புனைவு ஏற்படுத்திய வலி! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்





எ மிராக்கிள் - துருக்கி தொடர் தமிழில்




 

புனைவு ஏற்படுத்திய வலி! 


25.11.2021

அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா?

அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் அறைக்கு வரும்போது மழை பிடித்துக்கொண்டது. இப்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது. அதன் பின்னணி இசையுடன்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். 

இன்றுதான் எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரின் இறுதி அத்தியாயத்தைப் பார்த்தேன். இந்த தொடர், தென்கொரியாவில் வெளியான குட் டாக்டர் என்ற டிவி தொடரைத் தழுவியது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்வி கற்ற இளைஞர், அறுவை சிகிச்சை வல்லுநராக மாற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. 

ஆட்டிசம் பாதிப்பு, இவர்களை எப்படி கையாள்வது, பெற்றோர் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், இவர்களின் அறிவுத்திறன், பிறருடன் உரையாடும்போது இவர்களை புரிந்துகொள்வது எப்படி என நிறைய விஷயங்களை காட்சிகளுக்கு இடையில் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற டிவி தொடர்களில் விருப்பமிருக்காது. முழுக்க வெளிவயமானவர். உள்வயமான எனக்கு கொரியத் தொடரை ரீமேக் செய்த துருக்கி தொடர் பிடித்திருந்தது. டாக்டர் அலி வெஃபா என்ற பாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பை மறக்கவே முடியாது. 

நிஜத்தில் இதுபோன்ற விஷயங்கள் சாத்தியமாகும் வாய்ப்பு குறைவு. புனைவாக இருந்தாலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற தொடர் நம்பிக்கை கொடுப்பதோடு, அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் பைத்தியம் என்று கூறி கேலி கிண்டல் செய்யாமல் இருப்பதும் காலப்போக்கில் நடக்கலாம். தன்னை வெறுப்பவர்களைக் கூட நண்பர்களாக மாற்றிக்கொள்ளும் குணம், எப்போதும் சவால்களை ஏற்றுக்கொண்டு செயல்படும் திறமை  அலி வேலை செய்யும் மருத்துவமனையையே சிறப்பான இடமாக மாற்றுகிறது. 

அவனைச்சுற்றியுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே அவனால் ஊக்கம் பெறுகிறார்கள். அதிகபட்சமாக அலியின் காதலைப் பார்த்து இன்னொரு பெண் தன்னுடைய கணவராக ஆட்டிச பாதிப்பு கொண்ட மருத்துவரை மணம் செய்துகொள்கிறாள். இறுதிப்பகுதியும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஆட்டிச குழந்தையை வளர்க்கும் சக உதவி ஆசிரியரான பா.கிக்கு இதைப்பற்றி சொன்னேன். என்னால் அந்த வலியைத் தாங்க முடியவில்லை என்று தொடரை பார்க்க மறுத்துவிட்டார். நிஜத்தில் அவர் படும் வலியை மீண்டும் காட்சிபடுத்தினால் எப்படித்தான் பார்க்க முடியும்? நான் அதற்குமேல் அவரை கட்டாயப் படுத்தவில்லை. 

நன்றி! சந்திப்போம்!

அன்பரசு

25.11.2021


எ மிராக்கிள் தொடரை தமிழில் பார்க்க...

https://www.mxplayer.in/show/watch-a-miracle-tamil-dubbed-series-online-fb2fbf5e47d8194ed3252f51996f8039



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்