அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உடனே தலைப்பை படித்தவுடனே சந்தோஷப்படவேண்டாம். இதற்கு காரணம், பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புதான். பலருக்கும் சம்பள வெட்டு, வேலையிழப்பு, தொழில் பாதிப்பு என அனைத்தும் இந்த தலைப்பின் பின்னால் உள்ளது. அதை நாம் விளக்கமாக பேசுவோம். மேற்படி அரசு பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார்கள் என்ற ஆய்வை 2021ஆம் ஆண்டிற்கான ஏஎஸ்இஆர் அறிக்கைதான் கூறியது. ஆறிலிருந்து 14 வயது வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதுமே குறைந்துள்ளது. 2018இல் 32.5 சதவீதமாக இருந்த தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 24.4 (2021) சதவீதமாக குறைந்துவிட்டது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சதவீதம் 64.3 சதவீதமாக இருந்து 70.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது புதிதானது அல்ல. இருந்தாலும் அதன் சதவீதம் பெருமளவு வேறுபடுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? தனியார் பள்ளிகளில் பெருந்தொற்று காலங்களில் படிப்பு ஏதும் சொல்லித்தரப்படுவதில்லை இப்படி சொல்பவர்களின் அளவு 40 சதவீதம். 62 சதவீதம் பேர் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசுப் பள்ளிக்கு மாறியிருக்கிறார்க். 15 சதவீதம் பேர் இடம்பெயர்தலை காரணமாக சொல்கிறார்கள். 50 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளில் வழங்கும் இலவச சலுகைகளை சொல்லுகிறார்கள். இது தற்காலிக நிலைமைதான். எதிர்காலத்தில் நோய்த்தொற்று குறைந்து, தொழில்கள் சீரானால் மீண்டும் வருமான நிலை பழைய நிலைமைக்கு வரலாம். அதற்கும் வாய்ப்புள்ளது. உத்தரப் பிரதேசம், கேரளத்தில் பள்ளியிலிருந்து வேறு பள்ளிகளுக்கு மாறுவது அதிகரித்துள்ளது. ஏஎஸ்இஆர் ஆய்வு 25 மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. மூன்று யூனியன் பிரதேசங்களும் இதில் அடக்கம். புகைப்படம் - வின்சென்ட்பால்

கருத்துகள்