யுனிலீவரை பீதியடையச் செய்த மாமா எர்த் நிறுவனம் ! - ஃபார்ச்சூன் 40/40

 




நடிகை ஷில்பா, நிறுவனர்கள் வருண், கசல், மாமாஎர்த்





கசல் ஆலாக் 34

வருண் ஆலாக் 38

மாமா எர்த்

 

குழந்தைகளுக்கான வேதிப்பொருட்கள் இல்லாத அல்லது அளவில் குறைந்த சோப்புகளை, ஷாம்பூகளை தயாரிப்பதும், சந்தைபடுத்தி வெற்றி பெறுவதும் கடினம். மாமாஎர்த் நிறுவனம், இந்த விஷயத்தில்தான் மகத்தான வெற்றி பெற்று யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டில்தான், டவ் பிராண்டில் குழந்தைகளுக்கான சோப்புகள், ஷாம்புகள் அறிமுகமாகி உள்ளன. இந்த பிராண்ட், பல்வேறு உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு போட்டிபோட்டு விளம்பரம் செய்து வருகிறது. குறிப்பாக, மாமாஎர்த். யுனலீவரின் முதலீட்டாளர் ஒருவர், நிறுவனத்திடம் மாமாஎர்த்தோடு போட்டியிட்டு வெல்ல திட்டங்கள் இருக்கிறதா என வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் மாமாஎர்த் நிறுவனம் தொடங்கி ஏழு ஆண்டுகள்தான் ஆகிறது. 2016ஆம் ஆண்டு ஆறு பொருட்களை விற்றது. இந்த நிறுவனத்தின் பொருட்கள், நாடெங்கும் 50 ஆயிரம் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மொத்த நிறுவன வருவாயில் 35 சதவீதம், மேற்சொன்ன கடைகளிலிருந்து கிடைக்கிறது.

‘’நாங்கள் போட்டியாளர்களைப் பார்ப்பதில்லை. மக்களைத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு ஆயிரம் வாடிக்கையாளர்கள்தான் கிடைத்தார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். ’’ என்று தடாலடியாக பேசுகிறார் வருண்.

மாமாஎர்த் நிறுவனம், தனது பொருட்களை இணையத்தில் உள்ள 7 ஆயிரம் பிளாக்கர்கள் மூலம் சோதித்துப் பார்த்து சந்தைக்கு கொண்டு வருகிறது. இந்திய கலாசாரத்தில் என்னென்ன பொருட்களை குழந்தைகளை வளர்க்க பயன்படுத்தினார்களோ அதை திரும்ப கொண்டு வந்துள்ளது. இதன்படி, குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய நல்லெண்ணெய்யை விற்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களைப் போல ஆலிவ் எண்ணெய்யை பரிந்துரைக்கவில்லை. நச்சில்லாத சோப்புகள், வேதிப்பொருட்கள் இல்லாத கொசுவர்த்தி என மாமாஎர்த் நிறுவனம் விற்பனையில் தனித்துவமான பாணியைப் பின்பற்றி வருகிறது.

அஜிதா சசிதர்

 ஃபார்ச்சூன் 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்