இடுகைகள்

தெரு விளக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

.பசுமை இயக்க முன்னோடிகள்-தெரு விளக்கு

பசுமை இயக்க முன்னோடிகள் இந்தியாவின் நான்கு திசைகளிலிருந்தும் இயற்கையைப் பாதுகாக்க திரண்டெழுந்த அர்ப்பணிப்பு கரங்களைக் கொண்ட தெரு விளக்கு போன்ற மனிதர்களில் சிலரை அறிமுகம் செய்து வைப்பது நமது கடமை. பிலிண்டா ரைட்     கானுயிர்களைக் காப்பதில் எப்போதும் முன்னிற்பவர். புலிகளை வேட்டையாடி, அதன் பல் ,தோல், நகம், எலும்புகள் என அனைத்தையும் கள்ள வணிகம் செய்யும் கொடியவர்களை எதிர்த்த இவரது போராட்டம் தீரமானது.  இந்திய கானுயிர் சங்கத்தை உருவாக்கி அரும்சேவை செய்தவரும் இவர்தான். 1994 ல் புலியின் உறுப்புகளை கள்ள வணிகம் செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் சங்கம் தொடங்கப்பட்டது. அரசு அதிகாரிகள், வனத்துறை ஆகியோருடன் தொடர்ந்து உரையாடி புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க சட்டங்கள் கொண்டு வர சங்கத்தின் மூலம் பாடுபட்டார். பிட்டு ஷகல்     சுற்றுச்சூழல் செய்திகளை மக்கள் படித்தறியும் வகையில் சான்ட்சுரி என்ற மாத இதழையும், கிளப் இதழையும் 1980 ல் தொடங்கியவர். The Ecologist Asia  மனிதவுரிமைக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவுமான இதழ் அவரது பங்களிப்பே. இயற்கை பாதுகாப்பு குறித்த முப்பது விவரணப் படங்களை எடுத்து தூர்தர்ஷனில் வ