இஸ்ரோவின் வரலாற்றில் ஜனவரி 10!

1962ஆம் ஆண்டு தி இந்தியன் நேஷனல் கமிட்டி ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் நிறுவனம், ஜவகர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது. பின்னாளில், இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் இதன் பெயர் இஸ்ரோ என மாற்றப்பட்டது. இப்படி மாற்றப்பட்ட ஆண்டு 1969. முதலில் இஸ்ரோவின் நோக்கம், செயற்கைக்கோள்களை ஏவி தகவல் தொடர்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது. பின்னாளில்தான் பல்வேறு ஆய்வுகளுக்காக விண்வெளியில் விண்கலன்களை ஏவத் தொடங்கியது. சந்திரயான், மங்கல்யான், ககன்யான் வரை இப்போது முன்னேறி வந்துள்ளது. ஜனவரி 10, 2017 அன்றுதான் விண்வெளியில் கேப்சூல் ஒன்றை அனுப்பி அதனை அங்கு பனிரெண்டு நாட்கள் வைத்திருந்துவிட்டு பின் பூமிக்கு திரும்ப வரச்செய்தனர். எஸ்ஆர்ஈ -1 என்ற விண்கல கேப்சூல் சோதனை மூலமே, விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்ற நம்பிக்கையை ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் பெற்ற வெற்றிதான். இனி எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கப்போகிறது. ஆனால் இஸ்ரோ இப்போது சீனாவின் ஆப்போ நிறுவனத்தோடு சேர்ந்து செய்யும் ஆய்வுகள், திகைப்பை ஏற்படுத்தியுள்ளன. நாவிக் எனும் தொழில்நுட்பத்தை இந்தியா சீன நிறுவனத்தோடு இணைந்து செயல்படுத்த உள்ளது. இதனைப் பற்றி வார இதழ்களிலும் தற்போது கட்டுரைகளை எழுத தொடங்கிவிட்டனர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்