கணிதம் கற்றுத்தரும் க்யூமேத் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40 தொழிலதிபர்கள்

 




மனன் குர்மா






மனன் குர்மா

37

க்யூமேத்

கணக்கு என்றால் மாணவர்கள் பலருக்கும் தடுமாற்றமாகவே இருக்கிறது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் எப்படி தடுமாறுமோ அதேபோல்தான் கணக்கும் நகர, கிராம வேறுபாடின்றி பிரச்னையாக உள்ளது. இதை மனன், தான் கணக்கை கற்றுத்தரும்போதே உணர்ந்தார். அதற்காக தொடங்கியுள்ள நிறுவனம்தான் க்யூமேத். இந்த நிறுவனத்தில் ஒரு ஆசிரியர் நான்கு மாணவர்களுக்கு (ஒரு குழு) என பிரித்து வைத்து கணக்கை சொல்லித் தருகிறார். க்யூமேத் வலைத்தளத்தில் 2 லட்சம் பயனர்கள் உள்ளனர். இவர்களுக்கு கற்றத்தர 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

உலகம் முழுக்க 80 நாடுகளில் க்யூமேத் செயல்பட்டு வருகிறது. நான்கு மணி நேரத்தில் கணக்கை சிறப்பாக கற்க முடியும் என நிரூபித்ததோடு, வருமானத்தையும் ஈட்டி வருகிறது. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட க்யூமேத், விளையாட்டு மூலம் கணக்குகளை கற்பதை அடிப்படையாக கொண்டது.

ஜினா கிருஷ்ணன்

ஃபார்ச்சூன் 

கருத்துகள்