பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021- சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்
கடந்தாண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தேசிய பெண்கள் கமிஷன் உறுதிபடுத்தியுள்ளது. இப்படி நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவின் முன்மாதிரி வளர்ச்சி பெற்ற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது.
2021இல் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 30,864
2014ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்களுக்குப்(33,906) பிறகு 2021 ஆம் ஆண்டில்தான் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன.
வாழும் உரிமை மறுக்கப்பட்டதாக உணர்ச்சிகளை பயன்படுத்தி ஏமாற்றியதாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,013
2020ஆம் ஆண்டை விட 2021இல் 30 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன.
திருமண உறவு சார்ந்த குற்றங்கள் 6,633, வரதட்சணை கொடுமை 4,589
இணையம் சார்ந்த புகார்கள் 858
வல்லுறவு, வல்லுறவுக்கான முயற்சி 1,675
பாலியல் ரீதியான பிரச்னை, மானபங்கம் 1,819
காவல்துறை ரீதியான பிரச்னைகள் 1,537
அதிக புகார்களைக் கொடுத்துள்ள மாநிலங்கள்
15,828 புகார்களை கொடுத்து இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக பிரகாசிப்பது உத்தரப் பிரதேசம். இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. வீரத்துறவி யோகி முதல்வராக உள்ளார்.
3,336 புகார்களுடன் ஒன்றிய அரசு நிர்வாக அலுவலகங்கள் உள்ள டெல்லி இரண்டாவது இடம் பிடித்துவிட்டது.
மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களை மகாராஷ்டிரம், ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. மகாராஷ்டிரம் தவிர்த்து பிற இடங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. அல்லது கூட்டணிஇயல் உள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக