இடுகைகள்

அண்ணாதுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களுக்கும், சமூகநலத்திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளதா?

படம்
            இலவசங்களும் மாநிலத்தின் பொருளாதாரமும் ! பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலத்தில் எடுப்பது தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையாக நடக்கிறது . யார் பதவிக்கு அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களே தலைவர்களாகிவிடுவார்கள் . இந்த வகையில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பகிரங்கமாக விற்கப்படுகிறது என்பதை நான் தனியாக சொல்லித் தெரியவேண்டியதில்லை . தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தவிப்பு சூரியக்கட்சிக்கும் , அதைவிட அதிகமாக இலைக்கட்சிக்கும் உள்ளது . இதன் விளைவாகவே தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது . இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிதியுதவி திட்டங்கள் நலத்திட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி அன்பளிப்புகளாகவே மாறிவிட்டன . பெண்களையும் மாணவிகளையும் குறிவைத்து வழங்கும் பல்வேறு இலவச பொருட்களை இப்படி கூறலாம் . நடப்பு ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி தமிழ்நாட்டின் கடன்தொகை 4.85 லட்சம் கோடியாக உள்ளது . அடிப்படைத் திட்டங்களுக்கும் , சுகாதாரங்களுக்கும் நிதியுதவி ஒதுக்ககி செலவிடவேண்டிய நேரத்தில் வீட்டு பயன்பாட்டு பொருட்களை தருகிறோம் . கேஸ் சிலிண்டர்களை கூடுதலாக விலையின்றி