குப்பையிலிருந்து மின்சாரம் - கேரளாவின் முயற்சி வெல்ல வாய்ப்புண்டா?

 




திடக்கழிவு மேலாண்மை 



குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் லாபம், சவால்கள் என்னென்ன?

கேரளா மாநில அரசு, கோழிக்கோட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.  இரண்டு ஆண்டுகளில் ஆறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நாட்டில் நூற்றுக்கும் மேலான குப்பையிலிருந்து மின்சாரம் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றில் இன்றும் செயல்பாட்டில் இருப்பவை மிகச்சிலதான்.

என்ன பயன்?

மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மையைச் செய்வதோடு, மாநில மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கிறது.

இந்தியாவில் உள்ள திடக்கழிவுகளில் 60 சதவீத கழிவுகள் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடியவை. அதாவது தானாகவே மட்க கூடியவை. 30 சதவீத கழிவுகள் உலர் கழிவுகளாக நிலத்தில் தேங்குகின்றன. 3 சதவீத கழிவுகளான கடினமான பிளாஸ்டிக், உலோகம், இ கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யமுடியும். மீதமுள்ள பிளாஸ்டிக், துணிகள் எல்லாமே மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளவை. இந்த கழிவுகளைப் பயன்படுத்தி வெப்பத்தை உருவாக்கி அதன் வழியாக மின்சாரம் பெறலாம். இம்முறையில் குப்பைகள் மக்களுக்கு பயனாகின்றன. அவை  வெறுமனே நிலத்தில் தேங்கி கழிவு மேலாண்மையில் பிரச்னையை ஏற்படுத்துகின்றன.

கோழிக்கோட்டில் வாழும் மக்கள்தொகை 6.3 லட்சம். இவர்கள் தினசரி 300 டன் கழிவுகளை உருவாக்குகிறார்கள். இதில் 205 டன் கழிவு மட்க கூடியது. மீதியுள்ள 95 சதவீத கழிவுகள் மட்காதவை.

சவால்கள்

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு நல்ல விஷயம் என்றாலும், அதற்கான செயல்முறைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு முக்கியம். பெறும் கழிவுகளின் தரம், அதன் ஈரப்பதம், கையாளும் நிலையங்களின் திறன் முக்கியம். மின்சாரமாக மாற்றும் நிலையங்கள் சரியாக செயல்படாதபோது கழிவுகளில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் கிடைக்கும் மின்திறன் பாதிக்கப்படும். அரசு,முனிசிபாலிட்டி, மக்கள் ஆகியோரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது சாத்தியமாகும். மட்காத குப்பைகளை சரியாக பிரித்து மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்புவது அவசியம். இதில் பிழை நேர்ந்தால்  திட்டம் வெற்றி பெறாது.  மின்சார வாரியம்,, மின்சார தயாரிப்பு நிலையம், மின்சாரத்தை பெறும் நிறுவனம் ஆகியவை சரியாக ஒப்பந்தமிட்டு செயல்பட்டால் மட்டுமே விஷயங்கள் வெற்றி பெறும்.

 

 

 

புஷ்கரா எஸ்.வி

இந்து ஆங்கிலம் 22.3.23

 image - pixabay

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்