பிடித்தனர். தங்களுடைய மருத்துவ அறிவை கணினிக்கு புகட்டி படங்களில் உள்ள ஆடுகளுக்கு நோய் உள்ளது, அல்லாதது என பிரித்திருக்கிறார்கள். இப்படித்தான் ஏஐ மாடல் உருவாகி உள்ளது. இவர் உருவாக்கியுள்ளதைப் போலவே பூனைக்கென தனி ஏஐ மாடலை ஏற்கெனவே உருவாக்கியுள்ளனர்.

இப்போதைக்கு ஆட்டின் நோயை கண்டுபிடிப்பதில் கணினி மாடல் எண்பது சதவீதம் துல்லியம் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மருத்துவர் இல்லாத சூழலில் கூட ஆடுகளின் நோயை எளிதாக அறிந்து தீர்வுகளை பெற முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மூலம்
Facing Pain
AI characterizes distress
in goat expressions
சயின்டிபிக் அமெரிக்கன் - லூசி டு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்