இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஒரே வழி!
மக்கள் அதிகாரத்துவர்கள், ஒரு விஷயத்தில் நீதி கிடைக்கவேண்டுமென்றால் எந்த தரகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும் நாடுவதில்லை. அதில் அவர்கள் பெரிதாக நம்பிக்கை கொள்வதில்லை. நேரடியாக களத்தில் இறங்கி நடைபெறும் செயலை உடனே தடுக்க முயல்வார்கள். அதனால், இதை பார்ப்பவர்களுக்கு வன்முறை இயல்பு கொண்டவர்கள் போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியானவர்கள் இல்லை. செயலை உடனே தடுக்கவேண்டும் என நினைப்பார்கள். உடனே களத்தில் குதித்துவிடுவார்கள். இந்தியாவில் உள்ள மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ இயக்கத்தை அறிவீர்கள். மரங்களை கட்டிப்பிடித்து தடுத்து இயற்கையைக் காத்தவர்கள். அதுபோலத்தான். இவர்களும் செயல்படுகிறார்கள். புல்டோசர்களைக் கொண்டு காடுகளை அழிக்கிறார்களா, அவர்களது வண்டியின் பெட்ரோல், டீசல் டேங்கில் சர்க்கரையைப் போட்டுவிடுவார்கள். அப்புறம் என்ன முழு எஞ்சினும் பழுதாகிவிடும். நாம் கவனிக்கவேண்டியது எதிர்தரப்பு எந்த மெக்கானிக்கிடம் செல்வார்கள் என்பதல்ல. நடைபெற்ற செயல் நின்றுபோனதல்லவா, அதுதான் மக்கள் அதிகாரத்துவர்களின் வெற்றி. இயக்கமாகவும் அவர்கள் மேலிருந்து கீழ் என ஆணையிட்டு ச...