பெண்களை மட்டுமே குறிவைத்து கொன்ற யார்க்‌ஷையர் ரிப்பர் - பீட்டர்

 









பீட்டர், பதிமூன்று கொலைகளை  செய்தவர். இவரது மனைவி, ஸிஸோபெரெனியா நோயாளி. பல்வேறு மனநல சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றார். ஐந்து ஆண்டுகளில் பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய கொலையாளி. யார்க்‌ஷையர் ரிப்பர் என்பதுதான் பீட்டரின் அடைமொழி.

பீட்டர் ஏன் கொலையாளி ஆனார், கொலை செய்யத் தொடங்கினார் என்பதைக் கண்டறிவது கடினமான ஒன்று. பிணக்கூராய்வு அறையில் வேலை செய்தவர், பிணங்களை நேசிப்பவராக உடலுறவு கொள்பவராக மாறிப்போனார். இதை பேச்சு வாக்கில் சக நண்பர்களிடம் சொன்னார். ஆனால் அதை எல்லோரும் ஜோக்காக எடுத்துக்கொண்டனர். ஆனால் பீட்டர், தான் செய்வதை சீரியசாக எடுத்துக்கொண்டுதான் செய்தார். அவரின் முக்கிய பொழுதுபோக்கே,  மெழுகுச்சிலை அருங்காட்சியத்திற்கு சென்று சிலைகளைப் பார்த்து ரசிப்பதுதான். விலைமாதுக்களிடம் உடலுறவு கொள்வது பற்றிய பயம் பீட்டரின் மனதில் இருந்தது.

1975ஆம் ஆண்டு இரண்டில் ஒன்று என கொலைக்கு தயாரானார். இரண்டு பெண்கள் சிக்கினார்கள். சுத்தியால் அடித்து கபாலத்தை உடைத்தார்தான். ஆனாலும் காவல்துறை கண்டுபிடித்து உயிரைக் காப்பாற்றிவிட்டது. 1976ஆம் ஆண்டு, அடுத்த அட்டெம்ப்டை வெற்றிகரமாக செய்து முடித்தார். விலைமாது வில்மாவை அடித்து மண்டையைப் பிளிந்து கொன்றார். அதிகாரப்பூர்வ கொலை இதுவே.

கொலைக்கான அட்டவணையெல்லாம் பீட்டரிடம் கிடையாது. மனதில் தோன்றினால் உடனே சுத்தியலை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவார். அப்படித்தான் வீட்டு வேலை செய்யும் எமிலி ஜாக்சனைக் கொன்றார். இவரது உடலில் ஐம்பது கத்திக்குத்துகளை காவல்துறை விரல் விட்டு எண்ணி குறித்துக்கொண்டது. அடுத்து பதிமூன்று மாதங்கள் அமைதியாக இருந்த பீட்டர், இரண்டு விலைமாதுக்களைக் கொன்று உடலை சேதப்படுத்தினார்.

 ஜீன் ஜோர்டன் என்ற பெண்ணை பதினொரு முறை சுத்தியால் அடித்து மண்டை எலும்புகளை சுக்கு சுக்காக உடைத்தார். பிறகு இருபத்து நான்கு முறை கத்தியால் குத்தினார். இப்படித்தான் சித்திரவதை நிறைந்ததாக அவரது இறப்பு இருந்தது. கொலைகளை பீட்டர் சாமர்த்தியமாக செய்யும்போது, அவரது பெயரில் அதாவது ரிப்பர் என்ற பெயரில் காவல்துறைக்கு நிறைய கடிதங்கள் வந்தன. ஆனால், அவை எல்லாமே அதிகாரிகளை திசை திருப்பும் தகவல்களைக் கொண்டிருந்தன. இதனால் அதிகாரிகள் பீட்டரின் குற்றங்களை விசாரிக்கும் நேரம் குறைந்துபோனது. அந்த நேரத்தில் அவர் நிறைய பெண்களை கொன்றார். மர்ம கடிதங்களை எழுதியவரை காவல்துறையினர் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

1981ஆம் ஆண்டு விலைமாது ஒருவரை துரத்திச் செல்ல முயன்ற பீட்டரை சிசிடிவி மூலம் பிடித்தனர். தன் குற்றங்களை பீட்டர் உடனே ஒப்புக்கொண்டார். பதிமூன்று கொலைகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்தனர். பிறகு பீட்டரை சிறைக்கு மாற்றினர். அங்கு கொலைக்காக தண்டனை பெற்று வந்த கைதி, கத்தியை எடுத்து பீட்டரின் இரு கண்களில் குத்திவிட்டார். இந்த சம்பவத்தால் அவரின் இடதுகண்ணில் பார்வைத்திறன் போய்விட்டது. பொதுமக்கள் பீட்டரின் மேல் அதிக கோபம் கொண்டிருந்தனர். இதனால் அவருக்கு மரணப்ப்படுக்கையில் இருந்த அப்பாவைப் பார்ப்பதற்கான அனுமதி கூட மறுக்கப்பட்டது.

 படம்  - பின்டிரெஸ்ட் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்