இருமல் கூடுகிறது! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இல்லாமல் வாழ்வது பற்றி கணினி வல்லுநர் ஜாரோன் லேனியர் சில நூல்களை எழுதியிருக்கிறார். இதனை எனது சீட்டுக்கு அருகில் உட்கார்ந்து என்னை கிண்டல் செய்துகொண்டிருக்கும் ஓவியர் குழந்தை முருகன் கூறினார். தரவிறக்கிய இந்த நூல்களை விரைவில் படிக்க வேண்டும்.
சளி வந்தால் மூச்சுக்குழலில் உராயும்படி ஆக்ரோஷமாக மாறிவிடுகிறது. வேறுவழியின்றி அதனை வேகமாக வெளியேற்ற டாபர் ஹனிடஸ் வாங்கி குடித்தேன். நூறுமில்லி மருந்து ரூ.99க்கு விற்கிறார்கள். அலுவலகத்தில் வேலை பெரிதாக இல்லை. திங்கட்கிழமை இதழுக்கான வேலையை மட்டும் செய்தால் போதும். எழுத்தாளர் ஷோபா டே எழுதிய கட்டுரை நூலை படித்து வருகிறேன். தினசரி பத்து பக்கம் என்ற கணக்கில்தான் படிக்க முடிகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான்.
நன்றி சந்திப்போம்
அன்பரசு
2.11.2021
கருத்துகள்
கருத்துரையிடுக