2022 இல் எதிர்பார்க்கப்படும் முக்கியமான திரைப்படங்கள்!


 
மூன்ஃபால்

விண்வெளி சார்ந்த படம். ஹாலே பெர்ரி நடிக்கிறார். இயக்குநர் ரோலாண்ட் எம்மிரிச். நிலவு பூமியை மோதுகிறது என சிலர் பயமுறுத்துகிறார்கள். அதை தடுக்க ஹாலே பெர்ரியும், குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவரும் சேர்ந்து விண்வெளிக்கு போகிறார்கள். 

மேரி மீ

பாப் ஸ்டாராக இருக்கும் ஜெனிஃபர் லோபஸ் தனது திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலர் மூலம் அவமானப்படுத்தப்பட, கல்யாணத்தை நிறுத்திவிட்டு
இன்னொருவரை மணம் செய்கிறார். 

தி பேட்மேன்

ராபர்ட் பட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ள படம். இதில் கேட் வுமன் பாத்திரமும் வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் இது. 

தி லாஸ்ட் சிட்டி 

சாண்ட்ரா புல்லக் எழுத்தாளராக நடித்துள்ள படம். இதில் அவர் ஒரு நகரம் பற்றி புனைவாக நாவல் எழுதுகிறார். அதிலுள்ள விஷயங்களை உண்மை என நம்பி அவரையும் அவரது அட்டையில் மாடலாக இருக்கும் நபரையும் கடத்துகிறார்கள். டேனியல் ரெட்கிளிப்தான் சாண்ட்ரா புல்லக்கின் பணக்கார வாசகர். டிரெய்லர் பார்ப்பவர்களை வசீகரிக்கிறது. 


புல்லட் டிரெயின்

கொட்டாரோ இசாகா என்பவரின் அங்கத நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் இது. இதில் பிராட்பிட் கூலிக் கொலைகார ராக நடிக்கிறார். இவருடன் ஐந்து கூலிக் கொலைகாரர்கள் ரயிலில் பயணிக்கிறார்கள். கூடவே ஒரு பெண்ணும் வேறு இருக்கிறார். அப்புறம் என இதற்கு மேலா கதை வேண்டும்? 

டாப் கன் மேவரிக்

36 ஆண்டுகளுக்கு முன்னர், டாம் க்ரூஸ் நடித்து ஹிட்டான படம். இப்போது கடலில் நடப்பதாக கதையை மாற்றி எடுத்துவிட்டார்கள். 

தி அன்பியரபிள் வெய்ட் ஆப் மாஸிவ் டேலண்ட்

போதைப்பொருள் தலைவனை சிஐஏவுக்காக பணிபுரிபவர் எப்படி பிடிக்கிறார் என்பதுதான் கதை. நிக்கோலஸ் கேஜ்தான் நாயகன். 

 கருத்துகள்

பிரபலமான இடுகைகள்