இடுகைகள்

எழுத்துரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!

படம்
  பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்! ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்னே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கட்டுமானப்பணிகளை சிதைப்பது, பெயரை மாற்றுவது, செயல்பாட்டில் உள்ளவற்றை அழிப்பது என நிறைய குதர்க்கங்களை காழ்ப்புணர்ச்சியால் செய்வார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற கட்டிடம் அப்படித்தான் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. அதன் பின்னே உள்ளது தனிமனிதர் ஒருவரின் அற்பமான ஆணவமும், காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே.   அந்த வகையில் அமெரிக்காவில் அரசு பயன்படுத்தும் எழுத்துரு மாற்றப்படுவதாக அரசு செயலர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் பைடன் ஆட்சியில், 2023ஆம் ஆண்டு 'சன்ஸ் ஷெரிஃப் காலிப்ரி' என்ற எழுத்துரு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துரு, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் உதவுவதாக இருந்தது. இப்போது, தொழிலதிபர் ட்ரம்ப் அதிபராகி, குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் வெள்ளையர்களுக்கு ஆதரவான இனவெறிப்போக்கு அதிகரித்துள்ளது. கருப்பினத்தவர்களின் வரலாற்றை மாற்றி பெர...

பாரதி அழகுத்தமிழ் எழுத்துருக்கள்! - இலவசமாக பயன்படுத்தலாம்

படம்
        தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வலைத்தளத்தில் பாரதி அழகுத்தமிழ் எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றை தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட பயன்பாடு, தொழில்பயன்பாடு என ஏதாகிலும் இருந்தால் சரிதான். பெரிதாக கட்டுப்பாடுகள் கிடையாது. மொத்தம் 800 எழுத்துருக்கள் உள்ளன. பாரதி புத்தகாலயம், ஃப்ரீதமிழ்பான்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி. இவர்களது உழைப்பின் வழியாக இணையம் வழியாக தமிழ் எழுத்துருக்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எழுத்துருக்களை புதிதாக பயன்படுத்த விரும்புபவர்கள் தமிழ் இணையக்கல்விக்கழகம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறை வலைத்தளத்தில் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.