பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி
வீரேந்திர திவாரி |
வீரேந்திர
திவாரி
தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா
திவாரி, மகாராஷ்டிராவில்
பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க
அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம்.
உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி
கூறுங்கள்.
நாட்டின்
காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன்
அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு
செய்கிறது.
அடுத்து,
புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த
அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம்.
உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில்
எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன?
கடந்த 50
ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள்
புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள்.
புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள்
என்னென்ன?
சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, பாதுகாப்பதற்கான
நிதியின்மை, மனிதர்கள் – புலி மோதல் ஆகியவற்றால் புலிகளை க் காப்பாற்றுவது கடினமாகி
வருகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள மனிதர்களிடமிருந்து புலிகளை பாதுகாப்பதே
சவாலாக உள்ளது.
சுந்தரவன புலிகளை காப்பதற்கு என்ன திட்டங்களை
வைத்திருக்கிறீர்கள்?
சுந்தரவன
புலிகள், மாங்குரோவ் காடுகளில் வாழ்வதற்கான இயல்பை பெற்றுள்ளன. காலநிலை மாற்றத்தால்
அவை வாழ்வதற்கான நிலப்பரப்பை அளிப்பது கடினமாகி வருகிறது. இந்த இன புலிகளை பாதுகாக்க
இந்தியா, வங்கதேசத்தின் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஆதரவு தேவையாக உள்ளது.
மகாராஷ்டிரத்தின் விதர்பாவில் முதல்
புலிகளுக்கான டெலிமெட்டரி டேட்டா காரிடர் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பயன் என்ன?
காரிடார்
37,066,94 சதுர கிலோமீட்டர் தொலைவில் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமைந்துள்ளது. இதன்
காரணமாக, புலிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து ஆய்வு செய்யலாம். புலிகளின் பாதுகாப்பு
பற்றிய துல்லியமான முடிவுகளை எடுக்க ஏராளமான தகவல்கள் தேவைப்படுகின்றன. இந்த காரிடார்
மூலம் நமக்கு ஆய்வுத் தகவல்கள் கிடைக்கும்.
காடுகள் அழிந்து வருகின்றன. அதோடு சேர்ந்து
புலிகளும் கொல்லப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த ஆண்டில் 105 புலிகள்
கொல்லப்பட்டுள்ளன. இதற்கு விலங்கு – மனிதர்கள் மோதலே முக்கிய காரணமாக உள்ளது.
நீங்கள் கூறியது
உண்மை. மகாராஷ்டிராவில் 105 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 28 புலிகள் உயிரிழந்துள்ளன.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் ஏற்படும் உயிரிழப்புகளால்தான் மக்கள் இறந்தனர்.
இதை கட்டுப்படுத்த முயன்று வருகிறோம்.
மக்கள் தொகை
அதிகரிப்பது, காடுகளின் பரப்பு குறைவது என இரண்டு விஷயங்களுக்கும் தொடர்பு உள்ளது. உடைந்த பல்வேறு காடுகளின் பரப்புகளுக்கு விலங்குகள்
சுதந்திரமாக செல்ல அனுமதிப்பது முதல் தீர்வு. அடுத்து, மனிதர்கள் சூழலுக்கு இசைவாக
வாழத்தொடங்குவதோடு காடுகளில் வாழ்வாதாரத்திற்கான பொருட்களை நாடாமல் இருப்பது அடுத்த
தீர்வு.
புலிகளை பிற நாடுகளுக்கு வழங்கும் அரசின்
முடிவு பற்றி கேள்விப்பட்டோம்?
கம்போடியாவுக்கு
புலிகளை வழங்குவது பற்றிய ஆலோசனை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை.
ஷிவானி ஆசாத்
டைம்ஸ் ஆஃப்
இந்தியா
----------------------------------------------
image -pinterest
https://www.wii.gov.in/
கருத்துகள்
கருத்துரையிடுக