இடுகைகள்

கணிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜார்ஜ் ஆர்மிடேஜ் மில்லர்

  ஜார்ஜ் ஆர்மிடேஜ் மில்லர் இவர் சார்லஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். 1941ஆம் ஆண்டு ஸ்பீச் பாத்தாலஜி பாடத்தில் எம்ஏ பட்டம் வென்றார். பிறகு, ஹார்வர்டில் உளவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்லி ஸ்மித் ஸ்டீவன்ஸ் ஆய்வகத்தில் ஜெரோம் ப்ரூனர், கார்டன் ஆல்போர்ட் ஆகியோருடன் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின்போது ராணுவம் ரேடியோக்களை இடைமறித்து கேட்கும் பணிகளை செய்து தர கோரியது. 1951ஆம் ஆண்டு எம்ஐடியில் பணியாற்றச்சென்றவர். பிறகு 1955ஆம் ஆண்டு மீண்டும் ஹார்வர்டிற்கு திரும்பினார். அங்கு நோம் சாம்ஸ்கியோடு இணைந்து வேலை  செய்தார். 1960ஆம் ஆண்டு, அறிவாற்றல் படிப்புக்கான மையத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேலை செய்துள்ளவருக்கு 1991ஆம் ஆண்டு தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது.  முக்கிய படைப்புகள்  1951 language and communication  1956 the magival number seven plus or minus two 1960 plans and the structure of behaviour

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள் வரிசை

படம்
  மோரி சாக்கோ, சமையல் கலைஞர் கலாசாரத்தை சமைக்கும் கலைஞர் மோரி சாக்கோ 30 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு வெளியே பிறந்து வளர்ந்தவர். மங்கா காமிக்ஸ் மேல் அபரிமிதமான ஆர்வத்தோடு படித்தவர், ஜப்பான் நாட்டு கலாசாரத்தை உள்வாங்கிக்கொண்டார். ஆப்பிரிக்காவில் ஒன்பது பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவருக்கு டிவி சேனல்கள்தான் உலகமாக இருந்தன. டாப் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் சாதித்தவர், மோசுகே என்ற உணவகத்தை பாரிசில் நடத்தி வருகிறார். மோரி சமைக்கும் உணவுகள் அனைத்துமே அவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டவைதான். பிரான்ஸ், ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய கலாசாரத்தை பின்னணியாக கொண்டவை. தனது சமையலில் அவர் யார் என்பது இதுவரை விட்டுக்கொடுக்காதவர். ஓமர் சை   மீரா முராட்டி 34 செயற்கை நுண்ணறிவில் தேடல் மீரா முராட்டி, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார். பல்வேறு கலாசார வேறுபாடுகளைக் கொண்ட குழுக்களை உருவாக்கி அவர்களை நிர்வகிப்பது, செயற்கை நுண்ணறிவை ஜனநாயகப்படுத்துவது என இயங்கி வருகிறார். ஓப்பன் ஏஐயின் வளர்ச்சியில் மீரா முராட்டிக்கு முக்கிய பங்குண்டு. எளிமையான ஸ்டார

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - ராஜ் ஷெட்டி, மாதாபி, ரோகினி பாண்டே, மஞ்சுள் பார்க்கவா

படம்
  மாதாபி, தலைவர், செபி ராகுல் பாட்டியா, இண்டிகோ என் சந்திரசேகரன், டாடா குழுமம் ரோகினி பாண்டே, பொருளாதார வல்லுநர் ராஜ் ஷெட்டி, பொருளாதார வல்லுநர் ராஜ் செட்டி 43 பொருளாதா வல்லுநர் டெல்லியை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுநர். அரசின் கொள்கைகளை பொருளாதார தகவல்கள் அடிப்படையில் உருவாக்கவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். தனது 29 வயதில் பெருமை மிக்க ஜான் பேட்ஸ் கிளார்க் விருதை வென்றவர். இந்த விருது, பேபி நோபல் பரிசு என மரியாதையாக குறிப்பிடப்படுகிறது. பொருளாதார   பாகுபாடுகள் பற்றிய ஆய்வுகளை அர்ப்பணிப்புடன் செய்தவர், ஏழை மக்களில் 30 சதவீதம்பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.   மாதாபி பூரி புச் தலைவர்,செபி நிதி சந்தையைக் கட்டுபடுத்தும் ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவர். ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டதாரி. கடந்த ஆண்டு செபியில் தலைவராக பதவியேற்றவர், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முனைந்து வருகிறார். பொதுவாக அரசியல்வாதிகளுக்க

திருவண்ணாமலைக்கு திடீர் பயணம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்து வேலை - நோய்த்தொற்று  10.1.2022 இனிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்து வந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகிறார்கள். நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என நினைக்கிறேன். இந்த வாரம் திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். கடிதம் எழுதும்போதே இந்த எண்ணம் தோன்றிவிட்டது. எனவே, பஸ் பிடித்து அங்கு சென்றுவிட்டேன். அந்த பயணத்தை முடித்துவிட்டு வந்துதான் கடிதத்தை பகுதி பகுதியாக எழுதி முடிவு செய்துள்ளேன். அங்கு சென்றபோது பிரெஞ்சு நாட்டின் மீது காதல் தஞ்சைக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். தமிழ் ஆள்தான். வெளிநாட்டினருக்காகவே ஓவியங்களை வரைகிறார். அதாவது, அவர்கள்தான் அவருக்கு முதன்மையான வாடிக்கையாளர்கள். இப்போது கண்காட்சி வைக்க முயன்று வருகிறார். இவரும் குக்கூவைச் சேர்ந்த ஆள்தான்.   இவரிடம் எழுதுக – ஜெயமோகன் எழுதிய நூலை வாங்கிப் படித்தேன். நூலில் எழுதுவது, அதில் எழும் சிக்கல்கள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். நூல் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. எழுதுவது பற்றிய ச

புத்தகத் திருவிழாவிற்கு சென்ற ஜீனியஸ்!

படம்
  நரசிங்கபுரம் 24/1/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? வேலை இல்லாத சூழலில், பொருளாதாரம் மாபெரும் சிக்கலாக இருக்குமே? எப்படி எதிர்கொள்கிறீர்கள்? தோல் பிரச்னைக்கு கூடுதல் செலவாகுமே? வேலைக்கான முயற்சி எந்தளவில் உள்ளது? சென்றவாரம் திங்கட்கிழமை 16/1/2023 அன்று புக்ஃபேர் சென்றேன். சாணக்கிய நீதி, நினைவாற்றலை வளர்க்க என்ன செய்வது? ஆர்வமூட்டும் முல்லா கதைகள் ஆகிய நூல்களை வாங்கினேன். அறிவியல் தொடர்பாக ஒரு ஆங்கில நூல் கிடைத்தது. கணிதத்திற்கென எந்த புத்தகமும் இல்லை; சிவராமன் சார் எழுதிய நூல்கள் தவிர. வரும் மார்ச் பத்திற்குள் மாணவர் இதழ் வெளியீடு நிறைவடைகிறது. ஒரு வாரம், முன்னதாக கட்டுரைகளை வழங்கி வருகிறேன். யாரும் கேள்வி கேட்காத வகையில் காலம் நகர்கிறது. மார்ச் 10க்குப் பிறகு புத்தகம் ஏதேனும் வடிவமைக்கவேண்டும்.   அடுத்த ஆண்டுக்கான இதழ்   தொடங்குவதற்கு முன்…. முல்லாவின் கதைகளைப் படித்தேன். 46 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகம் அது. சுவாரசியமாக இருந்தது. பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும், நுணுக்கமான தந்திரங்களை பேச்சில் எவ்வாறு சேர்க்க வேண்டும் என முல்லா நினைவூட்டியிருக்கிறார்.   நேற

சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் நூல் எழுதலாம்!

படம்
  எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நரசிங்கபுரம் 3/1/2023   அன்புள்ள அன்பரசு சாருக்கு வணக்கம். வலைப்பூ உங்களை வளமுடன் இருக்கச் செய்யும் என நம்புகிறேன். சென்ற வாரம் நீங்கள் எழுதிய கடிதம் ஊக்கம் தருவதாக இருந்தது. மிக்க நன்றி! நீங்கள் வழிகாட்டியது போல சென்ற வாரம் ஆனந்த விகடன் இதழை வாங்கினேன். இன்னும் படிக்கத் திறக்கவில்லை. காரணம், தீராநதி மாத இதழ். ஆம். இதழ் முழுவதும் படித்தேன். எழுத்தாளர் அ. முத்துலிங்கத்துடனான நேர்காணல் சிறப்பாக இருந்தது. தான் சந்தித்த ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதலாம் என கனடாவில் வாழும் அகதிகளைப் பற்றி கூறியுள்ளார். பல மனிதர்கள் புத்தகங்களை எழுதுகின்றனர். சில மனிதர்கள் புத்தகமாகின்றனர் என்ற கருத்து அவரது எழுத்தில் இருந்தது. அதேபோல, ‘தி மேன் ஹூ சோல்டு இஸ் ஸ்கின்’ என்ற படக்கதையும் சிறப்பு. ஆண்களின் தோலை விபசாரமாக்குவது பற்றிய கதை. 2020இல் படம் வெளியாகியுள்ளது. மாணவர் இதழ், 2ஆம் தேதி முதல் பறக்கிறது. அனைவரும் ஓட ஆரம்பித்து விட்டனர். எனக்கு எழுத்தாளர்கள் பலர் எழுதுகின்றனர். செர்ஜின் என்ற எழுத்தாளருடனான சந்திப்பு ஊக்கம் தருவதாக இருந்தது. மேலும் அவரிடம்தான் அ

அப்பாவுக்கு கடிதத்தைப் பெற்று படிப்பதில் அதீத மகிழ்ச்சி!

படம்
  நரசிங்கபுரம் 20/12/2022   அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் கடிதம் கிடைத்தது. அப்பா சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் அவரது நண்பர் திருவண்ணாமலையில் இருந்து கடிதம் எழுதி அனுப்பி வந்தார். போன் வந்ததும் கடிதம் நின்றுவிட்டது. எனவே, கடிதத்தை வாங்குவதில் அதீத மகிழ்ச்சி அவருக்கு. எனக்கு முன்பாகவே படித்துப் பார்ப்பார். அவருக்கு நீங்கள் எழுதும் கையெழுத்தில் சில வார்த்தைகள் புரியவில்லையாம். எப்படி படிப்பே? என்று கேட்டார். அன்பிடம் பழகியவர்க்கே அன்பரசு கையெழுத்து புரியும் என்று சொன்னேன். சரிதானே? உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது சார்? மருத்துவ செலவுகள்? பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம். சென்னை வந்தால் சொல்லலுங்கள். நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். கொஞ்சம் முன்கூட்டியே சொன்னால் சிறப்பு. தினமும் விதவிதமான கணித ஸ்டேட்டஸ்களை வாட்ஸ்அப்பில் பதிவிடுகிறேன். மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 17ஆம் தேதி என் குருநாதர் நடத்திவரும் பை கணித மன்றத்தில் இராமானுஜன் பிறந்த நாளையொட்டி நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. ஏஐஆர்எம்சி என்ற அமைப்பிலிருந்து வந

கணிதம் கற்றுத்தரும் க்யூமேத் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40 தொழிலதிபர்கள்

படம்
  மனன் குர்மா மனன் குர்மா 37 க்யூமேத் கணக்கு என்றால் மாணவர்கள் பலருக்கும் தடுமாற்றமாகவே இருக்கிறது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் எப்படி தடுமாறுமோ அதேபோல்தான் கணக்கும் நகர, கிராம வேறுபாடின்றி பிரச்னையாக உள்ளது. இதை மனன், தான் கணக்கை கற்றுத்தரும்போதே உணர்ந்தார். அதற்காக தொடங்கியுள்ள நிறுவனம்தான் க்யூமேத். இந்த நிறுவனத்தில் ஒரு ஆசிரியர் நான்கு மாணவர்களுக்கு (ஒரு குழு) என பிரித்து வைத்து கணக்கை சொல்லித் தருகிறார். க்யூமேத் வலைத்தளத்தில் 2 லட்சம் பயனர்கள் உள்ளனர். இவர்களுக்கு கற்றத்தர 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். உலகம் முழுக்க 80 நாடுகளில் க்யூமேத் செயல்பட்டு வருகிறது. நான்கு மணி நேரத்தில் கணக்கை சிறப்பாக கற்க முடியும் என நிரூபித்ததோடு, வருமானத்தையும் ஈட்டி வருகிறது. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட க்யூமேத், விளையாட்டு மூலம் கணக்குகளை கற்பதை அடிப்படையாக கொண்டது. ஜினா கிருஷ்ணன் ஃபார்ச்சூன் 

மனநல குறைபாடு கொண்ட அண்ணனைப் பழிவாங்கும் சுயநலமான தம்பி - கோப்ரா - அஜய் ஜானமுத்து

படம்
  கோப்ரா இயக்குநர் அஜய் ஞானமுத்து இசை ஏ ஆர் ஆர் ஸிஸோபெரெனியா குறைபாடு கொண்ட அண்ணனுக்கும், சுயநலமான தம்பிக்கும் நடக்கும் பழிக்குப்பழி சம்பவங்கள்தான். கதை.  மதியழகன், அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு உதவும் கணித ஆசிரியர். கணிதத்தில் சற்று மேம்பட்ட மனிதர். அதில் கற்ற கோட்பாடுகளை வைத்தே தன்னையும், ஆசிரம குழந்தைகளையும் காப்பாற்ற கொலைத்தொழில் செய்கிறார். இதற்கு நெல்லையப்பர் என்ற பத்திரிகையாளர் உதவி செய்கிறார். இந்த நிலையில் மதி செய்யும் கொலைச்செயல்கள் பற்றி தகவல்கள் மெல்ல இன்டர்போலுக்கு கசிகின்றன. எப்படி என அறியும்போதுதான் அதிர்ச்சி உருவாகிறது. மதியைப் போன்ற தோற்றத்தில் உள்ள இன்னொருவன்தான் தகவல்களை பிறருக்கு கொடுக்கிறான். ஏன் அப்படி செய்கிறான் என்பது ஃபிளாஷ்பேக்கிற்கான முன்னோட்டம்.  விக்ரமை விடுங்கள். அவர் சிறப்பாக நடிப்பார் என அனைவருக்குமே தெரியும். இதிலும் அப்படியேதான். அதைத்தவிர மற்றவர்களைப் பார்ப்போம். படத்தில் மதி, கதிர் என இரு பாத்திரங்களிலும் நடித்துள்ள சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். அடுத்து, கல்லூரி பருவத்திலுள்ள மதி, கதிர் நடிகர் கூட நல்ல பங்களிப்புதான்.  ஆனால் படத்தில் ஆர்வம் தரும்

மூளையைக் கூர்மையாக்கும் ரூபிக் க்யூப்!

படம்
மூளையை கூர்மையாக்கும் க்யூப்!  ரூபிக் க்யூபைப் பயன்படுத்தி பிறரோடு சவால் விட்டு விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கலாம். இந்த விளையாட்டுப் பொருளை 1974ஆம் ஆண்டு, ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரைச் சேர்ந்த கட்டுமானத்துறை பேராசிரியரான  எர்னோ ரூபிக் (Erno Rubik) உருவாக்கினார்.   1944 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி புதாபெஸ்டில் பிறந்தார் எர்னோ ரூபிக். சிறுவயதில் ஓவியம் வரைவது, சிற்பங்கள் செதுக்குவது ஆகியவற்றில் பேரார்வம் கொண்டிருந்தார். அதனால், புதாபெஸ்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தார்.  1974ஆம் ஆண்டு 29 ஆம் வயதில், மரத்தில் செய்த எட்டு க்யூப் வடிவங்களை ஒன்றாக்கி தற்போதைய க்யூப் வடிவத்தை உருவாக்கினார். அதற்கு வண்ணங்களைத் தீட்டி பரிசோதனை செய்து பார்த்தார். நம்பிக்கை பிறந்ததும் ஹங்கேரி நாட்டு காப்புரிமை அலுவலகத்தில் க்யூப்பை பதிவு செய்தார். 1977ஆம் ஆண்டு தொடங்கி க்யூப் ஹங்கேரியில் தயாரிக்கப்பட்டு விற்கப்படத் தொடங்கியது.  ரூபிக் க்யூபை வேகமாக நகர்த்தி அனைத்து புறங்களிலும் ஒரே விதமான நிறங்களைக் கொண்டு வருவது என்பது கடினம். 2018ஆம் ஆண்டு க்யூபிக் புதிரை சீ

பல்வேறு சோதனைகளுக்குப் பயன்படும் அறிவியல் மாதிரிகள்!

படம்
  டிஸ்க்ரிப்டிவ் மாடல்களுக்கு எடுத்துக்காட்டு அறிவியல் மாதிரிகள்  அறிவியல் துறைகளில் பேசப்படும் சிக்கலான கருத்துகளை பிறருக்கு விளக்க உதவுபவை, அறிவியல் மாதிரிகள் (Science models) ஆகும். இவற்றில் ஐந்து வகைகள் உண்டு. அவை,   ரெபிரசன்டேஷனல் மாடல்ஸ் (Representational models) உடலிலுள்ள என்சைம்கள் எப்படி செயல்படுகின்றன, வேதிப்பொருட்கள் எப்படி சுரக்கின்றன  என்பதை எளிமையாக விளக்க ரெபிரசன்டேஷனல் மாடல்கள் உதவுகின்றன.  ஸ்பாஷியல் மாடல்ஸ் (Spatial models) கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களின் அணுக்களை முப்பரிமாண வடிவில் பார்த்து செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, ஸ்பாஷியல் மாடல்கள் உதவுகின்றன.   டிஸ்க்ரிப்டிவ் மாடல்ஸ் (Descriptive models) உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சி நிலைகளை விளக்கப் பயன்படும் வடிவம். இதில் படம், வார்த்தைகள் என இரண்டுமே பயன்படுகிறது.  கம்ப்யூடேஷனல் மாடல்ஸ் (Computational models) மாறிவரும் பூமியின் தட்பவெப்பநிலையைப் புரிந்துகொள்ள பயன்படும் மாதிரி  வடிவம். இதை உருவாக்க கணினி உதவுகிறது. எ.டு. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலை,  வெப்பநிலை பற்றிய முன்கூட்டிய கணிப்பு.  மேத்தமேட்டிகல் மா

டாப் 1 அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் ஃபிரான்டியர்!

படம்
  உலகின் வேகமான சூப்பர் கம்ப்யூட்டர்!  டாப் 500 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில், அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் புதிதாக இடம்பிடித்துள்ளது. இதன்  பெயர், ஃப்ரான்டியர்  எக்ஸாஸ்கலே கணினி  என அழைக்கின்றனர்.  எக்ஸாஸ்கலே கணினி ஒரு நொடிக்கு, குயின்டில்லியன் கணக்குகளை போடும் திறன் கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு பூமியிலுள்ள அனைத்து மனிதர்களும் 24 மணிநேரமும் கணக்கு போடுவதை இக்கணினி ஒரு நொடியில் போட்டுவிடும்.  ஜப்பானில் உள்ள ஃபுகாகு என்ற சூப்பர் கணினியை ஃபிரான்டியர் கணினி பின்னுக்கு தள்ளியுள்ளது. கணினியின் வேகத்தை பெட்டாஃபிளாப்ஸ் என்று அழைக்கின்றனர்.  இந்த வகையில் ஃபுகாகுவின் வேகம் 442 பெடாஃபிளாப்ஸ்களாக உள்ளது.  ஃபிரான்டியர் , 1 எக்ஸாஸ்கேல் என்பது 1000 பெடாபிளாப்ஸ்க்கு ஒப்பானது. இந்த வகையில் எக்ஸாஸ்கேல், பட்டியலில் முதன்மையாக உள்ள நான்கு கணினிகளையும் தாண்டிய திறனைக் கொண்டுள்ளது.  ஃபிரான்டியர் சூப்பர் கணினி 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. இதனை அமெரிக்க ஆற்றல் துறையில் தேசிய ஆய்வகத்தில் சோதித்து வருகிறார்கள்.  இப்போதைக்கு டாப் சூப்பர் கணினிகளைப் பார்ப்போமா 1 . ஃபிரான்டியர் 2. ஃபுகாகு, ஜப்பான் 3. லூமி, ப

தனது காதலி செய்த கொலையை கணித அறிவால் மறைக்கும் கணித ஆசிரியர்! - தி பர்ஃபெக்ட் நம்பர் - தென் கொரியா

படம்
பர்ஃபெக்ட் நம்பர் (2012) பர்ஃபெக்ட் நம்பர் தென்கொரியா ஜப்பான் எழுத்தாளர் எழுதிய தி டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற நாவலைத் தழுவிய படம்.  ஒரு பெண் செய்த கொலையை அவளை விரும்பும் கணித ஆசிரியர் எப்படி மறைக்கிறார். அந்த முயற்சியில் தன்னை எப்படி எரித்துக்கொள்கிறார் என்பதே கதை.  சிறு வயதிலிருந்து கணிதம் தவிர வேறெதையும் கண்டுகொள்ளாதவர்தான் நாயகன். நட்பு, காதல் என எதுவுமே அவருக்கு அமையவில்லை. கணிதம் சார்ந்த சிக்கல் முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் இருக்கிறார். நண்பன் மீது சந்தேகம் கொள்ளும் டிடெக்டிவ்  தினமும் எழுந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வது, அங்கு செல்லும் வழியில் உள்ள கடையில் மதிய உணவை வாங்குவது என வாழ்க்கை செல்கிறது. மதிய வாங்கும் இடத்தில் வேலை செய்யும் பெண்ணை மெல்ல நேசிக்கத் தொடங்குகிறார். அந்தப் பெண், திருமணமாகி விவகாரத்தானவர். அவர் தனது உறவினர் குழந்தையுடன், கணித ஆசிரியரின் அறைக்கு அருகில் தங்கியிருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணுக்கு முன்கதை உள்ளது. அது சோகமான வருத்தக்கூடிய கதை. அதிலிருந்து தப்பிக்கவே அவர் சியோலுக்கு வந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்.  இந்த நிலையில் நாம் மறக்க

கணிதவியலாளர்கள் 6 பேர் பற்றிய அறிமுகம்!

ஆபிரஹாம் டி மொய்வ்ரே (Abraham De Moivre) பிரெஞ்சு கணிதமேதை ஆபிரஹாம் 1667 ஆம்ஆண்டு மே 26 ஆம் தேதி பிரான்சின் சாம்பக்னே நகரில் பிறந்தார். கணிதத்தில் முறையான பட்டம் பெறாத ஆபிரஹாம், செடானில் கிரேக்க மொழி கற்க புரோடெஸ்டன்ட் அகாடமிக்கு அனுப்பப்பட்டார். கணிதத்தின் தொடக்கப் பாடங்களைக் கற்ற ஆபிரஹாம், 1684 ஆம் ஆண்டு பாரிசுக்குச் சென்று மேல்நிலைக்கல்வியைக் கற்றார். கணிதம் மீது வேட்கை கொண்டதால், அதில் தலைசிறந்த அறிஞரானார். பின்னர் நியூட்டனின் பிரின்சிபியா (Principia) என்ற நூலைப் படித்து ஊக்கம் கொண்டார். ராயல் சொசைட்டியின் அறிமுகம் கிடைக்க, நியூட்டன், எட்மண்ட் ஹாலே ஆகியோரின் நட்பும் கிடைத்தது. மாணவர்களுக்கு கணித வகுப்பு மட்டுமே வருமான ஆதாரம். நியூட்டன் உள்ளிட்ட முன்னோடிகளின் தியரிகளை விரிவுபடுத்தியதோடு டி மொய்வ்ரே சூத்திரம் (De Moivre’s Formula’), பெரிய எண்களின் செயல்பாடுகள் பற்றிய நூல் டாக்ட்ரின் ஆஃப் சான்சஸ் (‘Doctrine of Chances) ஆகியவை கணித துறையில் இவரின் பங்களிப்பு. நன்றி:https://famous-mathematicians.com/abraham-de-moivre/ 2 அடா லவ்லேஸ் (Ada Lovelace) புகழ்பெற்ற கவிஞர் பைரனின்

கவனிக்கப்படாத ஆளுமைகள்

படம்
  கவனிக்கப்படாத ஆளுமைகள் அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதித்த ஆளுமைகளை கணக்கில் எடுத்தால் நூறு ஆளுமைகள் என்ற தலைப்பில் பட்டம் பதிப்பகத்தில் நூலே கொண்டு வரலாம். ஆனால் இதில் இடம்பெறுபவர்கள் யார்? ஐன்ஸ்டீன், காஸ், ஆர்க்கிமிடிஸ், கலீலியோ ஆகியோர்தான் இப்பட்டியலில் இடம்பெறுவார்கள். ஆனால் இவர்களைக் கடந்து புகழ்பெற முடியாத புத்திசாலிகள் உண்டுதானே? அவர்களின் வரிசைதான் இது.  அமேலியா எம்மி நோதர் (Amalie Emmy Noether 1882–1935) பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்து ஆற்றல் சேமிப்பு குறித்த வரையறையைக் கூறிய அறிவியலாளர். சார்பியல் தியரி சார்ந்த கணிதத்திலும், இயற்கணிதத்திலும் பங்களித்துள்ளார். பல்லாண்டுகள் புறக்கணிப்புக்குப் பிறகு கோட்டிங்கன் அறிவியலாளர்கள் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பாலின பாகுபாட்டினால் அமேலியாவின் திறமை மறைக்கப்பட்டது வேதனை.  எமிலி போரல் ((Emile Borel ( 1871–1956)) பிரான்சில் பிறந்த அறிவியலாளரான இவர், பதினொரு வயதிலேயே அறிவுதாகத்தில் பாரிஸ் சென்றார். நிகழ்தகவு தியரியில் பல்வேறு சாதனைகளை  நிகழ்த்தியவர் போரல். 1920 ஆம்ஆண்டு கேம் தியரியில் பல்வேறு அடிப்படை அம்சங்கள் உருவாக

ஐன்ஸ்டீன் கணிதப்பாடத்தில் தோற்றுப்போனவரா?

படம்
  சரியா? தவறா? இயற்பியல் உலகில் ஆய்வுரீதியான நிறைய  உண்மைகள் உண்டு. அதேயளவில் நிரூபிக்கப்படாத பொய்களும் உண்டு. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.  ஐன்ஸ்டீன்  ஃபெயில்! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழும்போதே வந்த வதந்திச்செய்தி இது. ஐன்ஸ்டீன் கணிதத்தில் கெட்டியாக இல்லாமல் இயற்பியலில் எப்படி சாதித்திருப்பார்? இப்படிக்கூட  யோசிக்காமல் நாளிதழ் பிரசுரம் கூட செய்துவிட்டது. பல்கலையில் இயற்பியல் படிப்பில் சேர முயற்சித்தபோது கணித தேர்வை ஐன்ஸ்டீன் எழுதினார். ஆனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை விட குறைவாக பெற்றார். அதற்கு மறுதேர்வு எழுதினார். இதைத்தான் ஃபெயில் என கதைகட்டிவிட்டனர்.  தலையில் விழுந்த ஆப்பிள்!  ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த ஆய்வாளர். இவரது கண்டுபிடிப்பைச் சொல்லும்போது, ஆப்பிள் தலைமீது விழுந்துதான் ஈர்ப்புவிசை குறித்து அறிந்தார் என கூறுவார்கள். தன் அம்மாவின் தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது, ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்தது. தலைமீது விழவில்லை. ஆப்பிள் கீழே விழ என்ன காரணம் என யோசித்த நொடிதான் நியூட்டனை சாதனையாளராக்கியது. பூமி மற்றும் நிலவின் ஈர்ப்புவிசை வரை நாம் பயணிக்க நியூட்டனே காரண

70 ஆயிரம் எண்களை நினைவுபடுத்தி சொன்ன ராஜ்வீர் மீனா!

படம்
  பை எனும் எண்ணின் மதிப்பை வேலூரைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா, 70 ஆயிரம் எண்களை நினைவுபடுத்திச் சொல்லி கின்னஸ் சாதனை செய்தார்.  2015 ஆம் ஆண்டு மார்ச்  21 அன்று இச்சாதனையை இவர் செய்தார். இவருக்கு முன்பாக, சாவோ லூ என்ற சீனர் 67,780 எண்களை மனப்பாடாக கூறியதே சாதனையாக இருந்தது.  2005 ஆம் ஆண்டு அகிரா ஹராகுசி என்பவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் 1,17,000 பை எண்களை மனப்பாடம் செய்து கூறினார் என்கிறது தி கார்டியன் பத்திரிகை.  இப்படி எண்களை நினைவுபடுத்தி கூறுவதை கணிதத்தில் பைபிலாலஜி (piphilology) என்று குறிப்பிடுகின்றனர்.  பை என்ற எண்ணுக்கான மொழியை கணிதவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பிலிஸ் (Pilish ) என்று பெயர். 2010 ஆம் ஆண்டு மைக் கீத் என்பவர் இது பற்றி நாட் எ வேக் என்ற நூலை இம்மொழியில் எழுதினார்.  2 ஒரு அறையில் 23 பேர் இருந்தால் அவர்களில் இருவர் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் வாய்ப்பு எவ்வளவு தெரியுமா? 50 சதவீதம்.  ஜீரோ மட்டுமே ரோமானியர்களின் எண்களில் இல்லாத ஒரே எண். இது இரட்டைப்படை எண் கூட.  உலகில் 3 ஆயிரம் பேரிடம் செய்த ஆய்வில் பலரின் விருப்ப எண்ணாக இருப்பது ஏழு என்ற எண்தான். அடுத்ததாக,

ஒலிப்பெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அர்ப்பணிப்பான குஜராத் கிராமம்!

படம்
                  ஒலிப்பெருக்கி வழியே கல்வி ! ஷைலேஷ் ராவல் ஆசிரியர் , குஜராத் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வி தடைபட்டுள்ளது . இந்த நேரத்திலும் பல்வேறு ஆசிரியர்கள் புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர தொடங்கியுள்ளனர் . குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் . இங்குள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஊர் பார்பட்டா . இங்கு காலை எட்டு மணி என்றால் ஒலிபெருக்கிகள் முழங்கத் தொடங்கிவிடும் . இதுதான் அங்குள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கான பாடவேளை தொடங்கிவிட்டதற்கான அறிகுறி . ஷைலேஷ் ராவல் இப்படித்தான் ஒலிபெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார் . பல்வேறு மாநில மாணவர்களும் இணையம் வழியாக கற்கத் தொடங்கியபோது , ஷைலேஷ் ஒலிப்பெருக்கி பக்கம் நகர்ந்துள்ளார் . வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் பலரின் வீடுகளில் ஸ்மார்ட்போன் , டேப்லெட் , மடிக்கணினி , ஏன் டிவி கூட கிடையாது . அண்மையில் ஸ்மைல் பௌண்டேஷன் 22 மாநிலங்களில் 42,831 மாணவர்களிடம் செய்த ஆய்வில் 56 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்ற உண்மை தெரியவந்துள