இடுகைகள்

தொழில்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இருவரும் இந்தியாவின் சுயசார்பை

உயிரிவேதியியல் துறையில் இந்தியாவை உயரத்துக்கு கொண்டு சென்ற பெண்மணி! - கிரண் மஜூம்தார் ஷா

படம்
  கிரண் மஜூம்தார் ஷா கிரண் மஜூம்தார் ஷா தொழிலதிபர் தனது வாழ்க்கையை தானே செதுக்கி தொழிலதிபர் ஆனவர் என்று சொல்லலாம்.  1953ஆம்ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர், கிரண். பெங்களூரில் பிறந்தவரின் அப்பா, யுனைடெட் ப்ரீவர்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்பாளராள இருந்தார். இவரது அம்மா,  யாமினி மஜூம்தார் சலவைத்தொழிலை நடத்தி வந்தார். கிரணுக்கு தொடக்கத்தில தனது அப்பாவின் தொழிலை அப்படியே பின்தொடர்ந்து செய்யலாம் என்று எண்ணம் இருந்தது. தனது மதுபான தயாரிப்பு தொடர்பான படிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் பல்லாரட் பல்கலையில் முடித்தார். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறாக இருந்தது. பெண்களுக்கு மதுபானத் தயாரிப்பில் பெரிய வேலைகள் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு ஐரிஷ் கம்பெனியான பயோகான் பயோகெமிக்கல்  வேலை தருவதாக கூறியது. அதனை உருவாக்கி நிறுவியர் லெஸ்லி ஆசின்குளோஸ்.  1978ஆம் ஆண்டு ஆசின்குளோஸ், கிரணை தனது பயோகான் இந்தியா நிறுவனத்தில் கூட்டாளியாக சேர அழைப்பு விடுத்தார்.  பயோகான் நிறுவனம் பாபெய்ன், இசின்கிளாஸ் எனும் என்சைம்களை பப்பாளி, மீனிலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் தொடங்கிய பயோகான் நிறுவன

இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கவில்லை! - இருதய ராஜன்

படம்
pixabay இருதயராஜன், வளர்ச்சி மேம்பாட்டு மையம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாள்வதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டதாக எப்படி சொல்லுகிறீர்கள்? இடம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் உழைக்கும் தொழிலாளர்களை முக்கியமானவர்களாக மத்திய மாநில அரசுகள் கருதவில்லை. அவர்களை கொள்கை வகுக்கும்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள். இதனால்தான் பல்வேறு நகரங்களில் பொருளாதாரத்தில், கலாசார ரீதியாக, தொழில்ரீதியாக பங்களிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊரடங்கு காலத்தில் மத்தி அரசு கணக்கில் கொள்ளவில்லை. ஊரடங்கு காலத்திற்கு முன்னரே நான்கு நாட்கள் கொடுத்திருந்தால் அவர்கள் தங்கள் ஊருக்கு சென்றிருக்க முடியும். ஆனால் அப்படி ஒரு செயல்பாடு நடக்கவில்லை. காரணம் அரசுகள் அவர்களை எப்போதும் போல பொருட்படுத்தவில்லை. அவர்கள் இடம்பெயர்ந்து செல்வதன் மூலம் நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதேசமயம் சரியான முறையில் அவர்களை பராமரித்து சோதனை செய்தால் நோய்த்தொற்றை சமாளித்து இருக்கமுடியும். இனி அவர்கள் நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியபிறகு இங்கு வருவது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. நாம் இச்சமயத்தில் அவர்களுக்கான க

ஏஐ புரட்சி என்ன செய்யும்?

படம்
நன்றி: தினமலர் பட்டம் ஏஐ புரட்சிக்கு ரெடியா? செய்தி: அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது. Redmondmag.com மனிதவளத்துறை  மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை வியாபார