இடுகைகள்

காலனித்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலனித்துவம், அகதிகளின் பிரச்னை பற்றிப் பேசிய எழுத்தாளர்! - இலக்கிய நோபல் 2021

படம்
  தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா என்ற எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியுள்ளனர்.  எந்த சமரசமும் செய்யாமல் அகதிகளின் பிரச்னைகளையும் காலனித்துவ பாதிப்புகளையும் அப்துல்ரசாக் பதிவு செய்துள்ளார் என நோபல் கமிட்டி கூறியுள்ளது.  குர்னா, தனது இருபது வயதிலிருந்து எழுத தொடங்கியுள்ளார். இதுவரை பத்து நாவல்களை பதிப்பித்துள்ளார். நிறைய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் பிரிட்டனுக்கு அகதியாக வந்து குடியேறியவர்.  1987இல் மெமரி ஆப் டிபார்ச்சர் என்ற நூலை முதலில் வெளியிட்டார். பிறகு 1990இல் பில்கிரிம்ஸ் வே என்ற நூலை வெளியிட்டார்.  அகதிகளின் பிரச்னைகள், இனவெறி, அடையாளம் சார்ந்த பிரச்னைகளை நூலில் பேசியுள்ளார் குர்னா.  1994ஆம் ஆண்டு பாரடைஸ் என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் உலகப்போரின்போது ஆப்பிரிக்கவில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிறது. இந்த நாவலை புக்கர் பரிசு தேர்வுப்பட்டியலில் வைத்திருந்தனர். இறுதியில் ஸ்காட்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் கெய்மன் புக்கர் பரிசை வென்றார்.  கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நான் எழுப்பிய கேள்விகள் புதிதானவை கிடையாது. மன்னர் ஆட்சி, மக்கள் இடம்பெய