மூளை என்பது பிளாஸ்டிக்கை போன்றதா?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மூளையை பிளாஸ்டிக் என்று கூறுவது ஏன்? மூளை, ஒருவர் பெறும் அனுபவங்களைப் பொறுத்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இதன் காரணமாக அதை பிளாஸ்டிக் என்று கூறுகிறார்கள் மூளை இளம் வயதில் எப்படி மாறுகிறது? பிறக்கும்போது குழந்தைக்கு மூளை 350 கிராமாக உள்ளது. பின்னர், வயது வந்தவராக மாறும்போது அதன் எடை 1450 கிராம்களாக மாறுகிறது. பிறக்கும்போது மூளையில் நியூரான்களின் தொடர்பு முழுமை பெற்றிருப்பதில்லை. வயது வந்தோராக மாறும்போதுதான் அதன் முழுமையாள வளர்ச்சி நிறைவுபெறுகிறது. மூளையை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி? மதுபானம் அருந்தக்கூடாது. அடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. உடற்பயிற்சியை தினசரி செய்யவேண்டும். அடிப்படையாக மூளையில் டிமென்சியா போன்ற நோய்கள் வரக்கூடாது என்றால், அங்கு ரத்தவோட்டம் சீராக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்கும்போது பல்வேறு மொழிகளைக் கற்பது எளிது. நடப்பது, பேசுவது, சமூக வாழ்க்கையை புரிந்துகொள்வது, எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றை செய்யமுடியும். இதையெல்லாம் தொடக்கத்தில் க...