இடுகைகள்

மேற்கு வங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயநலமான மனிதர்கள், சமூகம், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் உள்நாட்டு அகதியின் வாழ்க்கை!

படம்
        மனோரஞ்சன் பியாபாரி, எழுத்தாளர்     இன்ட்ரோகேட்டிங் மை சந்தால் லைஃப் மனோரஞ்சன் பியாபாரி சிறுவயதில் தான் பிறந்தவுடனே தனது நாக்கில் வைக்க வீட்டில் தேன் இல்லை என்று மனோரஞ்சன் கூறுகிறார் . அப்படி இனிப்பு வைக்கப்படும் குழந்தைக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை . நூலில் இந்த பகுதியை படிப்பவர்களுக்கு இது பெரிதானதாக தோன்றாது . ஆனால் மனோரஞ்சனின் வாழ்க்கை மோசமாகவே அமைகிறது . இனிப்பு என்ற சுவையே உண்ணாதவன் , அறியாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும் ? இவரது வாழ்க்கையும் அப்படித்தான் . இந்த சுயசரிதை பலரையும் அச்சப்படுத்தக்கூடியது . பீதியூட்டக்கூடியது . அந்தளவு சாதியால் , துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர் . மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மனோரஞ்சன் . இன்று அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார் . ஆனால் அவரது தொடக்க , மத்தியகால கட்ட வாழ்க்கை என்பது புழுத்த நாய் குறுக்கே போகாது என வசைபாடுவதைப் பற்றி தி . ஜா கூறுவார் . அதைப்போலத்தான் உள்ளது . அந்தளவு நெருக்கடிகள் . வறுமை , வேலை செய்து சம்பளம் கிடைக்காதது , ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவது , ரயிலில் டிக்கெ

மேற்கு வங்கத்தை காக்கும் அக்காவும், உலக வங்கியின் நிர்வாக தலைவரான பெண்மணியும்!

படம்
  மம்தா பானர்ஜி  மம்தா பானர்ஜி  அரசியல் தலைவர், மேற்கு வங்கம்.  முதலில் மாநில கட்சியாக இருந்தவர், இப்போது தேசிய கட்சியாக மாறிவிட பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதற்கான பயன்கள் என்ன என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்.  கருத்துகளையும் முடிவுகளை எடுப்பதில் துணிச்சலானவர் என்று பெயர் பெற்றவர் மம்தா பானர்ஜி. செல்லமாக தீதி. அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர். மேற்குவங்கத்தின் முதல்வராக இருக்கிறார்.  தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி தொண்டராக தொடங்கினார். மேற்கு வங்கத்தில் இருந்த இடதுசாரி கட்சியை உடைத்து தனது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த தற்கு நிறைய இழந்திருக்கிறார். வன்முறையை எதிர்கொண்டிருக்கிறார். இடதுசாரி குண்டர்களின் தாக்குதலில் மண்டையே கூட உடைந்து போயிருக்கிறது. அத்தனையும் பொறுத்துக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தபிறகு திருப்பி கொடுத்தார். மம்தாவின் ஆளுமை, அதிரடிகளால் இடதுசாரிகள் இன்றுவரை மேற்கு வங்கத்தில் எழ முடியவில்லை.  காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மந்திரியாக பொறுப்பு வகித்திருக்கிறார். ராஜீவ்காந்தியின் ஆதரவாளராக இருந்தவர், அவர் குண்டுவெ

பொன்ஸி திட்டங்களின் மீது மக்களுக்கு குறையாத ஆர்வம்! - மேற்குவங்கம், தமிழகம் முன்னிலை-

படம்
      சார்லஸ் பொன்ஸி         நுணுக்கமாக ஏமாற்றுவது எப்படி ? அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு பொருளாதாரம் வளரத்தொடங்கியுள்ளது இதனால் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதற்கு பணக்காரர்கள் முதலீடு செய்ய முண்டியடித்தனர் . இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் சார்லஸ் பொன்ஸி . இவருடன் கூட்டணி சேர்ந்து தன்னை வளர்த்துக்கொண்டவர் பெர்னி மேடாப் . இவர் செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 150 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது . கடந்த வாரத்தில்தான் இவர் மறைந்தார் . பெர்னி , பொன்ஸி என இருவரின் காம்போதான் வரலாற்றில் பெரும் பொன்ஸி திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களை ஏமாற்றியவர்கள் . பொன்ஸியை விட அதிக காலம் முதலீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் பெர்னி . முதலீட்டாளர்களிடம் 64 பில்லியன் டாலர்களைப் பெற்று அவர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீத தொகையை திருப்பிக் கொடுத்தார் . எப்படி ? எதிலும் முதலீடு செய்யவில்லை . புதிதாக ஆட்களை அறிமுகம் செய்யவேண்டும் . அப்படி செய்தால் கூடுதலாக தொகை கிடைக்கும் . புதிதாக திட்டத்தில் இணையும

சுவேந்து அதிகாரியால் பாஜக வெல்ல முடியாது! சௌகதா ரே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்

படம்
                சௌகதா ரே திரிணாமூல் காங்கிரஸ் சுவேந்து அதிகாரி வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ? இல்லை . அவர் நந்திகிராமில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் . அங்கு 40 சதவீதம் முஸ்லீம்கள் உண்டு . போனதடவை பெற்ற வாக்குகளை அவர் இம்முறை கட்சி மாறியதால் இழக்கவே வாய்ப்புண்டு . அவருக்கு இது தெரியாதா ? தெரிந்திருக்கலாம் . அவர் மேல் நிறைய குற்றவழக்குகள் உண்டு . அதனால்தான் அவர் அமித்ஷாவில் வலையில் விழுந்துவிட்டார் . உங்கள் கட்சி உறுப்பினர்களை பாஜக இழுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பாஜக பல்வேறு சலுகைகளைக் காட்டி எங்கள் கட்சி ஆட்களை இழுப்பது உண்மைதான் அதில் சுவேந்து முக்கியமானவர் . அவர் ஒரு தலைவராக இங்கு இருந்தார் . மற்றவர்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல . எங்கள் கட்சி ஆட்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் பாஜக கொடுத்துவருகிறது . அதனை நேரடியாக எதிர்கொண்டு கட்சியிலேயே இருக்க நிறைய பேரால் முடியவில்லை . ஐந்து எம்எல்ஏக்கள் ஒரு எம்பி என பாஜ பக்கம் போய்விட்டார்கள் . இது உங்களுக்கு பெரிய இழப்பு இல்லையா ? இவர்கள் யாரும் இத்தேர்தல

தொழில் மாநாடு மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டது மோசடியானது! ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநர்

படம்
                  ஜக்தீப் தன்கர் மேற்குவங்க ஆளுநர் மாநில அரசு உங்களை நிறைய விஷயங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறதே ? மேற்கு வங்க மாநிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . இங்கு மனித உரிமைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை . மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் , உயர்நீதிமன்ற நீதிபதி . அவர் இப்போது வெண்டிலேட்டர் வசதியுடன்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தலாமே ? நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே ? நான் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையை வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் உள்ளேன் . ஆளும்கட்சி தலைவர் உங்கள் மீது வழக்குப்பதிவதாக கூறுகிறார் . அக்கட்சியைச் சேர்ந்தவர் உங்கள் மாமா என்று வேறு அழைக்கிறார் . இதற்கு உங்கள் பதில் என்ன ? ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை . நிதிஅமைச்சர் அமித் மித்ரா நீங்கள் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் பெற்றுதரவில்லை என்ற

பாஜகவின் பிளவுவாத அரசியலையும் மாண்டுவிட்ட சட்டம் ஒழுங்கையும் காங்கிரஸ் மீட்கும்! ஜிதின் பிர்சாதா, மேற்கு வங்கம்

படம்
                ஜிதின் பிர்சாதா காங்கிரஸ் பொறுப்பாளர் , மேற்கு வங்கம் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் எதற்கு ? காங்கிரஸ் இந்த முடிவில் தெளிவாக உள்ளது . நாங்கள் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் . இறுதிமுடிவை கட்சித்தலைவரான சோனியா எடுப்பார் . நாங்கள் இப்போது கட்சியில் பல்வேற கட்டரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் . நீங்கள் இப்போது எதிர்ப்பது திரிணாமூல் காங்கிரஸ் அல்லது பாஜகவையா ? இப்போது காங்கிரஸ் இரண்டு வித போட்டிகளை சமாளிக்கவேண்டியுள்ளது . ஒன்று மக்களை இனரீதியாக பிரிக்கும் பாஜக , அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உள்நாட்டில் ஏற்படுத்தும் திரிணாமூல் காங்கிரஸ் . பாஜக அரசு வளர்ச்சி திட்டங்கள் பற்றி கவலைப்படாமல் பிரவினை அரசியலை நாட்டில் விரிவுபடுத்தி வருகிறது . இதனால் சுகாதாரம் , கல்வி , அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இன்றி உள்ளன . இப்போது தேர்தல் பிரசாரத்தில் கூட குடியுரிமைச்சட்டம் , தேசிய குடியுரிமை பதிவேறு பற்றி விவகாரங்கள் பேசப்படுகின்றன . இதில் காங்கிரசின் நிலை என்ன ? காங்கிரஸ் நாட

தெரிஞ்சுக்கோ - காளி!

படம்
giphy காளி இந்துக்கடவுள். இந்த வரையறையைத் தாண்டி காளி என்றால் அழிவு சக்தி. இன்றும் இதற்காக பல்வேறு மனிதர்களை கொன்று நரபலி செய்பவர்கள் உண்டு. பெண் தெய்வ வழிபாட்டை சாக்தம் எனும் மதமாகவே இந்தியாவில் வளர்த்தெடுத்தார்கள். இன்று இந்த பாரம்பரியம் கேரளத்திலும், கோல்கட்டாவிலும் உள்ளது. இதைப்பற்றிய சில தகவல்களை நாம் இங்கு பார்ப்போம். கடவுள் என்பது தோன்றியபோது, மகாவித்யா எனும் பத்து பெண்கள் உருவாகின்றனர். இதில் காளிதான் முதல் இடத்தைப் பிடிக்கிறார். சாதாரணமாக நாம் பார்க்கும் காளி நான்கு முதல் பத்து கரங்களைக் கொண்டிருப்பார். இந்தியாவில் 3 கோடிகளுக்கும் அதிகமான பெருந்தெய்வங்களும் சிறுதெய்வங்களும் வழிபாட்டில் உள்ளனர். இதில் பொங்கல் தின்கிற கடவுள் முதல் கள்ளு குடித்து கருவாடு தின்னுகின்ற கருப்பண்ணசாமி வரை அடக்கம். மேற்கு வங்கம், அசாமில் காளி பூஜை விழாவன்று அரசு விடுமுறையே உண்டு. காளியின் கழுத்தில் கிடக்கிற மண்டையோட்டை பார்த்திருப்பீர்கள். அதனை வர்ணமாலா என குறிப்பிடுகிறார்கள். இந்தியில் உள்ள எழுத்துக்களை குறிப்பது என்பது சிலரின் கருத்து. கடவுள்களை துதித்து அருள்பெற அவர்க