கிரியேட்டிவிட்டி பற்றி சாதனையாளர்கள் கூறும் கருத்துகள்!
கிரியேட்டிவிட்டி பற்றி பிரபலங்கள்
கூறிய கருத்துகள்…
உங்களின்
உள்ளுணர்வை நம்புங்கள். நான் பிறர் கூறுவதை கவனமாக கேட்பேன். ஆனால் நாளின் இறுதியில்,
என்னுடைய முடிவை நானே தீர்மானிப்பேன். இப்படி செயல்படுவது, பின்னாளில்
நீங்கள் உருவாக்காத முடிவுக்காக வருத்தப்படுவதை விட சிறந்ததுதான்.
-உடை வடிவமைப்பாளர்
பீட்டர் டூ
சில சமயங்களில்
நமக்குள்ளிருந்து இயற்கையாக, வேகமாக வெளியே வரும் விஷயங்களை சிறந்த படைப்பு என கொள்ளலாம்.
அதுதான் உங்களுக்கு கிடைத்த பரிசு. அதை நம்புங்கள்.
-பத்திரிகையாளர்
ஜோ ஹோல்டர்
உங்களின்
உள்ளுணர்வை நம்பி சவால்களை எதிர்கொள்ளுங்கள். அது அன்றைய சூழலுக்கு எதிராக கூட இருக்கலாம். பரவாயில்லை.
நீங்கள் வேலை
செய்யும் முறையைக் கவனியுங்கள். அங்குதான் உண்மையான மாயம் நடக்கிறது. வேலையின் முடிவை
விட அதன் செயல்முறையில் கவனம் வைத்தால் நாம் இலக்கை நோக்கிய பயணத்தை விரைவில் அடையும்
வழிகள் கிடைக்கும்.
-யூரி சோய்,
துணை நிறுவனர், சவில் ரோ டெய்லர் யூரி அண்ட் யூரி
உங்கள் உள்ளுணர்வை
ஓட்டியிருங்கள். நான் ஆராய்ச்சி செய்யும்போது சுதந்திரமாக அதை செய்யும்போதுதான் சிறப்பாக
இயங்கியிருக்கிறேன். அதில், வேட்கையும் வேகமும் உள்ளது.
-கால்வின்
இங்க்
எனக்கு நீரைக்
குடிப்பதற்கான அளவுக்கு தாகம் ஏற்பட்டதேயில்லை. அப்படி தாகம் ஏற்படுவதற்கு முன்னரே
தேவையான நீரை குடித்துவிடுவதால், நிறைய நீரை குடிக்கவேண்டும் என எனக்கு தோன்றியதில்லை.
அனைத்து எழுத்தாளர்களுமே
ஆன்மிக தன்மை கொண்டவர்கள்தான்.. பிறர் பார்க்க முடியாத ஒன்றுடன் தங்களை இணைத்துக்கொள்ள
விரும்புகிறார்கள். அவர் தேடுவது, நிஜ உலகில் இல்லையென்பதே உண்மை.
-எழுத்தாளர்
ராபி யூசஃப்
எதையும் நேர்மையாக
பிறர் சிந்திக்காத இயல்பில் உருவாக்குங்கள். நீங்கள் உருவாக்கிய கருத்தை பிறர் ஏற்க
மாட்டார்கள் என உடனே முன்முடிவுக்கு வராதீர்கள். பிறருக்கு பிடிக்காதபோதும், உங்களது சிந்தனையை சிறந்த முறையில் உருவாக்குவது
முக்கியம். யாரும், உங்கள் சிந்தனையின் பகுதியளவு சிறப்பை அரைகுறையான இயல்பில் விரும்ப
மாட்டார்கள்.
-வாசனை திரவிய
தயாரிப்பாளர் டேவிட் மோல்ட்ஸ்
உங்களது தொழிலில்
நேர்மையான பங்களிப்பாளர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் செயல்படுத்தவிருக்கும்
திட்டத்தை சற்று பின்தள்ளி கூர்மையாக கவனிக்க வேண்டும்.
உங்களுக்கு
உதவி செய்யும் உண்மையான பங்களிப்பாளர்கள், திட்டத்தில் எது வேலை செய்யவில்லை என்பதை
கூறுவார்கள். நீங்கள் கூறுவதற்கு ஆமாம் என்று மட்டும் சொல்பவர்களை வைத்துக்கொண்டிருந்தால்,
உங்கள் கிரியேட்டிவிட்டிக்கு அதுதான் முதல் எதிரியாக இருக்கும்.
-ஆஷ்லே கிளார்க்
கிரியேட்டிவிட்டி
என்பது உடல் உழைப்புத் தொழிலாளர்களின் பணியைப் போலத்தான் இருக்கும். நேரத்தைப் பார்க்காமல்
வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும். இறுதியாக உங்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கலாம்.
அல்லது கிடைக்காமலும் போகலாம். நீங்கள் செய்யும் வேலை என்பது உங்களை முன்னே நகர்த்தவேண்டும்.
அது உங்களை நீங்கள் செல்லும் திசையில் சலனப்படுத்தும்.
ரிச் ரோல்,
விளையாட்டு வீரர்
புதிய சிந்தனைகள்,
எப்படி எங்கிருந்து கிடைக்கும் என்று என்னால் கூற முடியாது. எனவே, நான் அதற்காக காத்திருக்கிறேன்.
புகைப்படம், திரைப்படம், கவிதை, நூல், கலை என ஏதாவது ஒன்றைத் தேடும்போது கிடைக்கலாம்.
இயற்கையில் மழை, காற்றை, பறவைகளை, மேகங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது கூட புதிய
சிந்தனைகள் கிடைக்கலாம்.
ரியூசி சகமோடா,
இசையமைப்பாளர்.
கருத்துகள்
கருத்துரையிடுக