குடியுரிமை சட்டத்தின் அவலத்தை புகைப்படமாக்கியவருக்கு விருது!- ஜிஸான் ஏ லத்தீப்புக்கு ராம்நாத் கோயங்கா விருது
கேரவன் மாத இதழில் என்ஆர்சி பற்றிய புகைப்படத்தை வெளியிட்ட ஜிஸான் ஏ லத்தீப் என்ற புகைப்படக்காரருக்கு ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியான புகைப்பட கட்டுரை அது. என்ஆர்சி பட்டியல் வெளியாகி ஒரு மாதம் ஆகியிருந்தபோது அசாமில் நான்கு மாவட்டங்களில் லத்தீப் புகைப்படங்களை எடுத்தார்.
இதில் ஏழை, வறுமை நிலையில் உள்ள முஸ்லீம்கள் இரண்டு பட்டியல்களிலும் இல்லை என்று தகவல் வர துயரமுற்றனர். என்ஆர்சி என்றால் என்னவென்றே தெரியாமல் பயந்துபோனார்கள். அரசின் விடுபட்டோர் அறிக்கை 2017, 2018 என இரண்டு ஆண்டுகளில் வெளியானது. இதில் ஆதாரங்களைக் காட்டி தங்களது முன்னோர் இந்தியர் என நிரூபிக்காதபோது அவர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது ஏறத்தாழ நாஜி ஜெர்மனியின் கெட்டோ எனும் வதை முகாம்களை ஒத்தது.
2015ஆம் ஆண்டிலிருந்து லத்தீப் அசாமில் பயணித்து வருகிறார். அங்கு மண் அரிப்பு தொடர்பான பணிக்கு முதலில் சென்றார். பிறகு 2019இல் அங்கு நிறைவேற்றப்பட்ட என்ஆர்சி சட்டம் பற்றி அறிந்ததும் அதனை பதிவு செய்திருக்கிறார். நான் முஸ்லீம் என்பதால் எனக்கும் குடியுரிமை தொடர்பான பிரச்னை ஏற்படுமா என்று அறிந்துகொள்ள நினைத்தேன். அதுதொடர்பான செய்திகளை பதிவு செய்து கேரவன் இதழுக்கு அனுப்பினேன் என்றார் லத்தீப்.
எப்போது குறிப்பிட்ட பிரச்னை பற்றி அலசி ஆராய்ந்துகொண்டு செல்வார்கள். லத்தீப்பும் கூட அப்படித்தான். ஆனால் அங்கிருந்த மக்கள் தங்கள் வாழ்க்கை பறிபோய்விடும். இனி இந்தியாவில் வாழ முடியாது என கரைந்தழுத து லத்தீப்பை உலுக்கியிருக்கிறது. மனிதர்கள் புத்திசாலித்தாலா ஆனவர்கள். உணர்ச்சியால் ஆனவர்கள் என்பதுதானே நிஜம்.
இந்த புகைப்படம் செய்தி வெளியான பிறகு நாட்டின் பிற பகுதியிலும் பதற்றம் ஏற்படத் தொடங்கியது. பொதுவாக என்ஆர்சி தங்களை ஏதும் செய்யாது என்று நினைத்தவர்கள் கூட பீதியாகத் தொடங்கினார்கள். ஊடகங்கள், மக்களிடம் இதுபற்றி நிறைய கேள்விகள் உண்டு. ஆனால் இதற்கு யாரிடமும் எந்த உண்மையான பதிலும் கிடையாது என்பதே உண்மை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக