நகைகளை வடிவமைக்க கற்கும் ஆர்வம் இருந்தால் போதுமானது! - நிஃப்ட் வழங்கும் படிப்புகள்
படிப்பு வேண்டாம் - ஆர்வம் இருந்தால்
போதும் நகைகளை எளிதாக வடிவமைக்கலாம்!
சென்னையிலுள்ள
கண்ணகி நகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் நகை வடிவமைப்பு சார்ந்த பாடங்களை
கற்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு சென்னையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன்
டெக்னாலஜி நிறுவனமே காரணம். இந்த நிறுவனம், தற்போது நகை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை
இணையம் வழியாக படிப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளது.
இதனால், பள்ளிப்படிப்பை
படிக்காதவர்கள், எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், டீக்கடை,
பெட்ரோல் பங்க் என பிழைப்புக்கான வேலைகளை செய்து வருபவர்கள் கூட நகை வடிவமைப்பு பற்றிய
படிப்பில் இணைகிறார்கள். படித்து முடித்து நகைகளை தாங்களே வடிவமைத்து வேலையையும் பெற்று
வருகின்றனர்.
கற்களை பதிப்பது,
வெல்டிங், மெழுகு மாதிரியில் நகைகளை தயாரிப்பது ஆகிய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம்
காட்டி வருகிறார்கள். அரசு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து பத்து லட்சம்
பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.எனவே, குறைந்த கல்வித்தகுதி இருந்தாலும்
கூட கற்றலின் தீப்பொறி உள்ளவர்களுக்கு நகை வடிவமைப்பு துறை சார்ந்த படிப்புகள் உதவியாக
உள்ளன. இந்த படிப்பை முடித்தவர்கள் நகை சார்ந்த வணிக நிறுவனங்களில் நம்பிக்கையுடன்
பணியாற்றுகிறார்கள். நிஃப்ட் இந்தவகையில் பின்தங்கிய மக்களின் பிரிவினருக்கு தொழில்பயிற்சிகளை
அளிக்க முயன்று வருகின்றனர். இவர்கள் வழங்கும் படிப்பில் ஏராளமான பெண்கள், மாணவர்கள்
இணைந்து வருகிறார்கள். குறிப்பாக மீனவர்கள்.
தமிழ்நாடு
திறன் மேம்பாட்டு வாரியம், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அடுத்த ஆண்டு பிரான்சில்
நடைபெறவிருக்கும் திறன் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கவிருக்கிறது. மாவட்ட, மாநில அளவிலான
நகை வடிவமைப்பு, கலை பொருட்களை வடிவமைப்பது தொடர்பாக போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது.
உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனம் இதற்கான ஆதரவை வழங்குகிறது. 2016ஆம் ஆண்டு தொடங்கி
உலகளவில் நடைபெறும் திறன் போட்டிக்கு இளைஞர்களை தயார்படுத்தி வருகிறார்கள். சிம் கார்டிலிருந்து
நகை, மல்லிகைப் பூவைப் பயன்படுத்தி தோடு என மாணவர்கள் தயாரித்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள்.
விவேக் நாராயன்
டைம்ஸ் ஆஃப்
இந்தியா
image - pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக