இந்து சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழாதபோது ஆழமான வலியை மனதில் உணர்ந்தவர் அம்பேத்கர் - அசோக் கோபால்
அம்பேத்கர் சுயசரிதை- நவாயனா |
இடதுபுறம் - ரவிக்குமார், திருமாவளவன், நவாயனா பதிப்பகத் தலைவர் |
அசோக் கோபால்,
வரலாற்று பட்டதாரி. 2003ஆம் ஆண்டு முதல் பி.ஆர். அம்பேத்கரைப் பற்றி படித்து ஆய்வு
செய்து வருகிறார். அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் செயல்பாடு, காந்தியுடனான
உறவு என பல்வேறு விஷயங்களைப் பற்றி மராத்தி, ஆங்கில மொழியில் இருந்து படித்து வருகிறார்.
இதன் விளைவாக நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. அதைப்பற்றி அவரிடம் பேசினோம். இதுபற்றி எ பார்ட் அபார்ட் – தி லைஃப் அண்ட் தாட் ஆஃப் பி.ஆர்.
அம்பேத்கர் என்ற நூலை எழுதியுள்ளார். நூலை நவாயனா பிரசுரித்துள்ளது.
நெடுநாட்களுக்குப் பிறகு, அம்பேத்கரின்
வாழ்க்கை பற்றிய முழுமையான நூல் வெளிவந்துள்ளது. நூலை எழுதுவதற்கான பணியைப் பற்றி கூறுங்கள்.
2003ஆம் ஆண்டு,
அம்பேத்கரைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.
நான் மிக குறைவாக அறிந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிவதே நோக்கம். இந்த ஆய்வுப்
பணியில் அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டதைவிட, அவரே தன்னைப் பற்றி கூறியதை
விட, நிறைய விஷயங்களை அறிய முடிந்தது.
குறிப்பாக,
அம்பேத்கர் புத்தமதத்தை ஏன் தழுவுகிறார் என்பதைக் கூறும் இடம். இளமைக்காலம் தொட்டே
மதம் பற்றிய அவரது ஆழமான கருத்துகள், ஜனநாயகத்தன்மை பற்றிய அவரது அடிப்படைக் கருத்துகள்
முக்கியமானவை.
நான் அடையாளம் கண்ட இந்த இடைவெளிகளைப் பற்றி எனது
நண்பர்களிடம் பேசினேன். அவர்கள்தான் இதைப்பற்றி நூலாக எழுதச் சொல்லி கூறினார்கள். அதிர்ஷ்டவசமாக
நான் எழுதியவற்றை படித்து பதிப்பிக்க பதிப்பாளர் எனக்கு இருந்தார். இதனால் எனது சிந்தனை
மெல்ல நிஜமானது.
மராத்தியில் 12 தொகுதிகளாக எழுதப்பட்ட
நூல்களை அம்பேத்கர் சுயசரிதையை எழுத பயன்படுத்தியிருக்கிறீர்கள். அதிலிருந்து உங்களுக்கு
என்ன விஷயங்கள் கிடைத்தன?
நிறைய விஷயங்கள் கிடைத்தன. அம்பேத்கரின் மராத்தி
பேச்சு, எழுத்துகளிலிருந்து அவர் மதம் பற்றி கொண்டிருந்த கருத்துகளை அறிய முடிந்தது.அம்பேத்கர்,
நம்மைச் சுற்றிலும் உள்ள நம் மீது திணிக்கப்பட்ட
புராணங்கள் பற்றிய தனக்கேயுரிய அழுத்தமான கருத்துகளைக் கொண்டிருந்தார். அவர், முழுமையான
இந்தியாவைப் பற்றி கவலைப்பட்ட உண்மையான தேசியவாதி, அம்பேத்கர். இந்து சமூகத்தில் அடிப்படை
மாற்றங்கள் நிகழும் என நம்பி, அதற்கென கடுமையாகப்
போராடிய போராளி.
தான், நினைத்த
மாற்றங்கள் நடக்காதபோது ஆழ்மனதில் கடுமையான வலியையும், ஏமாற்றத்தையும் உணர்ந்தவர் என்பதை
உங்களால் அறிய முடியும். அம்பேத்கரின் மராத்தி எழுத்துகள் அதற்கு உதவின.
அம்பேத்கரின் வாழ்க்கையை ஆய்வு செய்து
படிக்கும்போது என்ன இடைவெளிகளை அடையாளம் கண்டீர்கள்?
நிறைய விஷயங்களை
நான் அடையாளம் கண்டேன். அம்பேத்கரின் தங்கை பற்றி பலரும் குறைவாகவே அறிந்திருப்பார்கள்.
அம்பேத்கர் அமெரிக்காவில் படித்தார் என்பதை அறிந்தவர்கள் கூட அங்கு அவர் சந்தித்த மனிதர்கள்
பற்றி அதிகம் பேசியிருக்க மாட்டார்கள்.
அவரின் தினசரி
செயல்பாடுகள் என்னவென்று அறிந்திருக்க மாட்டார்கள். அவர் சந்தித்த நிறவெறி கொடுமையும் இதுபோலத்தான் பலரும் அறியாதது. சுதந்திர தொழிலாளர்
கட்சியை தொடங்குவதற்கு அவர் விவாதித்த நண்பர்கள் பற்றிய விஷயங்களும் புதிதானவை.
அம்பேத்கர், புத்த மதத்திற்கு மாறுவது
பற்றிய தருணங்களை மிக தெளிவாக எழுதியிருப்பது எப்படி?
அம்பேத்கருக்கு,
1924ஆம் ஆண்டே புத்த மதத்திற்கு மாறுவது பற்றிய சிந்தனை, தோன்றிவிட்டது. ஆனால், 1930ஆம் ஆண்டு வரை அந்த சிந்தனை
செயல் வடிவம் பெறவில்லை. உண்மையில், அவருடைய மனதில் மதம் மாறும் சிந்தனை இயல்பாக உருவாகியது என்றே கூறவேண்டும்.
நாசிக் சத்யாகிரக போராட்டத்திற்குப் பிறகு, கோவிலுக்குள் நுழைவது பற்றி ய அடிப்படை
உரிமை கேட்கும் திட்டம் உருவானது. இதன் காரணமாகவே, அம்பேத்கர் இயோலாவில் 1935ஆம் ஆண்டு
புத்த மதத்தை தழுவினார்.
அம்பேத்கரின் கருத்துகளைப் பற்றி தெளிவாக
அவசரம் இல்லாமல் நூலை எழுதியிருக்கிறீர்கள். இந்த நூலை எழுதும்போது உங்களுக்கு சவாலாக
இருந்தது என்ன?
குறிப்பிட்ட
வார்த்தைகளுக்குள் நூலை எழுதுவது கடினமாக இருந்தது. நான் 1,80,000 வார்த்தைகளை நோக்கமாக
வைத்துத்தான் நூலை தொடங்கினேன். ஆனால் எழுதி முடித்தபோது 3,00,000 லட்சம் வார்த்தைகளைத்
தாண்டியிருந்தேன். நிறைய விஷயங்களை சிறு குறிப்பாக எழுதிக் கடக்க வேண்டியிருந்தது.
அதேசமயம் எழுதும் மொழியை எளிமையாக வைத்துக்கொள்ள
வேண்டியிருந்தது. எனவே, எழுதியவற்றை மீண்டும் மீண்டும் செம்மை செய்தேன்.
வி. கீதா
இந்து ஆங்கிலம்
------------------------------------------------
A PART
APART: THE LIFE AND THOUGHT OF B.R.AMBEDKAR
ASHOK
GOPAL
NAVAYANA
RS.999/-
கருத்துகள்
கருத்துரையிடுக