இடுகைகள்

ஜியோமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

5 ஜி போன்கள் ரெடி!

படம்
5ஜிக்கு ரெடியா? அரசு சம்மதிக்கிறதோ இல்லையோ சீனா 5 ஜி புரட்சிக்கு ரெடியாகிவிட்டது. சீனாவின் ஜியோமி, இசட் டி இ, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்டு காங்கிரசில் தம் புரோடோடைப் மாடல்கள் மூலம் இதனை நிரூபித்து விட்டன. ஹூவெய் சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்தான். தற்போது 5 ஜி போனை உருவாக்கி விட்டது. மேட்  எக்ஸ் என்ற மாடல், சாம்சங்கின் மடக்கும் போனுக்கு நிகராக பார்க்கப்படுகிறது. தற்போது 4.6 ஜிபிபிஎஸ் வேகத்தில் தரவுகளை தரவிறக்க முடியும். இதற்கான சோதனையை ஹூவெய் செய்து பார்த்தது. ஆனால் விலை 2 ஆயிரத்து 600 டாலர்கள். மேட் எக்ஸ் என்ற போனும் மடக்கும் அம்சம் கொண்டதுதான். சாம்சங் தன் மடக்கும் போனை வரும் மே மாதம் விற்பனைக்கு கொண்டுவரவிருக்கிறது. ஜியோமி எம்ஐ போன் கம்பெனிதான். இவர்கள் மடக்கும் வகையிலான போனுக்கு மெனக்கெடவில்லை. ஆனால் 5ஜி போனுக்கான விஷயங்களை ரெடி செய்துவிட்டனர். 2 ஜிபிபிஎஸ் வேகத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. 680 டாலர்கள் செலவில் விற்கப்படும் என தெரிகிறது. இசட் டி இ  ஹூவெய்க்கு இணையான நிறுவனம்தான் இது. விரைவில் இசட் ட

சீப்பான சீனக்கம்பெனிகள் ஜெயித்தது எப்படி?

படம்
www.scmp.com சீனக் கம்பெனிகள் சாதித்தது எப்படி? இந்தியாவில் மொபைல் கம்பெனிகளுக்கு குறைவில்லை. ஆனால் தரம் என்று பார்த்தால், ஒனிடா, வீடியோகான், மைக்ரோமேக்ஸ் ஆகிய கம்பெனிகள் மேட் இன் இந்தியா என பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போன்களை வாங்கியவர்கள் சந்தோஷப்பட ஏதுமில்லை. அப்படியே மலிவான கொரிய போன்களுக்கு பெயரை மட்டும் லாவா, ஒனிடா, வீடியோகான் என வைத்து பரபரப்பான விற்றனர். இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, மைக்ரோமேக்ஸ் போன்ற கம்பெனிகள் போன்களை வேகமாக விற்க முயற்சித்தனரே தவிர அதில் தரத்தையோ தனித்துவத்தையோ பராமரிக்க முயற்சிக்கவில்லை. இந்த நேரத்தில் இந்தியச் சந்தையில் சாம்சங் கோலோச்சிக் கொண்டிருந்தது. நோக்கியா சரிவில் இருந்தது. பிளாஸ்டிக் போன்களை அதிக விலை வைத்து விற்ற எல்ஜியின் சுவடையே காணோம். அப்போது பீக்கில் கிராக்கி காட்டியது கொரியா செட்டுகள்தான். திருவிழா செட்டு போல முத்துக்கொட்டை பல்லழகி என எங்கு பார்த்தாலும் சத்தம். அந்த நேரத்தில்தான் சீன போன்களாக ஹூவெய், ஆப்போ, விவோ களமிறங்கின. குறைந்த விலையில் ஐபோன் வசதிகளோடு போன் விற்றால் வாங்க மாட்டார்களா? தூள் கிளப்பிய