இடுகைகள்

கோடாரி மனிதன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோடாரியால் மண்டையை பிளந்து கொலை.. கொலைக்கு முன்னரே குறியீட்டுச் செய்தி - கோடாரி மனிதன்

படம்
  கோடாரி மனிதன்   தெலுங்கு படங்களில் அதிகம் பயன்படுத்தும் பொருள் என்ன? பன்ச் டயலாக்குகள் அல்ல. கோடாரி. சிங்கமுகம், சூரியன் என விதவிதமான உருவங்கள் பொறித்த கோடாரிகளை பயன்படுத்தி நல்நோக்கமில்லார்களை நாயகன் வெட்டுவார். அவரும் வெட்டப்படுவார். அதேபோல ஒரு கோடாரி கிரைம் கதைதான் இது. ஆனால் இறுதியாக யார் அந்த கோடாரி மனிதன் என்பதை கண்டறிய முடியவில்லை. 1918ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவரான ஜோசப் மேகியோ கொலை செய்யப்பட்டார். மேகியோ மட்டுமல்ல, கூடவே அவரது மனைவியும் தலையில் கோடாரியால் வெட்டப்பட்டிருந்தனர். இருவரின் குரல்வளைகளும் அறுக்கப்பட்டிருந்தது மேகியோவின் சகோதரர்கள் கொலைக்கு காரணம் என்று காவல்துறை சந்தேகப்பட்டாலும் பின்னாளில் அவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். மேகியோ வீட்டைவிட்டு சில மீட்டர் தூரத்தில் நடைபாதையில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதில் ‘’திருமதி மேகியோ, இன்று திருமதி டோனி போலவே அமர்ந்திருக்கப் போகிறார்’’ என எழுதியிருந்தது.    1911ஆம் ஆண்டு கோடாரியால் வெட்டப்பட்டு மேகியோ கொல்லப்பட்டது போலவே நிறைய கொல