இடுகைகள்

எட்கர் ஆலன்போ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எட்கர் ஆலன்போவின் இறந்தகாலம், நிகழ்காலத்தை ஒப்பிடும் கதை! - கடிதங்கள்

படம்
  அன்பு முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா?  எட்கர் ஆலன்போவின் மம்மி பற்றிய கதையை இப்போது வாசித்தேன். இன்னும் இரண்டு கதைகள் பாக்கியாக உள்ளது. எகிப்திலிருந்து பெறப்பட்ட மம்மிக்கு மின்சாரம் அளிக்கப்பட அது பேசத் தொடங்கிவிடுகிறது. அந்தக்காலம், இந்தக்காலம் என உரையாடல் தீராத விவாதமாகிறது.  பீடிஎப் வடிவில் நிறைய கதைகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு நேரமொதுக்கி படிக்கவேண்டும். குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன் மொழிபெயர்த்த கதைகள் படித்தேன். இதில் அனைத்து கதைகளும் வாசிக்க நன்றாக இருந்தன. கார்சியா மார்க்வெஸ் எழுதிய கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை என்ற கதை நீளமானது. வாசிக்க மனம் கனக்கக் கூடியதும் கூட. ஓய்வூதியத்தை 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து வாழும் ராணுவ வீரர் ஒருவரின் கதை.  உள்நாட்டுப் போர்களால் சீரழிந்த நாட்டை உரையாடல்கள் வழியாக அறிய முடிகிறது.  தலைப்பில் அமைந்த குரங்கு வளர்க்கும் பெண், இங்கர் என்ற பெண் மீது ஒருவருக்கு ஏற்படும் காதலை  விவரிக்கிறது. இது பித்தேறிய காதல்வகை. ரேமண்ட் கார்வர் எழுதிய நகர கதைகள் சிறியவை என்றாலும் படிக்க சிறப்பானவை.  நன்றி ச.அன்பரசு 6.1.2021

நாவலின் வடிவம் வேறு சினிமாவின் வடிவம் வேறு

சாத்கூன் மாஃப், ஹேப்பி நியூ இயரில் நடித்த விவான் ஷா இப்போது நாவல் ஆசிரியராக மாறியிருக்கிறார். கொலை குறித்த மர்மங்களைக் கொண்ட லிவிங் ஹெல் என்ற நூலை பெங்குவின் பிரசுரித்துள்ளது. அதுபற்றி விவானிடம் பேசினோம். இந்த நாவலை எழுத உங்களைத் தூண்டியது எது?  நான் சிறுவயதிலிருந்து துண்டு துக்காடவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் நாடகங்கள் சிலவற்றை எழுதினேன். பின்னர், கட்டுரைகளுக்கு நகர்ந்தேன். நான் இலக்கியம் படித்தவன் என்பதால் இது எளிதாக சாத்தியமானது. நான் கலைப்படைப்புகளை உருவாக்க பேனாவும் பேப்பரும் இருந்தாலே போதும். சாத் கூன் மாஃப் படத்தின் ஆக்கத்திலும் பங்களித்திருக்கிறீர்கள். அதோடு எட்கர் ஆலன்போவின் கதைகளை நாடகமாக்கிய திறமையும் கொண்டவர். இருண்ட கதைகள் ஏன் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.  காரணம், நான் தொடக்கத்தில் கற்ற படித்த இலக்கியங்கள் நேர்மறையான தன்மை கொண்டவை அல்ல. அறிவியல் ஆய்வாளன் கண்டுபிடித்த ஆய்வு உண்மையைப் போலவே கலைஞனும் உண்மையைத் தேடவேண்டும். நம் வாழ்க்கையைப் பாருங்கள். அவ்வளவு எளிதில் நேர்மறையான விஷயங்களை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியாது. கலை என்பது ஆன்மிக ரீதியா