முத்தாரம் பிட்ஸ் - கா.சி.வின்சென்ட்

பிட்ஸ் ஸ்பாட் ! ஆடுகளால் 360 டிகிரியில் பார்க்க முடியுமா ? 320-340 டிகிரி வரை ஆடுகளால் பார்க்கமுடியும் . அப்போது மனிதர்களால் ? 160-210 டிகிரி என்பது நமக்கான லிமிட் . சிவப்பு பாண்டா கரடிகள் , வால்ரஸ் , ஸ்கங்க் ஆகிய விலங்குகளோடு ஒப்பிடப்பட்டாலும் இவை அவற்றோடு தொடர்பற்ற தனி விலங்கு . மண்புழுக்களுக்கு ஒன்றல்ல , இரண்டல்ல ஐந்து இதயங்கள் உண்டு . ஜூவுக்கு செல்லும் சமயத்தில் சளி , இருமல் இருந்தால் கொரில்லா கூண்டுக்கு செல்லாதீர்கள் . அவற்றுக்கும் சளி டக்கென தொற்றிவிடும் வாய்ப்பு அதிகமாம் . அம்மா சென்டிமெண்ட் கடல் ஆமைகளுக்கு இம்மியளவும் கிடையாது . மணலில் குஞ்சு பொறித்தவுடன் உயிர்பிழைக்க கடல்நீருக்குள் இறங்குபவை பிறகு , அம்மா மட்டுமல்ல , சகோதரர்களைக்கூட ஆயுளுக்கும் சந்திப்பதேயில்லை . அமேஸிங் பிட்ஸ் ! நாய்களின் மூக்கு ஈரமாக இருப்பது எதற்காக தெரியுமா ? அதன் உடல் வெப்பநிலையை சமநிலையாக வைத்துக்கொள்ளவே . நாயின் மூக்கிலுள்ள சளிச்சவ்வு மூலம் மூக்கு ஈரமாக இருப்பது அதன் மோப்பத்திறனை அதிகரிக்கிறது . பனிக்காலத்தில் கரடிகள் தூக்கத்தில் இருக்கும் என்பது சூப்பர் புரு