சிறப்பு காவல்துறை அதிகாரிக்கும், மூளை அறுவை சிகிச்சை வல்லுநருக்குமான மோதல் காதல் கதை!
யூ ஆர் மை ஹீரோ சீனதொடர் யூட்யூப் நாற்பது எபிசோடுகள் சிறப்பு போலீஸ் அதிகாரிக்கும், மூளை அறுவை சிகிச்சை மருத்துவருக்கும் ஏற்படும் மோதல், காதல், இன்ன பிற பிரச்னைகள். குறிப்பாக, வேலை காரணமாக காதலிக்க நேரமில்லையே என காட்சிகளிலேயே கூறிவிட்டார்கள். பொதுவாக, இப்படியான தொடர்களில் இறுதிப்பகுதி தேசியவாதம் பேசுவதாக முடியும். கல்யாணத்தை ஒத்தி வைப்பது, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்வது என்றெல்லாம் ஊதுபத்தி கொளுத்துவார்கள். இந்தக்கதை அப்படியெல்லாம் செல்லவில்லை என்பது பெரிய ஆறுதல். நகைக்கடை ஒன்றில் கொள்ளை நடக்கிறது. அதில் மூளை அறுவை சிகிச்சை மருத்துவர் சிக்கிக்கொள்கிறார். அவரை சிறப்பு போலீஸ் அதிகாரி காப்பாற்றுகிறார். முகத்தை மாஸ்க் போட்டு மறைத்திருக்கிறார். இதனால் நாயகி, மீகாவுக்கு அவரது முகம் தெரியவில்லை. உயிரைக்காப்பாற்றிய வீரருக்கு நன்றிக்கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார். அத்தோடு சரி. நாயகியை காப்பாற்றியவர்தான் ஷிங் கெலாய் எனும் நாயகன். நாயகனுக்கு பிடிவாதம், அதீத தன்னம்பிக்கை, வேகமான செயல்பாடுகள் உண்டு. விதிகள் அதிக பிடிப்பு கொண்ட இரக்கமற்ற அதிகாரி. அவரோடு ஒப்பிடும்போத...