சமையல் கலைஞனை இயக்கும் சிறுவயதுத் தோழி! தீனி
தீனி |
தீனி
தமிழ் டப்
அசோக் செல்வன், நித்யா, ரிது
ஏ.எஸ் சசி
லண்டனில் உள்ள அமரா என்ற ஹோட்டலுக்கு தேவ் என்ற இளைஞன் வேலைக்கு வருகிறான். அவனுக்கு உடல் எடை அதிகம். தசை தொடர்பான நோய் இருப்பதாக கூறுகிறான். நிறைய நேரங்களில் திடீரென வினோதமாக நடந்துகொள்கிறான். பாத்திரங்களை தட்டி விடுகிறான். பிறர் மீது மோதுகிறான். யாரோ இழுத்தது போல வேறு திசைக்கு செல்கிறான். ஆனால் இந்த குறைபாடுகளைத் தாண்டி அவனுக்கு நல்ல மனம் உள்ளது. பிறரின் பிரச்னைகளை அவனால் கவனிக்கமுடியும்.
அவன் வேலை செய்யும் ஹோட்டல் தலைமை சமையல்காரர் நாசர் மிக கண்டிப்பானவர். அவர் பதினைந்து ஆண்டுகளாக சமைக்காமல் இருக்கிறார். அதற்கு அவர் தனது ஆசை மகளை பிரிந்ததுதான் காரணம். இதனால் தினசரி தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற அளவிற்கு மன அழுத்தத்திற்கு சென்று திரும்புகிறார். இந்த நேரத்தில் தேவின் வருகை அவரசது செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறுக்கமாக இருக்கும் அந்த சமையல் அறையின் சூழலை கலகலப்பாக மாற்றுகிறான் தேவ். அவன் சமையல் காரன் என்றாலும் கூட அவனை உடனே சமைக்க விடவில்லை. பாத்திரங்களை கழுவ வைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவன் கவலைப்படவில்லை. அவனது சக தோழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்துக் கொண்டே இருக்கிறான்.
மேலும், தவறு நேரும்போது தலைமை செஃப் பாத்திரங்களை கீழே போட்டு உடைக்கிறார். இதனால் ஏராளமான பொருட்கள் வீணாகின்றன. இதைப் பார்த்து தேவ், அவனது சீனியரான தாரா என்ற பெண்ணிடம் சொல்லுகிறான். அவள் இதில் நீ உள்ளே வராதே என்று சொல்கிறாள். ஆனால் தேவ், அதைப்பற்றிக் கவலைப்படுவதோடு அதனை சரிசெய்கிறான். சக தோழர்கள் செய்த உணவு வகையில் சில மாற்றங்களை அவன் செய்ய அது அவன் செய்தது தெரியாமலேயே தலைமை செஃப் ஏற்கிறார். இதனால் அவனது சக சமையல் கலைஞர்கள் அவனை நண்பனாக ஏற்கிறார்கள். அங்குள்ள பழக்கம் என்னவென்றால், அங்கு சமையல் கலைஞர்கள் அவர்களுக்கான உணவை அவர்களே சமைத்து உண்ண வேண்டும். அப்படி ஒரு நாளில் தேவ் கறி ஒன்றை சமைத்து சாப்பிடுகிறான். அப்படி சாப்பிடும்போது அவனது டிஷ்ஷின் மணத்தால் ஈர்க்கப்பட்ட தலைமை செஃப் அதை விண்டு சாப்பிட்டுப் பார்த்து மெல்ல புன்னகையுடன் அவனை அங்கீகரிக்கிறார். ஆனால் இதனைப் பார்க்கும் தாரா கோபமுறுகிறாள். தான் இத்தனை நாட்களும் முயன்றும் கூட தலைமை செஃப்பின் அன்பை பெற முடியவில்லையே என்ற கழிவிரக்கம் அவளை சூழ்கிறது. அவளை தேவ் அவளுக்கு தெரியாமல் காதலித்துக்கொண்டு இருக்கிறான்.
உண்மையில் தேவிற்கு இருக்கும் பிரச்னை என்ன, தாரா எதற்கு தலைமை செஃப்பின் அன்பைப் பெற அந்தளவு முயல்கிறாள் என்பதுதான் மீதிக்கதை.
படம் தெலுங்கில் நின்னிலா நின்னிலா என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. சமையல் என்பது வெறும் வேலை அல்ல. அது பல்வேறு உணர்வுகளை ஒன்றாக உருவாக்க கூடியது. இதயத்தையும் வயிற்றையும் ஒன்றாக்கும் உணவே சிறந்த உணவு என்பதை காட்சி ரீதியாகவே புரிய வைக்கிறது படம்.
இறுக்கமாகவே வரும் ரிதுவை விட படத்தின் பின்பகுதியில் வரும் நித்யா தனது சிரிப்பாலும் குறும்பான செயல்பாடுகளால் மனதை கவர்கிறார். படத்தின் பாடல்கள் அனைத்துமே தனியாக கேட்க கூடியவை அல்ல. அனைத்துமே படத்தோடு சேர்ந்துதான் கேட்க முடியும். ராஜேஸ் முருகேசனின் இசை படத்தின் உணர்களை சிறப்பாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. அசோக் செல்வனுக்கு தொந்தி வயிறு அந்தளவு பொருத்தமாக இல்லை. ஆனாலும் கூட உணர்வுகளை கண்கள் மூலமாகவே கடத்த மெனக்கெட்டிருக்கிறார்.
கேண்டில்லைட் டின்னர்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக