ஜனவரி 10 - திரைப்பட விரும்பிகளுக்கான தினம்

சில படங்கள் வெளியாகும் போது அதன் தனித்துவம் தெரியும். அவை அப்போது வணிகரீதியாக வெற்றி பெறலாம். அல்லது தோற்றுப்போகலாம். ஆனால் அதனை காண்பவர்கள் மனதில் தனித்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனைப் பற்றி நண்பர் ஒருவர் சொன்னார். படத்தை நிறைய விஷயங்களை வைத்து அடர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். எனவே அதனை பலமுறை பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்போதுதான் அதிலுள்ள விஷயங்களை உள்வாங்க முடிகிறது என்றார்.
அப்படி ஜெர்மன் மொழியில் வந்த படம்தான் மெட்ரோபோலிஸ். அறிவியல் படங்களில் கிளாசிக் என திரைப்பட காதலர்களால் கொண்டாடப்படும் படம் இது. அமைதிப்பட காலத்தில் 2026இல் நடக்கும் படமாக உருவாக்கப்பட்டது. இதனை திரைக்கதை எழுதி உருவாக்கியவர்கள் ஃபிரிட்ஸ் லாங், அவரது மனைவி தியா வான் ஹார்பியூ. படம் நிறைய விஷயங்களால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. இது அனைவருக்கும் பிடித்த படமாக இல்லை. படத்தைப் பார்த்தவர்கள் பலரும் பீதியடைந்தவர்களாக திரையரங்கை விட்டு வெளியேறினார்கள். படத்தைப் பார்த்து வியந்து வசீகரிக்கப்பட்டவர்களின் ஹிட்லரின் சகாவான கோயபல்சும் ஒருவர். படத்தில் காட்டப்பட்ட இடங்களைப் பார்த்தவர். திரைப்பட இயக்குநர் லாங் தங்களது பிரசார படங்களை எடுத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என ஊடகங்களிடம் பேட்டியே கொடுத்தார். அதைப் பார்த்து மிரண்டுபோன இயக்குநர் லாங், ஜெர்மனியை விட்டு வெளியேறிவிட்டார். அன்று எப்படியோ, இன்று இந்தப்படம் திரைப்பட காதலர்களால் அதன் உருவாக்கத்திற்காகவும் கற்பனைக்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2012இல் சைட். அண்ட் சவுண்ட் பட்டியலில் 35 வது இடம் பிடித்தது. 2001ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகின் நினைவுகளில் வாழும் படம் என்ற அங்கீகாரமும் கிடைத்தது. இப்படி அங்கீகரிக்கப்பட்ட முதல் படம் இதுவே. டெல் மீ வொய் இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்