இடுகைகள்

தொழில் வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அளவுகோலை மாற்றி காடுகளை அதிகரித்து காட்டும் இந்திய அரசு!

படம்
  இந்தியாவில் அதிகரிக்கும் பசுமைப் பரப்பு! - உண்மை என்ன? அண்மையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவிலுள்ள காடுகளின் பசுமை பரப்பு பற்றிய அறிக்கையை(2021) வெளியிட்டது. கடந்த  ஜனவரி மாதம் 13இல் வெளியான அறிக்கை  காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியது. 2019ஆம் ஆண்டை விட காடுகளின் பரப்பு அதிகரித்து 1,540 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.  இந்திய அரசுக்காக வனத்துறை ஆய்வு நிறுவனம் (FSI), காடுகளின் பரப்பு பற்றிய ஆய்வறிக்கையை தயாரிக்கிறது. இந்த அமைப்பின் தகவல்படி, இந்திய நிலப்பரப்பில் 21.67 சதவீதம் காடுகள் உள்ளன. மொத்தமுள்ள காடுகளின் பரப்பு 7,13,789 சதுர கி.மீ. அறிக்கைப்படி, முந்தைய ஆண்டுகளை விட மாநிலங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்து வருகிறது என வன ஆய்வு அமைப்பு தகவல் கூறுகிறது. 1981ஆம் ஆண்டு வனத்துறை ஆய்வுநிறுவனம் உருவாக்கப்பட்டது.  1988ஆம் ஆண்டு முதல் காடுகளின் பரப்பு பற்றிய அறிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.  சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ”17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான

நம்பிக்கை தரும் சீனா ஸ்டார்ட் அப்கள்!

படம்
வர்த்தகப்போரில் ட்ரம்ப் ஆவேசமாக ஈடுபட்டாலும், அது தேர்தலுக்கானதாகவே இருக்கும் என உறுதியாக தெரிகிறது. ஏனெனில் அமெரிக்காவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்களை சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தேடி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்க விவசாயிகள் தங்கள் சோயாபீன்களை விற்கும் சந்தையாக சீனாவையும் பிற நாடுகளையும் நம்புகிறார்கள். இதில் முக்கியமான முரண்பாடு, இவர்கள்தான் ட்ரம்பை தேர்ந்தெடுத்தார்கள். ட்ரம்ப் வர்த்தகப்போரைத் தொடுத்து அவர்களுக்கு கிடைத்த வந்த விவசாய வருமானத்தையும் பெருமளவு குறைத்துவிட்டார். ட்ரம்பின் வாய்சவடால்களால் அமெரிக்காவிலிருந்து அங்கு ஏற்றுமதியான சரக்குகள் 30 சதவீதம் குறைந்துள்ளன. சீனாவிலிருந்து அமெரிக்கா பெறும் பொருட்களின் இறக்குமதி 8 சதவீதம் குறைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு 550 மில்லியன்களாக நுகர்வுப்பொருள் விற்பனை இருக்கும் என்று கூறுகிறார் மார்வெலஸ் புட்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனரான, கிரிஸ்டியானா ஜூ. அதேநேரத்தில், 5.6 ட்ரில்லியன் டாலர்களாக உள்நாட்டு ச்சந்தை மாறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். அமெரிக்காவின் உள்நாட்டுச்சந்தை தற்போது 5.5 ட்ரில்லியனாக