இடுகைகள்

திரிப்ஸ் பூச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆறு மாநிலங்களில் மிளகாய் உற்பத்தியை தாக்கி அழிக்கும் பூச்சி!

படம்
  தெலுங்கானாவில் உள்ள விவசாயிகள், மிளகாயை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். அந்த மாநிலத்திலுள்ள சுபக்காபலி கிராமம் . இங்கு, திரிப்ஸ் பர்விஸ்பினஸ் எனும் பூச்சி மிளகாய் செடிகளில் மீது நடத்திய தாக்குதலில் நாற்பது ஏக்கரிலுள்ள பயிர்கள் நாசமாயின.  கடந்த ஆண்டு சித்தூரி ரவீந்திர ராவ் பண்ணையில் பூச்சி தாக்கியது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லியைக் கூட ராவ் பயன்படுத்தினார். ஆனால் எந்த பயனும் இல்லை. பிரச்னையை சொல்லி, அதற்கான தீர்வைத் தேடுவதற்குள் காரியம் கைமீறிவிட்டது. ஒரே வாரத்தில் அத்தனை பயிர்களும் நாசமாகிவிட்டன. இதனால் மனமுடைந்த ராவ் தற்கொலை செய்துகொண்டார்.  மிளகாயை பயிரிட அவர் 20 லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். பயிர்கள் பூச்சியால் வீணாகிவிட்டதால், கடனைக் கட்டமுடியாத விரக்தி அவரை பாதித்து வீழ்த்திவிட்டது.  மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் திரிப்ஸ் பூச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்கள் ஆகும்.   இந்தியாவில் திரிப்ஸ் பூச்சி, கர்நாடகத்தில் பப்பாளித் தோட்டத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.  2018-19 ஆம் ஆண்டுகளில் அலங்காரச் செடிகளில் தி