இடுகைகள்

கரிசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிராமத்து நினைவுகளை உயிர்ப்புடன் நினைவுகூர உதவும் கதைகள் - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கி.ரா

படம்
  கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நூல் தொகுப்பு மா ஞானபாரதி ( பாரதி மார்க்ஸ்) கி ரா அவர்களின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு. டிஸ்கவரி ப ப்ளிகேஷன்ஸ்   கரிசல் எழுத்தாளர் என அன்புடன் அழைக்கப்படும் கி ராவின் நூல்தொகுப்பு. மொத்தம் 23 கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகள் எவையும் வாசிப்பதற்கு சலிப்போ, அயர்வோ ஊட்டுவன அல்ல. அனைத்து கதைகளும் அதற்கேயான இயல்பில் ஆற்றொழுக்கு போன்ற போக்கில் செல்கின்றன. சொந்த சீப்பு, ஜடாயு, சுப்பன்னா, கோடாங்கிப் பேய், அங்கணம், சாவஞ்செத்த சாதிகள் ஆகிய கதைகள் எனக்கு பிடித்தமானவையாக தோன்றின. சொந்த சீப்பு என்பது, ஒரு பொருளை வாங்கி அதன் மீது வளர்த்துக் கொள்ளும் பற்று பற்றியது. ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் இருந்தால், அங்குள்ள அனைத்து பொருட்களுமே எந்த கேள்வி பதிலுமின்றி பகிரப்படும். அப்படி பகீரப்படும் சீப்பு காரணமாக அதை வாங்கியவர் மனதில் ஏற்படும் கோபமும், அலுப்பும்தான் கதை. நகர வாழ்க்கையில் முதலில் நாம் வாங்கும் பொருள் பெரிய ஈர்ப்பு கொண்டிருக்கும். அதாவது, அதற்கு மனதில் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூறலாம். பிறகு, நிறை