அரசுத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுப்பாலினத்தவர்!
இந்தியாவைப் பொறுத்தவரை அறிவு இருந்தாலும் கூட அவர் என்ன பாலினம், என்ன சாதி என்பதைப் பொறுத்தே அவர் வாழ்க்கை முடிவு செய்யப்படுகிறது. இந்த தடைகளை தாண்டி சாதிக்க உங்களுக்கு முதுகெலும்பு எஃகால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் கேலி, கிண்டல், வசைகளை கடந்து வெல்ல முடியும். குறைந்தபட்சம் தற்கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியும். சமூக அழுத்தம் அந்தளவு மோசமாக மாறியிருக்கிறது. அதிலும் மாற்றுப்பாலினத்தவர் என்றால் நிலைமையை சொல்லவே முடியாது. அந்தளவு சிக்கலாக இருக்கும்.
அமிர்தாவுக்கு வயது 38. தற்போது திருவண்ணாமலையில் தட்டச்சராக இருக்கிறார். தனியார் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் வேலை பார்த்தவர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். அரசு தேர்வெழுதி இப்போது தட்டச்சராக தேர்வு பெற்று வேலை பார்த்து வருகிறார்.
இவரது குடும்பம் தினக்கூலிதான். குடும்பத்தில் மொத்தம் ஏழுபேர். அத்தனை பேரும் வறுமையால் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டார்கள். இதில் அமிர்தா மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பு படித்தவர். இதற்கும் அவர் வேலை செய்துதான் கல்வி கட்டணங்களை கட்டியிருக்கிறார். முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துவிட்டோமே, அமிர்தா மாற்றுப்பாலினத்தவர். இவர் பத்தாவது படிக்கும்போதே தனக்குள் நடந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார். அதனை அப்போதே வெளியே சொல்ல முடியவில்லை. இதனை பிறர் உணர்ந்துகொள்ள அதிக காலம் ஆகவில்லை. பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருந்த
மனோன்மணியம் என்பவரே அமிர்தாவுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இவரது அறிவுறுத்தல் உறுதுணை காரணமாக பள்ளியில் 10, 12இல் 90 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக டிஎன்பிஎஸ்பி தேர்வு எழுதி, அதில் வென்றிருக்கிறார் அமிர்தா. கிடைத்த அரசு வேலை, அவருக்கு நிம்மதியான வாழ்க்கையை தரவேண்டும்....
கருத்துகள்
கருத்துரையிடுக